tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

எங்கள் குலதெய்வம் பாடி படவேட்டம்மன் திருக்கோயில் சென்னை பாடி பகுதியில் பிரதான சாலை ஓரத்தில் இருக்கிறது. எங்கள் பாடி படவேட்டம்மன் கோவில்.படைவீரர்கள் போருக்கு செல்லும் முன்வெற்றியை கொடுக்கும் வீர தேவதையை வணங்கி செல்வது வழக்கம். வெற்றி பெற்றால் அவ்வீரர்களில் ஒருவர் தங்கள் தலையை அரிந்து அம்மனுக்கு காணிக்கையாக வழங்குவதும் வழக்கிலிருந்தது. அத்தகைய அம்மன் கோயில் இன்றும் படைவீட்டு அம்மன் என்றும் அழைக்கப்பட்டு அதுவே பேச்சு வழக்கில் படவேட்டம்மன் என்று இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.இத்திருக்கோயிலில் அம்மன் சிரசு, வேப்பமரத்தடியில் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாய் வீற்றிருந்து வேண்டுவோருக்கு தாம் வேண்டியவரங்களை கொடுத்து அருள் புரிந்து வருகிறாள் இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து 61 மீட்டர் உயரத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது இந்த கோயில்.

இத்திருக்கோயிலை சென்னை மத்திய (சென்ட்ரல்) ரயில் நிலையத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொரட்டூர் ரயில் நிலையத்திற்கு தெற்கே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திலும் அடையலாம். இத்திருக்கோயில் பாடி மற்றும் பாடியை சுற்றிலும் உள்ளநகர்களில் வாழ்கின்ற மக்களின் முக்கிய பிராத்தனை தலமாகும்.  250 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுஇது. அந்தக்காலத்தில் சென்னையில் இருந்து கூண்டு வண்டியில் திருப்பதிக்குப் போன சிலர், திரும்பிவரும் வழியில் சக்கரம் மாதிரியான ஒரு கல், உருண்டு போனதை பார்த்து உள்ளனர். அந்தக்கல் கொஞ்சதூரம் உருண்டு நடுசாலையில் வந்து நின்று உள்ளது. பாதையை மறித்து நின்ற கல்லை ஓரமாகபோட நினைத்து எடுத்து உள்ளனர். ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள். காரணம் அது சாதாரணக்கல் இல்லை. சிரசு வரைக்குமான அம்மன் சிலை. அந்த சமயத்தில் அங்கே ஆடு மேய்த்து கொண்டு இருந்த ஒரு பெண்ணுக்கு அருள் வந்து “சோழ மன்னனோட போர்ப் பாசறையான படைவீட்டுல இருந்த அம்மன் நான், என் கோவில் காலப்போக்குல மறைஞ்சுட்டதால் எனக்கான இடத்தைத்தேடி இப்படி உருண்டு வந்துகிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்சம் தூரம் போனா சாலை ஓரத்தல ஒரு வேப்ப மரம் இருக்கும். அங்கே வைச்சு என்னை வழிபடுங்க. உங்க வேண்டுதலை நிறைவேற்றி என்றைக்கும் நான் துணை நிற்பேன். எல்லைத் தெய்வமாக இருந்து காப்பேன்”. என்று வாக்கு சொல்லியிருக்கிறது அம்மன்”.

அங்கேயிருந்து அம்மன் சிலையை எடுத்துவிட்டு புறப்பட்டவர்கள் வழியில் ஒரு வேப்பமரம் இருந்ததை பார்த்துவிட்டு அதோடு வேரடியில் அம்மனை வைத்து வழிபட்டார்கள். அன்றில் இருந்து இன்று வரைக்கும் அதே இடத்தில் அதே வேப்பமரத்தின் வேர்ப்பீடத்தில் இருந்து அருள் புரிகிறாள் படைவீட்டம்மன். மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த அந்தப்பகுதி இன்றைக்கு பரபரப்பான சென்னையின் முக்கியமான ஓர் இடமானது. படைவீட்டம்மன் என்ற அம்மனோட பெயர் மருவி படவேட்டம்மன் என்றானது. ஆனால் இப்பவும் தான் அமர்ந்த பீடத்தை மாற்றாமல் அதே வேப்பமரத்தின் வேரடி பீடத்தில்தான் அமர்ந்திருக்கிறாள் படை வீட்டம்மன்.

