tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

துணையும்தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்*

 

 *பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனி மலர்ப் பூங்*

 

*கணையும், கருப்புச் சிலையும், மென்பாசாங்குசமும், கையில்*

 

*அணையும், திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே!*

 

சென்ற பாடலிலே 'விழுத் துணையே' என்று அபிராமி பட்டர் முடித்திருப்பார். அதென்ன 'விழுத் துணை'/  

விழு என்றால் சிறந்த என்றும் பொருள் உண்டு. 

 'கேடில் விழு செல்வம் (சிறந்த செல்வம்) கல்வி ஒருவர்க்கு - திருக்குறள்

 

'கேழில் 'விழு பொருள்'கள் (ஒப்பற்ற பரம்பொருளை) பாடினோம் கேட்டிலையோ? - திருவெம்பாவை - மாணிக்கவாசகர். 

 

துணை என்பது வாழ்வில் ஒவ்வொருவருக்கும் அவசியமானது. நண்பன், மனைவி, உறவு போன்றவை துணைகள்தான். ஆனால், அவை எப்போதும் துணையாக இருக்காது. நமக்கு வெய்யிலில் துணையாக இருக்கும் செருப்பு நமது வீட்டின் உள்ளே துணையாக வராது. மழைக்கு துணையாக வரும் குடை மற்ற நேரங்களில் துணையாக வராது. ஆனால், விழுத் துணையாக உள்ள பரப்பொருள் நமக்கு, கால அளவீடு, இட அளவீடு, எல்லை அளவீடு இல்லாமல் நமக்கு துணையாக வரும். நமக்கு ஒரு ஆபத்து என்றால் எந்த காலத்திலும், எந்த இடத்திலிருந்தும், எந்த நாட்டிலிருந்தும் நமது கடவுளை பிரார்த்தனை செய்ய முடியும். 

 

துணையும் - அனைத்து ஜீவராசிகளுக்கும் துணையாகவும் 

தொழும் தெய்வமும் - அனைவராலும் தொழப்படும் தெய்வமாகவும் 

பெற்ற தாயும் - சகல ஜீவன்களுக்கும் அன்னையாகவும் 

சுருதிகளின் - நான்கு மறைகளுக்கும் 

பணையும், கொழுந்தும் - கிளையாகவும், 

 பதிகொண்ட வேரும் - ஆழ்ந்து பதிந்து இருக்க கூடிய வேறாகவும் 

பனி மலர்ப் பூங்கணையும் - குளிர்ந்த மலர் அம்புகளையும் 

கருப்புச் சிலையும் - கரும்பு வில்லும் (சிலை - வில்)

மென் பாசாங்குசமும் - மென்மையான பாசம் - அங்குசம் போன்ற ஆயுதங்களை 

கையில் அணையும் - நான்கு திருக்கரங்களில் தாங்கியிருக்கும் 

திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே! - மூவுலகங்களுக்கும் தேவியாக உள்ள திரிபுரசுந்தரி என்பதை அறிந்துகொண்டேன் 

குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கையில் ஏந்தியிருக்கும் அன்னை திரிபுர சுந்தரி, வேதங்களின் வேராகவும், கிளைகளாகவும், இலைகளாகவும் இருக்கிறாள். அவளே என் துணையாகவும் நான் தொழும் தெய்வமாகவும் என்னைப் பெற்ற தாயாகவும் இருக்கிறாள் என்பதை நான் அறிந்து கொண்டேன்.

 

இந்த பாடலில் அம்பாள் நமக்கு துணையாக, ஆபத்திலிருந்து காப்பவளாக இருப்பது தெளிவாகிறது

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க