tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் மிகவும் பிரசித்தி  பெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி எங்கள் குலதெய்வம் ஆகும். இக்கோயிலானது முழுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் வரலாறு சிறப்பு வாய்ந்ததாகும். ஈசன் திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில் உலகைச் சமன்செய்யும் பொருட்டு இறைவன் ஆணைப்படி அகத்தியர் பொதிகை நோக்கிப் பயணமானார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் விலவனன் ஆகிய‌ேரை வதைத்தனால் உண்டான பிரம்மகத்திரம் நீங்கப்பெற்றார். பொன்ம‌லை முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அகத்தியர் தீர்த்தத்தை ஏற்படுத்திவிட்டு தன் பயணத்தைத் ‌தொடர்ந்தார்.

 

 

வெள்ளிமலை சிவக்குழவைச் சார்ந்த வாமனன் நந்திதேவரின் சாபத்தால் வெம்பக்‌கோட்டையில் ‌வேந்தனாகப் பிறந்து செண்பக மன்னன் எனப் பெயர் பெற்றான். இறைவன் ஆணைப்படி கோவிற்புரியையும் பூவனாதருக்‌கு கோவிலும் அமைத்து சாபநிவர்த்தி பெற்றான். செண்பக மன்னனால் தோற்றுவிக்கப்பட்ட இத்திருக்கோயிலில் அம்பாள் செண்பகவல்லி என்று பெயர் பெற்றாள். இக்கோயிலில் இறைவனும், இறைவியும் தனித்தனி கோயில்களில் எழுந்தருளி கிழக்கு நோக்கி அருள்பாலிப்பதால் சுவாமி அம்பாள் திருவாயில்கள் தனித்தனியாக உள்ளன. இதில் அம்பாள் திருவாயிலில் சுவாமி அம்பாள் திருமண காட்சியுடன் கூடிய எழில் கொஞ்சும் சிறிய சாலைகோபுரம் உள்ளது. 

 

சுவாமி சன்னதி முன்பு 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரமும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தினமும் பூஜைகள் காமிகா ஆகமப்படி 5 காலங்களாக நடந்து வருகிறது. இதில் காலை 5.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும், காலை 8 மணிக்கு விளாபூஜையும், பகல் 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8.30 மணிக்கு அர்த்தசாமம் பூஜையும் நடந்து வருகிறது. ஞாயிறு வார வழிபாடு, பிரதோஷ வழிபாடு போன்ற பல்வேறு வாராந்திர, மாதாந்திர சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.

 

 

மதுரையில் எப்படியோ அதுபோல் இங்கு அம்பாளுக்குத்தான் முக்கியத்துவம். இந்த சன்னதி நுழைவாயிலில் பிரம்மாண்டமான துவாரபாலகிகள் காணப்படுகின்றனர். மூல விக்ரகம் எப்படியுள்ளதோ அப்படியேதான் அலங்காரம் செய்வது எல்லா கோயில்களிலும் உள்ள வழக்கம். இங்கு மட்டும் நிற்கும் அம்பாளை உட்கார்ந்துள்ளது போல அலங்காரம் செய்கிறார்கள். இராமபிரான் சிவ வழிபாடு செய்த பெருமை உடையது. சதுங்கன், பதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்கள் இறைவனைப் பூவனப் பூக்களால் அர்ச்சித்ததால் இறைவன் பூவனநாதர் என பெயர் பெற்றார்.

 

 

ஆண்டுதோறும் வசந்த உற்சவ திருவிழாவும், ஆடிப்பூர வளைகாப்பு திருவிழாவும், நவராத்திரி திருவிழாவும், ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும், பங்குனி பெருந்திருவிழாவும் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. ஐப்பசி திருக்கல்யாணம் மற்றும் பங்குனி பெருந்திருவிழாவின்போது தேரோட்டம், தீர்த்தாரி திருவிழா, தெப்பத்தேரோட்டம் நடக்கும். 11 நாட்கள் நடக்கும் பங்குனி பெருந்திருவிழாவில் கோவில்பட்டி மற்றும் வெளியூர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி, அம்பாளை தரிசித்து செல்கின்றனர். இக்கோயிலில் பக்தர்களுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. தீராத வினைகளை தீர்த்துவைக்கும் செண்பகவல்லி அம்மன் தன்னை நம்பி வருவோருக்கு சகல நன்மைகளையும் செய்து வருகிறாள்.

 

ரா.பே.பொன்சரவணகுரு

 

செங்கோட்டை

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க