அம்மன், தானே விருப்பப்பட்டு வந்து அமர்ந்து இடம் என்பதை கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது. கோவிலைப் பற்றியும், இருப்பிடத்தையும் பார்போம்... சென்னை பாடி பகுதியில் பிரதான சாலை ஓரத்தில் இருக்கிறது இந்த கோவில். ராஜகோபுரம் கிடையாது. ஆனால் உயர்ந்து நிற்கிற வேப்பமரம் அந்தக்குறையைத் தீர்க்கிறது. வேம்புவின் வேரடியில் பீடமாக இருப்பதால் அதை மாற்றாமல் அப்படியே சிறிய கருவறை அமைத்து இருக்கிறார்கள்.சிரசு வரைக்கும் இருக்கிற அம்மனுடைய சிலையை பார்த்தால் ரேணுகா பரமேஸ்வரியை நினைவுக்குக் கொண்டுவருகிறது. ஆனால் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் அம்மனுடைய தலையில் அக்னி ஜுவாலை மகுடமும் நாகக்குடையும் இல்லாத வித்தியாசம் தெரியும். இந்த அமைப்பினாலும் போர் வீரர்களால் வணங்கப் பட்டதாலும் இவளை துர்க்கை அம்மன் என்றும் சொல்கிறார்கள்.சக்கரம் மாதிரி உருண்டு வந்த அம்மன் முகம் வட்டமான சந்திரனுக்கு நடுவில் பதிந்த மாதிரி குளுமையான பிரகாசத்தோடு இருகிறது. தினமும் அபிஷேக நேரத்தில் மட்டுமே இந்த அம்மனை தரிசிக்க முடியும். பிறகு கவசம் சாத்திடுவார்கள். இன்னொரு முக்கியமான விஷயம் இங்கே தினமும் அபிஷேக பூஜை நடக்கிறது. முதல் நாள் பூஜையை முடித்துவிட்டு மறுநாள் காலையில் வழிபாடு நடத்த வரும்போது ரொம்பவே கவனமாக அம்மனுடைய வஸ்திரங் களையும் நிர்மால்யப் பூக்களையும் அகற்றுவார்கள். காரணம் பல நாட்களாக இங்கே அம்மனுக்குப் பக்கத்தில் பாம்பு வந்து படுத்திருக்குமாம். ஒரே சுற்றுள்ள கோவிலில் கணபதி, சிரசு அம்மன், மாரியம்மன், பால முருகன் மற்றும் உற்சவ படவேட்டம்மனும் முழுவடிவாக பூரண சந்திரன் மாதிரி அழகு மிளிர காட்சி தருகிறார்கள். படவேட்டம்மனை ஏராளமான பக்தர்கள் குலதெய்வமாக வழிபடுகிறனர்.பொங்கலிட்டும் புடவை சாத்தியும் வணங்கு கிறார்கள். பக்தர்கள் பொங்கலிடுவதற்கு சிறப்பான தனி இட வசதி இருக்கிறது.

 

 

பாடி சென்னையின் சுற்றுப்பகுதிகளில் ஒன்றாகும். திருவாய்ப்பாடி என்று பெயர் பெற்ற இவ்வூர் இன்று பாடி என்று அழைக்கப்படுகிறது. சென்னையின் கோட்டையிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னைக்கும் திருவள்ளூருக்கும் இடையே செல்லும் சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பாடி என வழங்கும் இவ்வூர், அம்பத்தூர் காவல் உதவிக் கண்காணிப்பாளரின் கீழ்வரும் கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டதாகும்.

 

வெள்ளத்துரை ஜோதிடர்

 ஆவரம்பட்டி

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க