tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்

 

வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்

 

அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்

 

கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே

 

 

சுந்தரி - அழகில் சிறந்தவளே

 

எந்தை துணைவி - என் தந்தையாகிய சிவபெருமானின் துணைவியே

 

என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி - என்னை தொடர்ந்து வரும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய். இங்கே பட்டர் எதனால் பாசத்தொடர் என குறிப்பிடுகிறார் என்றால் முதலில் குழந்தைக்கு தனது தாய் தந்தையின் மீது பாசம் ஏற்படுகிறது, பின்னர் சகோதர சகோதரிகளிடம் பாசம் ஏற்படுகிறது, மனைவி மீது பாசம் ஏற்படுகிறது, தான் பெற்ற குழந்தைகளின் மீது பாசம் ஏற்படுகிறது, அவர்களுக்கு திருமணமான பின்னர் பேரப்பிள்ளைகளின் மீது பாசம் ஏற்படுகின்றது. இவ்வாராக பாசம் மாறி மாறி தொடர்ந்து வருவதால் இதனை பாசத்தொடர் என்று சொல்லுகிறார்.

 

சிந்துர வண்ணத்தினாள் - சிந்துரம் போன்ற சிவந்த மேனியைக் கொண்டவளே

 

 மகிடன் தலைமேல் அந்தரி - ராஜஸம், தாமசம், சாத்வீகம் என்று சொல்லக்கூடிய விரைந்து செயல்படுதல், தாமதமாக செயல்படுதல், இரண்டிற்கும் நடுத்தரமான செயல்படுதல் என மூன்று குணங்கள் மனிதர்களுக்கு உண்டு. அந்த குணங்களிலே தாமசத்தை தனதாக்கி கொண்ட (எருமை வாகனம்) மகிஷாசுரனின் தலை மேல் நின்று அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; துர்க்கையே. இதன் உட்கருத்து துர்கா பரமேஸ்வரியை வணங்குபவர்களுக்கு தாமச குணமானது நீங்கி ராஜஸ குணமானது கை வரப்பெறும்

 

நீலி - நீல நிற மேனியைக் கொண்டவளே. கடல் மற்றும் வானத்தின் நிறமானது நீல நிறமாக தோன்றும் ஆனால், உண்மையில் அது நீல நிறமானது அன்று. அதனால்தான் ஏமாற்றுபவர்களை நீலி கண்ணீர் வடிக்காதே என்று சொல்லுவது வழக்கமாக இருக்கிறது. அம்பாள் ஆக்ரோஷமான தோற்றம் உடைவளாக இருந்து கருணை உள்ளம் கொண்டவள்.

 

அழியாத கன்னிகை - இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே

 

ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் - வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே. சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை மாற்றுவதற்காக பிரம்ம கபாலத்தை தன் கையில் ஏந்தி நிற்பவள். இன்று கூட பராசக்தியின் அம்சமாக விளங்கக்கூடிய அங்காளம்மன் ஆலயத்தில் பிரம்ம கபாலத்தில் விபூதி வைத்து அதிலிருந்து விபூதி எடுத்து மந்திரித்து கொடுப்பது வழக்கமாக இருக்கிறது.

 

மலர்த்தாள் என் கருத்தனவே - உன்னுடைய திருவடிகள் என்னும் தாமரை மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன.

 

எந்தையாகிய சிவனுக்கு துணையாக இருக்கக்கூடிய அழகியே. எனது பாசங்களை அறுக்க கூடியவளே, எருமை வாகனமாக இருக்கக்கூடிய மகிஷாசுரன் என்று சொல்லக்கூடிய தாமத குணத்தை அழித்து உயர்ந்த குணத்தை அளிக்க வல்லவளே, நீலியே, வேதங்களுக்கு அதிபதியான பிரம்மனின் தலையை அதாவது பிரம்ம கபாலத்தை சிவனது கையில் இருந்து விடுவித்து மகிழ்வித்தவளே உனது இரு தாமரை திருவடிகளும் என் சிரசின் மீது இருக்க வேண்டுகிறார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க