tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருப்புகழ்

கந்தர் அனுபூதி

கந்தர் அலங்காரம்

கந்தர் அந்தாதி

திருவகுப்பு -

தேவேந்திர சங்க வகுப்பு,

வேல் வகுப்பு,

திருவேளைக்காரன் வகுப்பு, கடைக்கணியல் வகுப்பு,

வீரவாள் வகுப்பு,

மயில் விருத்தம்,

வேல் விருத்தம்,

திருஎழுகூற்றிருக்கை

திருப்புகழ் பெருமைகள்:

    “திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்” என்று சொல்வார்கள். வாய் மட்டுமா மணக்கும்? நம் உள்ளமும் சேர்ந்து மணக்குமே?

இதில் 1,088 க்கும் மேற்பட்ட சந்த வகைகள் இருக்கின்றன என்று ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள்.

முருகன் மீது தீவிரமான பக்தி கொண்டவர்கள் இதைத் தினமும் ஓதுவார்கள்.

    நாம் எல்லாவற்றையும் படிப்பது என்றால் இந்த ஒரு பிறவி போதாது. திருப்புகழில் முக்கியமான திருப்புகழ் பாடல்களை மட்டும் எடுத்துக் கொண்டு, நமக்கு என்ன தேவையோ அதற்கேற்ற மாதிரிப் பாராயணம் தினமும் மனம் ஒன்றிச் செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் கிடைக்கும். இப்போது முதலில் திருமணம் ஆகாமல் எத்தனையோ பேர் அவதிப்படுகிறார்கள்? அவர்களுக்கு இந்தக் கீழ்க்கண்ட இரண்டு திருப்புகழ் பாடல்கள் கட்டாயம் உதவியாக இருக்கும். இது திருச்செந்தூர் ஸ்தலத்துப் பாடல்.

பாடல் 1:

“விறல்மார னைந்து மலர்வாளி சிந்த

     மிகவானி லிந்து ...... வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற

     வினைமாதர் தந்தம் ...... வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட

     கொடிதான துன்ப ...... மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து

     குறைதீர வந்து ...... குறுகாயோ

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து

     வழிபாடு தந்த ...... மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச

     வடிவேலெ றிந்த ...... அதிதீரா

அறிவால றிந்து நிருதாளி றைஞ்சு

     மடியாரி டைஞ்சல் ...... களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து

     அலைவாயு கந்த ...... பெருமாளே.

இதன் பொருள்:

   வீரனாம் மன்மதன் ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த, ஆகாயத்தில் நிலவு அதிகமாக

வெயில் போலக் காய, நிதானமான தென்றல் காற்று வந்து தீப்போல வீசிப் பொருந்த, வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம் வசை மொழிகளைக் கூற, குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும்

வள்ளி போன்ற) பேதைப் பெண்ணாகிய நான் அடைந்த கொடிய துன்ப விரக மயக்கம் தீர, குளிர்ந்த மாலைப் பொழுதினிலே நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து என் குறையைத் தீர்க்க வந்து அணுகமாட்டாயா? இள மானை உகந்து ஏந்தும்

இறைவன் சிவபிரான் (உன் உபதேசம் பெற்று)

மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே, கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்) வீழ்ந்து படவும், அலைகடல் கொந்தளித்து அஞ்சவும், கூரிய வேலை வீசிய அதி தீரனே, அறிவு கொண்டு உன்னை அறிந்து, உனது இரு தாள்களையும் வணங்கும் அடியார்களின் துயரைக் களைபவனே, அழகிய செம்பொன் மயில்மீது அமர்ந்து திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும்

பெருமாளே!

பாடல் -2:

நீலங்கொள் மேகத்தின் …… மயில்மீதே

நீவந்த வாழ்வைக்கண் …… டதனாலே

மால்கொண்ட பேதைக்குன் …… மணநாறும்

மார்தங்கு தாரைத்தந் …… தருள்வாயே

வேல்கொண்டு வேலைப்பண் …… டெறிவோனே

வீரங்கொள் சூரர்க்குங் …… குலகாலா

நாலந்த வேதத்தின் …… பொருளோனே

நானென்று மார்தட்டும் …… பெருமாளே.

பொருள்:

    நீல நிறத்தைக் கொண்ட

மேகத்தைப் போன்ற மயில் மேலே நீ

எழுந்தருளிவந்த புறப்பாட்டுத் தரிசனத்தைக் கண்ட காரணத்தால் உன் மீது ஆசை

கொண்ட இந்தப் பெண்ணுக்கு, உனது நறுமணம் மிக்க மார்பில் தங்கி விளங்கும் மாலையைத் தந்து அருள்புரிவாயாக. உன்

வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி செலுத்தியவனே, வீரம் மிக்க சூரர்களின் குலத்துக்கே யமனாக விளங்கியவனே, ரிக், யஜூர், சாம,அதர்வண என்ற நான்கு அழகிய வேதங்களின் பொருளாக

விளங்கியவனே, எல்லா உயிர்களுக்கு உள்ளும் இருப்பவன் நான்தான் என்று பெருமை பாராட்டி மார்பினைத்

தட்டிக் கொள்ளும் பெருமாளே!!

     மேலே கண்ட இரண்டு பாடல்களையும் தினமும் பாராயணம் செய்து வரலாம். அல்லது இதில் ஏதாவது ஒன்றைக் கூடப் பாராயணம் செய்து வரலாம். கைமேல் பலன் கிடைக்கும். ஆனால் முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்ய வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க