tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

எங்கள் குலதெய்வம் அருப்புக்கோட்டை ஆயிரம் கண் மாரியம்மன் ஆவார். அருப்புக்கோட்டை நகரின் மேற்கே பாவடித் தோப்பு என்னும் இடத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது . இது நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் ஆகும் 

 

அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் வடக்கு நோக்கிய வண்ணம் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் பின்புறம் ஒரு தெப்பக்குளம் அமைந்துள்ளது. எனவே இக்கோவில் தெப்பக்குள ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் என வழங்கப்படுகிறது. கோவிலின் முன்புறம் பலிபீடம், கொடிக்கம்பம், சிம்ம வாகனம் ஆகியவை வரிசையாக அமைந்துள்ளன. அடுத்து முக மண்டபம் காணப்படுகிறது. அடுத்து மகாமண்டபமும், தொடர்ந்து அர்த்த மண்டபமும், கருவறையும் அமைந்துள்ளன. கருவறையில் மாரியம்மன் திரிசூலத்துடன் நின்றவாறு உள்ளார். அம்மனுக்கு இடப்புறம் விநாயகர் பீடம் ஒன்று உள்ளது. இங்கு உயிர்ப்பலி இடுதல் வழக்கம் இல்லை. மாறாக இங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 

 

மாதந்தோறும் கடைசி வெள்ளியில் குத்துவிளக்கு பூசை, மார்கழி தனுர் பூசை, தைப்பொங்கல், நவராத்திரி போன்ற பல்வேறு விழாக்கள் இக்கோவிலில் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. சித்திரை மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா இங்கு சிறப்பாக நடக்கிறது.

 

 

சித்திரைப் பொங்கல் விழா பன்னிரெண்டு நாள்கள் கொண்டாடப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. தினந்தோறும் மாலையில் கோவில் கலையரங்கில் சமயம் தொடர்பான பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும். எட்டாம் திருவிழாவை ஒட்டி அன்று மாலையில் கோவில் முன்பாக பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கன பெண்கள் கலந்துகொள்வர்.

 

 

பொங்கல் அன்று சரியாக நள்ளிரவில் ஆயிரங்கண் மாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் தொடங்கும். புது ஆடை உடுத்தி, அலங்காரங்களும் ஆபரணங்களும் சாத்தி அம்மனை அலங்கரித்து, நைவேத்திய படையலும் இட்டு, தூப தீபம் காட்டி முடித்து, அர்த்த மண்டபக் கதவை அடைத்துவிடுவார்கள். அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரி வேப்பிலையைக் கையில் ஏந்தியபடி, உள்பிராகாரத்தை ஒருமுறை வலம் வருவார். கையிலுள்ள தேங்காயை அர்த்தமண்டப வாசல்படியில் சிதறுகாய் உடைப்பார். அப்போது சாத்திவைக்கப்பட்டிருக்கும் அர்த்த மண்டபக் கதவுகள் இரண்டும் திறந்து அந்த ஆயிரங்கண் மாரியம்மனின் காட்சி கோவிலைச் சுற்றிக் கூடி நிற்கும் மக்களுக்குக் கிட்டும். 

 

பக்தர்கள் விரதம் இருந்து 25, 51,101 வகைத் தீச்சட்டிகள் எடுத்தும், அலகு குத்தியும், பொம்மை செலுத்தியும் நேர்த்தி கடன் செலுத்துவர்

 

 

மாலையில் கோவில் முன்பு இரண்டு ஆள் உயரத்துக்கு அடுக்கப்பட்ட பல டன் விறகுகள் தீ மூட்டப்படும். அம்மனுக்கு நேர்ந்துகொண்ட பக்தர்கள் இப்பூக்குழியில் இறங்கி நடப்பர். பூக்குழிக்கு நான்கு பக்கங்களிலும் எல்லைக்கோடாகப் போட்டுவைத்திருக்கும் மல்லிகைச் சரங்கள், தீ அனலால் வாடாமல், கருகாமல் இருக்கும். அம்மன் பூக்குழி நிகழ்வுக்குப் பின்பே அம்மல்லிகைச் சரங்கள் வாடும்.

 

 

பத்தாம்நாள் விழாவில் அம்மன் வீதியுலா நிகழ்வு நடைபெறும். அப்போது பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுப்பர். பதினொன்றாம் நாள் பூப் பல்லக்கு நிகழ்ச்சியும் வாண வேடிக்கையும் முளைப்பாரியும் நடைபெறும்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க