tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.

 

தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

 

ஆடியில் பூத்த அரும்பு:  

 

வைணவத்திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆடி மாதத்தில் துளசி தோட்டத்தில் ஆண்டாள் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை அம்மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர். இந்த நாளில் இக்கோயிலுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது. எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். அந்த அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்.

 

கவிதா சரவணன்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க