tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

அறிமுகம்

"அருள்மிகு சந்திரசூடேசுவரர் திருக்கோவில்" தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 'ஓசூர்' எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து சற்று விரிவாக இங்கு காண்போம்.

### 1. மூலவர் மற்றும் அமைவிடம்:

மூலவர்: சந்திரசூடேசுவரர்
அம்மன்/தாயார்: மரகதாம்பிகை அம்மன்
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: பச்சைகுளம்
புராண பெயர்: பத்ரகாசி
ஊர்: ஓசூர் 
மாவட்டம்: கிருஷ்ணகிரி
மாநிலம்: தமிழ்நாடு

### 2. திருவிழா:

மாசி - பங்குனி தேர்த்திருவிழா - 13 நாட்கள் திருவிழா, இத்திருவிழாவின் போது தமிழகம் தவிர கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவது மிகவும் சிறப்பு; தெலுங்கு பால் குண மாதம் - பவுர்ணமி ரத உற்சவம் சிவராத்திரி மற்றும் சோமவாரம் விசேசம் (தெலுங்கு சம்பிரதாயம்); ஆடி - நவசண்டி யாகம், ஆடிபூரம், கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், தைப்பொங்கல் ஆகியவை இத்தலத்தின் விசேச நாட்கள். இதுதவிர பிரதோச காலங்களில் கோயிலில் மிக அதிக அளவில் பக்தர்கள் கூடுகிறார்கள். பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் மிகவும் சிறப்பாக நடக்கிறது. ஆங்கில, தமிழ் புத்தாண்டு தினங்களன்று கோயிலில் மிக அதிக அளவு எண்ணிக்கையிலான பக்தர்கள் கூடுகிறார்கள்.

### 3. தல சிறப்பு:

மூலவர் சந்திரசூடேசுவரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். பிரகாரத்தில் உள்ள ஜலகண்டேசுவரர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. தண்ணீர் தொட்டி போன்ற அமைப்பின் மத்தியில் இந்த லிங்கம் உள்ளது. மழை இல்லாத காலங்களில் இந்த லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. தண்ணீர் தொட்டி போன்ற அமைப்புக்குள் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர். 16 நாட்கள் தொடர்ந்து இவ்வாறு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி தெப்பமாக வைத்து விட்டு கற்பூரம் ஏற்றி வைத்து வணங்கி விட்டு வந்து விடுகிறார்கள், பின்பு சில மணி நேரங்களில் தண்ணீர் வற்றி விட்டால் மழை வராது என்று பொருள். தண்ணீர் வடியாமல் தெப்பம் போல் நின்றிருந்தால் அடுத்த சில நாட்களில் மழை வருமாம். இது சில வருடங்களுக்கு முன் இதே போல் தெப்பம் போல் இருந்து அந்த சமயத்தில் மழை வந்த அதிசயம் நடந்திருக்கிறது.

### 4. கோவில் நேரம்:

'காலை 6-12 மணி' மற்றும் 'மாலை 5-9 மணி' ஆகிய நேரங்களில் நடை திறந்திருக்கும்.

### 5. பிரார்த்தனை:

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. மேலும், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் 'ருத்ரா அபிசேகம்' செய்வது வழக்கமாக உள்ளது. இந்த அபிசேகம் இத்தலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மற்றும், வில்வ மரத்தில் தொட்டில் கட்டி குழந்தை வரம் வேண்டுவோர் வழிபடுகின்றனர். வேலைவாய்ப்பு மற்றும் கடன்தொல்லை ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்கு பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

### 6. தல வரலாறு:

கயிலாயத்திலிருந்து சுவாமி அம்பாள் இருவரும் வரும்போது சுவாமி உடும்பு ரூபம் எடுத்து வருகிறார். அந்த உடும்பை பிடிக்க அம்பாள் பின் தொடருகிறார். காடு மேடு தாண்டி இப்பகுதிக்கு வருகிறார். அப்படி வரும்போது 'முத்கலர், உத்சாயனர்' என்ற இரு பெரும் ரிஷிகள் இம்மலையில் தவமிருக்கின்றனர். தங்களது தவ ஞானத்தால் ஈசன் என்று உணர்ந்து அந்த உடும்பை பிடிக்க எண்ணினர். அம்பாளோ உடும்பின் மேல் மரகதம், மாணிக்கம், நவரத்தினம் பதித்த உடும்பை பிடிக்க ஆசைப்பட்டு பின்தொடர்கிறார். இருவரிடமும் மாட்டிக்கொள்ளாது இருக்க சுவாமி மறைந்து விடுகிறார். கோபம் கொண்டு ரிஷிகளை அம்பாள் சபிக்க ரிஷிகள் இருவரும் முறையே 'ஊமையன் - செவிடன்' ஆகி விடுகின்றனர் பின்பு அம்பாள் கோமுகம் வழியாக தவமிருக்கிறார்.

### 7. தல பெருமை:

அம்பாள் முன்பாக ஸ்ரீ சக்கரம் உண்டு, அந்த ஸ்ரீ சக்கரம் முன்பாகத்தான் நவசண்டி யாகம் ஆடிமாதம் சிறப்பாக நடைபெறுகிறது. அம்பாள் முகத்தில் உள்ள மூக்கில் மூக்குத்தி நுழைய துவாரம் உள்ளது. மேலும், அம்பாளின் பின்னல் தலைமுடி ஜடை குஞ்சத்தோடு இருக்கும். பஞ்சபாண்டவர்களில், அர்ச்சுனன் சுவாமிக்கு அஷ்டகம் எழுதி பூஜை செய்ததாக சிறப்பு. அம்மன் சிலை மரகதம் போல் பச்சை நிறமாக இருப்பது அதிசயம். மற்றும், இம்மலைக்கு வடக்கு பக்கம் மகா விஷ்ணு (வெங்கட்ரமணர் சுவாமி) மலைக்கோயிலும், தெற்கு பக்கம் பிரம்மா (பாதம் மட்டும்) மலைக்கோயிலும் உள்ளது. மும்மூர்த்திகளும் ஒரு சேர மலையாக ஒரே நேர்கோட்டில் உள்ளது சிறப்பம்சம்.

### 8. நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு ஒவ்வொரு கார்த்திகை 5 திங்கள் கிழமைகளிலும் சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. மொட்டை அடித்தல், அங்க பிரதட்சணம் செய்தல் ஆகியவற்றையும் பக்தர்கள் நேர்த்திகடனாக செய்கின்றனர். மகன்யாச ருத்ரா அபிசேகம், ருத்ர ஹோமம் ஆகியவை இத்தலத்தில் மிகவும் விசேசமாக பக்தர்களால் செய்யப்படுகிறது.

### 9. கோவில் முகவரி:

அருள்மிகு சந்திரசூடேசுவரர் திருக்கோவில்,
ஓசூர்,
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு - 635109.

### 10. செல்லும் வழி:

பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் உள்ளது. ஓசூர் நகரின் மத்தியிலேயே கோயில் இருப்பதால் பக்தர்கள் எளிதில் கோயிலுக்கு சென்று வரலாம்.

முடிவாக

ஓசூர் - அருள்மிகு சந்திரசூடேசுவரரை வழிபட்டு, நாம் வாழ்வில் நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டி, இத்துடன் நிறுத்திக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!

தொகுப்பு மற்றும் ஆக்கம்/-

பாவலன் பாரத்
அரியலூர்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க