tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

* மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையார் அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த வைணவ திருத்தலம் செங்கமவல்லி தாயார் சமேத ராஜகோபாலசுவாமி திருக்கோவில் ஆகும்.
* இத்திருத்தலம் கிழக்குக்கடற்கரைச்சாலையில் திருக்கடையூர் லிருந்து ஆறாவது கிலோமீட்டர் தெற்கிலும்..தரங்கம்பாடி யிலிருந்து ஐந்தாவது கிலோமீட்டர் வடக்கிலும் அமைந்துள்ளது.
*     திருக்கடையூர் ..சிங்கனோடை..காழியப்பநல்லூர்..சாவடிக்கு அடுத்த பேருந்து நிறுத்தம் அனந்தமங்கலம்.பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே அலங்கார தோரணவளைவு வரவேற்க...கிழக்கே செல்லும் சாலையில் அரைகிலோமீட்டர் நடந்தால் திருக்கோவிலை அடையலாம்.
*     ராஜகோபால சுவாமி கோவில் நுழைவுவாயில் மொட்டைக்கோபுரமாகவே உள்ளது.வாயிலை அடுத்து பலிபீடம்..கொடிமரம்..கருடாழ்வார் சன்னதி..ஆகியவை உள்ளன.
*    தென்கிழக்கில் திருமடப்பள்ளியும் அதனருகில் தாயார் சன்னதியும் இருக்கின்றன.
*    கருடாழ்வாரை தரிசித்து மூலவர் பெருமாள் சன்னதிக்கு சென்று பின்பே திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை வணங்க வேண்டும் என்பதே ஐதீகம்.பிரதான திருக்கோவில் கருவறையில் மூலவர் பநீதேவி பூதேவி சமேத வாசுதேவ பெருமாள் உள்ளார்.இந்த மூலவர் அருகே உற்சவர் ராஜகோபால பெருமாள் ருக்மணி-சத்யபாமாவுடன் அருள்பாலிக்கிறார்.
*    இத்திருக்கோவிலில் வடக்கு நோக்கிய தனி சன்னதியில் ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
* சன்னதிக்கு எதிரே திருக்குளம் இருக்கிறது.
*    இச்சன்னதியில் திரிநேத்ர தசபுஜ ஆஞ்சநேயர் மூன்று கண்கள்..பத்துக்கரங்கள்..அக்கரங்களில் சங்கு..சக்கரம்..வில்..அம்பு..சூலம்..மழு..
* கபாலம்..சாட்டை..நவநீதம்..பாசம்..
* அங்குசம் போன்ற ஆயுதங்களை ஏந்தியும்.‌முதுகில் இருபுறமும்  கருடனுடைய சிறகுகளைக்
* கொண்டும் காட்சி தருகிறார்.
*   இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனி உலகில் வேறெங்கும் இல்லை என கூறப்படுகிறது.
*    இனி இத்தல வரலாற்றை காண்போம்..
*   இலங்கையில் யுத்தம் செய்து இராவணனை அழித்து..சீதையை மீட்டுக்கொண்டு ராமர்.சீதா..
* லட்சுமணர்..அனுமன் ஆகியோர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு திரும்பினர்.
*     வழியில் அவர்கள் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் இறங்கி விருந்துண்டனர்.
* அப்போது அங்கு வந்த நாரதர் ராமனிடம் .
* .'ராவணன் அழிவுக்கு பின்னரும்..
* அரக்கர்கள் ஓரிருவர் அங்காங்கே தங்கி இன்னல்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.அவர்களில் இரக்தபிந்து..இரக்தராட்சசன் ஆகிய இருவரும் மிகக்கொடியவர்கள்.இப்போது அவர்கள் ஆழ்கடலுக்குள் பதுங்கி கடுந்தவம் செய்து..வரம் பெற முயற்சிக்கிறார்கள்.
*    அப்படி வரம்பெற்றுவிட்டால் ...ராவணனைவிட பன்மடங்கு ஆற்றல் பெற்றவர்களாக திகழ்வர்.எனவே உலக உயிர்களின் நன்மைக்காக அவர்களை நீங்கள் அழிக்க வேண்டும்'என கேட்டுக்கொள்கிறார்.
*     இதை ஏற்று ராமர்...அரக்கர்களை அழிக்க மாவீரரான அனுமனை பணித்தாராம்.
* அனுமனோ அழியாவரம் பெற்றவர்..
* அளவில்லா ஆற்றல் உடையவர்..
* இருப்பினும்..அரக்கர்களுடன் சமர் புரிய திருமால் சங்கு சக்கரத்தை அளிக்க..பிரம்மனோ தனது பிரம்ம கபாலத்தை வழங்க..ருத்ரன் மழுவையும்..ராமன் வில்-அம்பையும் ...
* இந்திரன் வஜ்ராயுதத்தையும்..வழங்கினர்.
*    இவ்வாறு தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களை பத்துக்கரங்களில் ஏந்தி ஆஞ்சநேயர் காட்சியளிக்க..கருடாழ்வார் தமது சிறகுகளை தந்து வாயு புத்திரனுக்கு வலிமையூட்டினார்.
*     கடைசியாக வந்த சிவனோ தான் தருவது யாது என திகைத்து..தனது மூன்றாவது கண்ணை அளித்து ஆசிர்வதித்தார்.
* 3 கண்கள்(திரிநேத்ர)
* 10கரங்களுடன்(தசபுஜ)புறப்பட்டு சென்று கடலுக்கடியில் தவம் செய்துகொண்டிருந்த இரு அசுரர்களுடன் சண்டையிட்டு அவர்களை அழித்துவிட்‌‌‌டு ராமரை சந்திக்க வருகிறார்.
*    வரும்வழியில் கடற்கரையோரத்தில் ஒரு சோலையைக்காண்கிறார்.
*    ஆனந்தமிகுதியோடு இவ்விடத்தில் இளைப்பாருகிறார்.அவ்விடமே ஆனந்தமங்கலம் என்று அழைக்கப்பட்டு..மறுவி அனந்தமங்கலமாகிய இத்தலம் என்பது வரலாறு.
