tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

🌹 🌿 #ஆன்மீக_தகவல்கள் 🌿🌹

 

🌹 🌿 வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத்தாழ்வுக்கு இடமாக்குவாள். 

 

🌹 🌿 தீபத்தின் ஜூவாலை கிழக்குமுகமாக இருந்தால் சர்வபீஷ்டங்களும் ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும். வடகிழக்கு முகமானால் ஷேமலாபமுண்டாகும். 

 

🌹 🌿 மேல் நோக்கி நெடிதாயெரியும் ஜூவாலை ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும். 

 

🌹 🌿 சக்தி, திறமை, வீர்யம் இவற்றைச் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி என்றும் மாறா இளமையுடன் திகழ்வது சூரியன். சூரிய வழிபாடு கர்மவினைகளையும், நாகதோஷம் முதலியவற்றையும் பிற சோதிடரீதியான தோஷங்களையும் நீக்கும். 

 

🌹 🌿 சூரிய வழிபாடு கண்பார்வை விருத்திக்கும், இரத்த விருத்திக்கும் உகந்ததென விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. உடலில் சூரியஒளி படுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ஆயுள் கூடும். விற்றமின் டி சூரியனின் ஒளியில் உண்டு. இதனால்தான் மேலைநாட்டவர் சூரிய குளிப்பு செய்கின்றனர். 

 

🌹 🌿 குழந்தைகள் பிறந்தபின் ஜாதகர்மம், நாமகரணம் என்பவற்றின் போது உபநிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை சூரிய வெளிச்சம் படும்படி முதன்முதல் வீட்குக்கு வெளியே கொண்டுவருதல் உண்டு. உடல்முழுதும் நல்லெண்ணய் பூசி வெற்றுடம்புடன் இளவெயிலில் கிடத்துதலும் குறிப்பிடத்தக்கது. 

 

🌹 🌿 இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும். 

 

🌹 🌿 வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மெதுவாக அணைத்து விடலாம். வீசி அணைத்தலும் ஊடுபற்றி எரிய விடுதலும் ஆகாது. 

 

🌹 🌿 அரசமரம் வழிபாட்டுக்கு உகந்ததெனினும் சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும் தொட்டு வணங்குவதும் செய்யலாம். அந்நாளில் மட்டுமே லஷ்மி நாராயணரின் பிரசன்னம் அங்கு இருக்கும். மற்ற நாட்களில் தொடக் கூடாது. 

 

🌹 🌿 சமுத்திர ஸ்நானம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்யலாம்.

 

🌹 🌿 மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.

 

🌹 🌿 திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

 

🌹 🌿 அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது

 

🌹 🌿 கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.

 

🌹 🌿 எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

 

🌹 🌿 சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

 

🌹 🌿 சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது

 

🌹 🌿 இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.

 

🌹 🌿 நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.

 

🌹 🌿 திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

 

🌹 🌿 ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

 

🌹 🌿 கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.

 

🌹 🌿 குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது

 

🌹 🌿 விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.

 

🌹 🌿 பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.

 

🌹 🌿 செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல்,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.

 

🌹 🌿 இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம.

 

🌹 🌿 வெளியில் செல்லும் பொழுது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில நாணயங்களை பூமியில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு செல்ல, அந்த ஆத்மவினால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் ஏற்படாமல் இருக்கும்.

 

🌹 🌿 வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.

 

🌹 🌿 கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.🙏💐🌹ஹனுமன் ஆர் கே சாமி🙏💐🌹

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க