tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

திருமாலிரும் சோலை அழகர் கோவிலில் தினமும் இரவு அர்த்த ஜாம ஆராதனம் முடித்து விட்டு திருமலையாண்டான் ஸ்வாமி தன் திருமாளிகைக்கு செல்லும் போது அவருக்கு வயதாகி கண்பார்வை மங்கியதால் ஒரு கைங்கரியபரர் திருவடி பந்தம் பிடித்துக் கொண்டு அவருக்கு முன்னாள் வழிகாட்டி கொண்டு செல்லுவார். 

 

அதாவது திருவடிபிச்சன் அவர் பெயர் சுந்தர்ராஜன் என்பது காரணம். அந்தகாலம் சோலைக்கு செல்லும் வழி முழுவதும் பொதுவாகவே இருட்டாக தான் இருக்கும் அதுவும் திருமாலிருஞ்சோலை வழி ஒரே வனாந்திரபகுதி.

 

மரம் அடர்த்தியாக இருப்பதால் ஒரே இருட்டாகவும் இருக்கும். தன் கண்பார்வை மங்கியதால் வழி காட்ட திருவடிபிச்சன் வைத்திருந்தார் திருமலையாண்டான்

 

இப்படி ஒருநாள் பகவத் ஆராதன கைங்கர்யம் முடித்து அர்த்தஜாம ஆராதனமும் முடித்து விட்டு தன் திருமாளிகை செல்ல ஆயத்தமானபோது திருவடிபந்தம் பிடிக்கும் சிஷ்யனை காணவில்லை

(அக்காலத்தில் தன் கைங்கர்யம் செய்யும் அடியார்களை சிஷ்யனாக வரிப்பது வழக்கம்)

 

திருமலையாண்டான் திருவடி பந்தம் பிடிக்கும் அந்த சிஷ்யன் பெயரை ஒரு முறைக்கு இருமுறை

"சுந்தரராஜா" - ன்னு அழைத்தார்.

 

உடனே கையில் திருவடி பந்தத்துடன் வந்து

"ஸ்வாமின் அடியேன்" என்று சொல்லி அவருக்கு முன்னாள் சென்று வழிகாட்டி சென்றபடியே திருமலையாண்டான் திருமாளிகை வந்த உடன் அவரிடம் ஸ்வாமின் "அடியேன் திரும்பி செல்ல நியமம் வாங்கிக்கின்றேன்" என்று சொல்லி திரும்பிவிட்டார்

 

மறுநாள் அதிகாலை திருவடி பந்தம் பிடிக்கும் திருவடிபிச்சான் சுந்தரராஜன் திருமலையாண்டான் திருமாளிகைக்கு வந்து அவரை சேவித்து "ஸ்வாமின் அடியேன் தெரியாமல் உமக்கு திருவடிபந்தம் பிடிக்கும் கைங்கர்யத்தில் நேற்று அபச்சார பட்டுவிட்டேன்" என கூற திருமலையாண்டான் "என்னடா சொல்லுறே? என்ன அபச்சாரம் பண்ணேன்னு"? கேட்க 

 

"ஸ்வாமி நேற்று மாலை உடல் அசதியால் மாலையில் இருந்து இரவு வரை நன்கு தூங்கி விட்டேன் அதனால் எப்போதும் தேவரீருக்கு திருவடி பந்தம் பிடித்து வழிகாட்டும் கைங்கர்யத்துக்கு நேற்று வர முடியவில்லை." 

"ஸ்வாமின் தேவரீர் நேற்று வனாந்திர இருட்டில் விளக்கு இல்லாமல் எப்பிடி இந்த திருமாளிகைக்கு எழுந்தருளினீர்" என கேட்க திருமலையாண்டான் "என்னடா புத்தி மங்கிவிட்டதா நீதானே நேற்றும் எப்போதும் போல் எனக்கு திருவடிபந்தம் பிடித்து வந்து இங்கே என்னை விட்டு விட்டு நியமம் பெற்று போனாய்" - என்று சொல்ல "ஸ்வாமி அடியேன் வரவேயில்லை" என்று சுந்தர்ராஜன் மறுக்க

 

அப்போதுதான் முதலியாண்டானுக்கு தெரிந்தது நேற்று பந்தம் பிடித்து வந்தவன் தன் சிஷ்யனான இந்த சுந்தர்ராஜன் அல்ல சாட்சாத் ஆதிமூலமான அந்த சுந்தர்ராஜனே என உணர்ந்து உடனே திருமாலிருந்சோலை சென்று "ஸ்வாமியே தேவரீரே நேற்று திருவடி பந்தம் பிடிப்பவனாக வந்து இந்த அடியவனைக்கு நீரா வழி காட்டினீர்..." என அழகர் திருவடிகளை பிடித்து கொண்டு கதறி அழுதாராம் 

 

திருமலையாண்டான் சுந்தர்ராஜனான அந்த அழகர் திருவடிபந்தம் பிடித்து தன்னையும் சிஷ்யனாகவே பாவித்து கைங்கர்யம் செய்த உண்மை தெரிந்ததும் திருமாலையாண்டான் திருமாலிருஞ்சோலை அழகரின் சௌலப்பியத்தை நினைத்து ஆனந்த கண்ணீர் மல்க அவனை அன்று ஆனந்தமாக ஆராதித்தாராம்

 

சிஷ்யனாக வந்து திருவடிபந்த சேவை செய்ததால் திருமலையாண்டான் பரமபதித்ததும் அவருக்கான இறுதி காரியங்களை அழகர் தம் பரிவாங்களை கொண்டு அர்ச்சக பரிசாரக முகேனமாக செய்கிறார்

 

திருமலையாண்டான் பரமபதித்த நன்னாள் ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி

 

அதனால் தான் அழகர் வருடாவருடம் அந்நாளில் திருமாலிருஞ்சோலை மலைக்கு சென்று எண்ணெய் குளியல் செய்கிறார்

 

அழகர் வருடம் இரண்டு முறை நூபுரகங்கைக்கு வருவார்

 

ஒன்று ஆடிமாதம் அழகரின் வருடாந்திர பிரம்மோச்சவத்திற்க்கு

 

மற்றொன்று ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசியான திருமலையாண்டான் பரம்பதித்த நாளன்று

 

கலியுகத்தில் பகவான் மனிதரூபமாகவே வந்து கைங்கர்யம் செய்வான் எனவே அபிமானிகளே ஆபத்தில் உங்களுக்கு யாரேனும் உதவினால் அவர் உங்களூர் பெருமாளாகவே கூட இருக்கலாம்

எனவே யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள்

 

திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால்

திருமால்சென்று சேர்விடம் தென்திருப் பேரே.

 

 

அழகர் திருவடிகளே சரணம் சரணம் .

ப.சரவணன்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க