*    இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால்..திருமால்..சிவன்..பிரம்மன்..ருத்ரன்..இந்திரன்..கருடாழ்வார்..ராமர் என்று அனைத்து தெய்வங்களையும் ஒருங்கே வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
*     சிரஞ்சீவியான அனுமனை வழிபட நீண்ட ஆயுள்..உடல் வலிமை..புத்திக்கூர்மை‌‌ பெறலாம்.அச்ச உணர்வு...நவகிரக தோஷங்கள்...மனசஞ்சலம்..தீராப்பிணிகள் விலகும்..வாக்கு வன்மை வளமாகும்.
*    அனந்தமங்கலம் நித்ய வாசஸ்தலம் என்பதால் இங்குள்ள ஆஞ்சநேயரை வணங்க காலநேரம் பார்க்க வேண்டியதில்லையாம்.இருப்பினும் இங்கு சனிக்கிழமைகள்..அமாவாசைகளிலும்...மூலநட்சத்திரத்தில் வரும் அமாவாசை தினமும் வழிபட சிறப்பு என்பதே பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
*    அனுமன் ஜெயந்தி..வைகுண்ட ஏகாதசி தினங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
*   அப்படி சிறப்பான நாட்களில் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் வடக்குபிரகாரத்தில் கிழக்குநோக்கிய மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.இத்தலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் சடாரி சாற்றி...துளசித்தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு.
*     இத்தலத்திற்கு 17 ஆண்டுகளுக்கு பின் கடந்த 21-1-2024 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
*     இத்திருத்தலத்தில் கடந்த 1978ம் ஆண்டு வெங்கலத்தால் ஆன ராமர்.. சீதை..லட்சுமணர்..அனுமன் சிலைகள் திருடு போயின.இந்த சிலைகள் சிங்கப்பூரில் இயங்கிவரும் 'பிரைடு இந்தியா' என்கிற தன்னார்வ நிறுவனத்தின் முயற்சியால்..இந்தியதூதரகம் வழியாக லண்டனிலிருந்து  மீட்கப்பட்டு ..கடந்த 2020ம் ஆண்டு இந்தியா வந்தடைந்தது..அப்படி மீட்கப்பட்ட ராமர்..சீதை..லட்சுமணர் சிலைகள் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டில் உள்ளது.ஆனால் அனுமன் சிலை மீட்புக்கான முயற்சிகள் இன்னும் நீண்டுகொண்டே இருக்கின்றன.
              ஆஞ்சநேயருக்கு துளசிமாலை...வெற்றிலை மாலை..வடைமாலை...எலுமிச்சை மாலை உகந்தவை.
அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட..நம் துன்பங்கள் வெப்பம்பட்ட வெண்ணெய் போல கரைந்தோடும் என்பது நம்பிக்கை.ஆனந்த வாழ்வுக்கு அடித்தளமிட்டு ஆஞ்சநேயபகவானை வழிபட்டு நலம்பெற..அனைவரும்ஒருமுறை சென்று வரலாம்.!.அருள் பெறலாம்.!*
------------------------
அரும்பூர்.க.குமாரகுரு,மயிலாடுதுறை
*     

ராசி பலன்

வியாபாரம் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். சவாலான செயல்களையும்... மேலும் படிக்க

இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் பணி வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். சமூகப் பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். எதிர்ப்பாராத சில இடமாற்றம்... மேலும் படிக்க

மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சி இன்மை ஏற்படும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து... மேலும் படிக்க

ஆன்மிகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு... மேலும் படிக்க

பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். பங்குதாரர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். முன் கோபத்தால் சில விரயங்கள் நேரிடும். மற்றவர்கள் கூறும்... மேலும் படிக்க

பொழுதுபோக்கு செயல்பாடுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் எண்ணங்களை... மேலும் படிக்க

குடும்ப பெரியோர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வாகனம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு கட்டுவது சார்ந்த... மேலும் படிக்க

எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் தைரியம் உண்டாகும். காலி மனை மூலம் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தபால் துறைகளில்... மேலும் படிக்க

செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில்... மேலும் படிக்க

இனம்புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம்... மேலும் படிக்க

அவசரம் இன்றி எதிலும் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல்... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.... மேலும் படிக்க