tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

[19:38, 10/18/2024] Tamilnadu Epaper: உப்பிலியப்பன் கோயில்  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் மாநகராட்சியில் அமைந்து இருக்கும் ஒரு வைணவக் கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். சோழ நாட்டு பதிமூன்றாவது திருத்தலம். இக்கோயில் தென்திருப்பதி என்று சிறப்பு பெற்ற கோயிலாகும்.
பெயர்க்காரணம்
உப்பிலியப்பன் கோயிலில் நடந்துகொண்டிருக்கும் யானையும் யானை பாகனும்
•    திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன்.
•    ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவிற்று.[2] இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது.
•    பூமாதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரபேருந்து வசதி உள்ளது.
அருகில் அமைந்த கோயில்
•    திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் (2 கி.மீ.)
கோவில் தனிச்சிறப்புக்கள் :
* தனி சுப்ரபாதம் பாடப்படும் கோவில்
* உப்பில்லா நிவேதனம் அளிக்கப்படும் ஒரே கோவில்
* பெருமாளுக்கு வலப்புறத்தில் வீற்றிருக்கும் தாயார்
கோவில் பற்றிய விபரம் :
மூலவர்: ஒப்பிலியப்பன் (திருவிண்ணகரப்பன்)
உற்சவர்: பொன்னப்பன்
தாயார்: பூமாதேவி
தீர்த்தம்: அஹோத்ர புஷ்கரிணி
கோலம் : நின்ற திருக்கோலம்
ஸ்ரீ சாரங்கபாணி சுவாமி கோவில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் - 108 திவ்ய தேசங்கள் 12வது கோவில்

தல வரலாறு
மகாவிஷ்ணுவை அடைய வேண்டும் என துளசி தவம் இருந்தாள். அவளது தவத்தை ஏற்ற பெருமாள், திருவிண்ணகரத்தில் துளசி மாடம் அருகே மகாலட்சுமி குழந்தையாக அவதரிப்பாள் என வரமளித்தார். இந்த தலத்தில் துளசியும் தோன்றினாள். இந்த சமயத்தில் மிருகண்டு மகரிஷியின் மகன் மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று தவமிருந்தார். அப்போது பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசி செடி அருகே இருப்பதைக் கண்டார்.
லட்சுமியின் அம்சமாக குழந்தை இருப்பதால், குழந்தைக்கு திருத்துழாய் (துளசி) என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அப்பெண் பருவ வயதை அடைந்ததும், திருமால் ஒரு முதியவர் வேடம் தாங்கி, முனிவரிடம் பெண் கேட்டார். அப்போது மார்க்கண்டேய மகரிஷி, சிறிய பெண் என்பதால் தன் மகளுக்கு, உணவில் சரியாக உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாது என்று கூறுகிறார். உப்பில்லாத சமையலாக இருந்தாலும் அதை ஏற்க தயாராக இருப்பதாக திருமால் கூறியதால் அவருக்கு பெண் கொடுக்க சம்மதம் தெரிவித்தார் மார்கண்டேய மகரிஷி
வந்திருப்பது திருமால் என்பதை ஞான திருஷ்டியில் அறிந்த முனிவர், மகளை திருமாலுக்கு மணமுடித்துக் கொடுத்தார். உப்பில்லாத உணவை உண்பதற்கு ஒப்புக் கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமை உடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் பெருமாள் அழைக்கப்படுகிறார். துளசிதேவியும் அவரது மார்பில் துளசி மாலையாக நிரந்தரமாக தங்கினார். இதனால் அனைத்து பெருமாள் கோவில்களிலும் பெருமாளுக்கு துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோவில், ஆதனூர், தஞ்சாவூர் மாவட்டம் - 108 திவ்ய தேசம் 11வது கோவில்

திருவோண நட்சத்திரம்
மார்க்கண்டேய மகரிஷியிடம் பெண் கேட்டு, திருமால் வந்தது பங்குனி மாத திருவோண தினம் ஆகும். திருமணம் நடைபெற்றது ஐப்பசி மாத திருவோண தினம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாத திருவோண தினத்தில் திருமால் சந்நிதியில் அகண்ட தீபம், வால் தீபம் ஏற்றப்படுகிறது. ஆவணி திருவோண தினத்தில் காலையில் கருட வாகனத்தில் எழுந்தருளி (உதய கருட சேவை), நாட்டாறு தீர்த்தத்தில் (தட்சிண கங்கை) நீராடுகிறார். ஒருபோதும் தன் மகளை விட்டுப் பிரியக் கூடாது என்று மார்க்கண்டேய மகரிஷி, திருமாலை கேட்டுக் கொண்டதால், பெருமாள் பிராட்டியை பிரியாமல் இருப்பார். அவருடன் இணைந்து பவனி வருவது இன்றும் நடைபெறுகிறது.

பிரார்த்தனை
இக்கோவிலில் வேண்டிக் கொண்டால் தம்பதியருக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும். சகிப்புத்தன்மை கூடும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வித்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

அனுப்புநர்
ஆர். மாலதி
பெருங்களத்தூர்
சென்னை 600 063

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க