tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி வட்டம் மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இங்கு, சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரர் பாடி, பாடல் பெற்ற பிரசித்தி வாய்ந்த அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது
அவிநாசி அவிநாசியப்பர் கோயில் (திருப்புக்கொளியூர்) என்பது பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம், திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.இத்தலத்தில் முதலையுண்ட பாலகனை, சுந்தரர் பதிகம் பாடி மீட்டார் என்பது தொன்நம்பிக்கை.
புராண பெயர்(கள்):
திருப்புக்கொளியூர்அவிநாசி, திருஅவிநாசி
பெயர்:
அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:
அவிநாசி
மாவட்டம்:
திருப்பூர்
மாநிலம்:
தமிழ்நாடு
நாடு:
 இந்தியா
மூலவர்:
அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்)
தாயார்:
கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி
தல விருட்சம்:
பாதிரிமரம்
தீர்த்தம்:
காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம்.
சிறப்பு திருவிழாக்கள்:
முதலை வாய்ப் பிள்ளை உற்சவம், பிரதோசம், சிவராத்திரி, திருவாதிரை
பாடல் வகை:
தேவாரம்
பாடியவர்கள்:
சுந்தரர்
அவினாசியப்பருக்கு வலது புறம் அம்பாளின் கோயில் உள்ளது, பொதுவாக மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பு ஆகும். இக்கோவிலின் தேர்த்திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இத்தேர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகும். மேலும் இத்தேர் இதன் சிற்ப வேலைகளுக்காகப் பெயர் பெற்றது.
தல வரலாறு
தொகு
நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரர் அவிநாசிக்கு வந்த போது ஒரே தெருவின் எதிர் எதிர் வீடுகளில் ஒன்றில் பூணூல் கல்யாணமும், மற்றொன்றில் மகனை முதலை சென்றமைக்காக வருத்தமுடனும் இருந்தார்கள். அவனுக்கும் தற்போது பூணூல் கல்யாணம் நடக்கும் சிறுவனுக்கும் ஒத்த வயதே ஆகிறது. அதனை அறிந்த சுந்தரர். இச்சிவாலயத்திற்கு வந்து சிவபெருமானை பிராத்தனை செய்தார். அதனால் மூன்று வருடங்களுக்கு முன்பு முதலை விழுங்கிய சிறுவன் வளர்ந்த நிலையில் பெற்றோர்களுக்கு கிடைத்தான். இந்த தொன்மம் இத்தலத்தில் நடந்தமையால் சிறப்பு பெற்று இருக்கிறது.
இந்த நிகழ்வினை முதலை வாய்ப் பிள்ளை உற்சவம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இவ்விழா பங்குனி உத்தரத்தின் மூன்றாவது நாளன்று இக்கோயிலில் நடைபெறுகிறது.

இத்தலத்தில் உள்ள இறைவனை பிரம்மா நூறு ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் எனும் வெள்ளையானை 12 ஆண்டுகளும், தாடகை மூன்று ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபட்டுள்ளனர்.
சன்னதிகள்
தொகு
இத்தலத்தின் மூலவர் அவிநாசியப்பர். இவர் சுயம்பு லிங்கமாவார்.அம்பிகை கருணாம்பிகையின் சந்நிதி மூலவரின் வலதுபுறத்தில் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் உள்ளது. இத்தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர். இதனால் விச ஜந்துக்களின் தொல்லைகள் வராது என்பது நம்பிக்கை. விச ஜந்துக்கள் கனவிலோ, நேரிலோ வந்து பயம் கொள்ள வைக்காது.
இழந்ததை மீண்டும் பெற்றுதரும் தலமாகவும், தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் தலமாகவும் இருந்து வரும் திருப்பூர் - அவநாசி சாலையில் அமைந்திருக்கும் அவநாசி லிங்கேஸ்வரர் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. முதலையுண்ட பாலகனை தேவார பதிகம் பாடி மீட்ட தலமாக அமைந்துள்ளது.
தேவார திருத்தலங்களுள் அவிநாசி அப்பர் கோயிலும் ஒன்றாகும். சுந்தரர் தேவாரப் பாடலை பாடியது இந்த கோயிலில் தான் என்று கூறப்படுகிறது. திறமையான நிர்வாகத்தை நடத்துவதற்கான அருளை, இந்த அவிநாசியப்பர் அருளுவதாக நம்பப்படுகிறது.
முதலையுண்ட ஒரு பாலகனை, 63 நாயன்மார்களின் ஒருவரான சுந்தரர் தேவார பதிகம் பாடி மீட்ட தலமாக வரலாறு கூறுகிறது. எனவே இங்கு சென்று வழிபாடு நடத்தினால் நாம் இழந்ததையெல்லாம் திரும்ப பெறலாம் என்பது இந்த கோயிலின் ஐதீகமாக உள்ளது.

இங்குள்ள தலவிருட்சமான பாதிரிமரம், பிரம்மோற்சவ காலங்களில் மட்டுமே பூக்கிறது. மற்ற காலங்களில பூக்காமல் இருப்பது அதிசயமா நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

தோல் தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் இந்த கோயிலை சுற்றி வலம் வரும்போது சுவற்றில் கை வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால் அவை நீங்கும் என கூறப்படுகிறது.
அதே போல் தீமைகள், நவகிரக தோஷங்களும், திருமணத்தடை நீங்கவும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கவும், கருணாம்பாளுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என நம்பப்படுகிறது.
கொங்குநாட்டுத் திருத்தேர்களில் அவிநாசித் தேரே அளவில் பெரியதாகும். அவிநாசியில் சித்திரைப் பெருந்திருவிழாத் தேரோட்டம் இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 அவிநாசியப்பர் திருக்கோயிலில் நாள் வழிபாடுகளும் சிறப்பு நாள் வழிபாடுகளும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழாவிற்குத் திருமுருகன் பூண்டியிலுள்ள முயங்கு பூண்முலையம்மை உடனமர் முருகநாதப் பெருமாள் எழுந்தருள்வது குறிப்பிடத்தக்கது.
இத்தலம் கோவையிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கோபி, ஈரோடு, திருப்பூர் முதலிய ஊர்களுக்குச் செல்லும் பெருவழியில் உள்ளதால் இவ்வூர் வழியே அடிக்கடி பேருந்துகள் சென்று கொண்டே இருக்கின்றன. மேட்டுப்பாளையம், அன்னூர் முதலிய ஊர் களிலிருந்தும் பேருந்துகள் அவிநாசி வழியாகச் செல்கின்றன. எனவே இத்தலத்தை அன்பர்கள் எளிதில் அடையலாம். அவிநாசியப்பரையும் கருணாம்பிகையையும் கண்டு வழிபட்டு அன்பர்கள் எல்லாப் பேறுகளையும் பெற்றுய்ய வேண்டுகிறோம்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க