tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

🌹🌿 அவள் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பூவுலகில் ராஜ்ஜிய லட்சுமி, 

வீடுகளில் கிரக லட்சுமி என்று அழைக்கப்படுகிறாள்.🌹 

 

🌹🌿 உலகையும், உடலையும் துறந்த ஞானிகள் கூட மோட்ச லட்சுமியின் அருள் கடாட்சத்தை 

விரும்புகிறார்கள்🌹.

 

🌹 🌿 தேவர்கள் ஸ்ரீதேவியை வணங்கி தாயே தாங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு லட்சுமி தேவி „🌹

 

🌹🌿 எந்த வீட்டில் காலையில் எவரும் தூங்காமல் எழுந்திருந்து என் பெயரை சொல்கிறார்களோ..🌹. 

 

🌹🌿 எங்கு காலை வேலைகளில் வீட்டு வாயிலில் சாணி தெளித்து கோலம் போட்டுத் தீபம் ஏற்றி வைக்கின்றனரோ..🌹. 

 

🌹🌿 எங்கு ஆச்சாரம் கடைபிடிக்கப்படுகிறதோ..🌹.

 

 🌹🌿 எங்கு தர்மம் நன்கு அனுஷ்டிக்கப்படுகிறதோ..🌹. 

 

🌹🌿 எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமலும் தானியங்கள் சிந்தாமல் இருக்கிறதோ...🌹 

 

🌹🌿 எங்கு கோபூஜை வேதத்துடன் நடத்தப்படுகின்றதோ அந்த இடங்களில் எல்லாம் இருப்பேன் என்றாள்.🌹

 

🌹🌿 யாரிடம் லட்சுமி தங்கமாட்டாள்?🌹

 

🌹🌿 கலகம் செய்பவர், குரோதமாகப் பேசுபவர், பொய் சொல்பவர், சந்தியா காலத்தில் சாப்பிடுபவர், முடி, கரி, எலும்பு இவைகளைக் காலால் மிதிப்பவர், கால் அலம்பாமல் வீட்டுக்குள் வருகிறவர், தாய், தந்தைக்கு பணிவிடை செய்யாதவர், ஸ்வகர்மாவை விட்டவர், நகத்தைப் பல்லால் கடிப்பவர் ஆகியோர்களிடம் லட்சுமி தங்கமாட்டாள்🌹.

 

🌹🌿 லட்சுமி என்றால் சகல செல்வங்கள் வரும் வழி என்று பொருள். அதாவது அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பதெல்லாம் லட்சுமியே. இவற்றைப் பெற்றுள்ள பாக்கியசாலியே லட்சுமி கடாட்சம் உள்ளவன் என்றழைக்கப்படுவான். மகாலட்சுமி தன் கடைக்கண்களை காட்டினாள் என்றால் இவ்வுலகில் எல்லாவகை செல்வங்களும் நமக்கு வந்துசேரும். அதற்கு நாம் அவளை அனுதினமும் மனமுருகி பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும். ஆனால் லட்சுமி நிலையற்றவள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். லட்சுமிஎங்கும் நிரந்தரமாக தங்கி இருக்கமாட்டாள்.🌹

 

🌹🌿 லட்சுமி தேவி நிரந்தரமாக இருக்க என்ன செய்யலாம்?🌹

 

🌹🌿 சத்தியம், தானம், விரதம், தவம், பராக்கிரமம், தர்மம் இவற்றில் தேவி குடிகொண்டிருக்கிறாள். அவளை மனதார வழிபட்டு வந்தால் என்றும் நீங்காமல் இருப்பாள். அதனால் அனைத்தையும் தாங்கும் பூமியில், மக்களுக்கு உயிர் கொடுத்து வாழவைக்கும் நீரில், யாகம் முதலியவைகளுக்கு ஆதாரமாகியுள்ள அக்னியில், உண்மை பேசும் மனிதரிடமும் லட்சுமி தேவி அவள் அனுமதியுடன் நான்கு பாகமாகி நிலைபெற்றிருக்கிறாள்🌹.

 

🌹🌿 வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். மஞ்சள் பூசியும் நீராட வேண்டும். பெண்கள் கிழிந்து தைத்த,

நைந்துபோன ஆடைகளை உடுத்தக்கூடாது. நல்ல ஆடைகளை சுத்தமாக துவைத்து உலர்த்தி கட்டிக் கொள்ள வேண்டும்.🌹

 

🌹🌿 குழந்தைகளைத் திட்டுவது, உறவினர்களை ஏசுவது, அக்கம் பக்கத்து வீட்டார்களுடன் சண்டை செய்வது, கணவனை வசைமாரிப்பொழிவது போன்ற அமங்கலமான வார்த்தைப் பிரயோகங்கள் லட்சுமியின் வரவை தடைப்படுத்தும் காரணிகளாகும்.🌹

 

🌹🌿 பெண்கள் எப்போதும் வீட்டில் மங்களகரமான வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும்.வெள்ளிக்கிழமைகளில் தினசரி விளக்குவைத்த பிறகு தலைவாறுதல், பேன் பார்த்தல், நகம் வெட்டுதல், ஊசி நூல்களால் பழைய துணிகளை தைத்தல் போன்ற செயல்கள் கூடாது.🌹

 

🌹🌿 தினசரி சுவாமி சுலோகங்கள் பாராயணம் செய்தல், வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு பூஜை செய்தல், அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருதல் ஆகியவை லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.🌹

 

🌹🌿 விசேஷ தினங்களில் நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலைப்பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், புஷ்பம், ரவிக்கைத்துண்டு, ரூபாய் தட்சணை வைத்துக்கொடுக்க வேண்டும்.🌹

 

🌹🌿 இவ்வாறாக உள்ள பெண்கள் தங்கள் வீட்டிற்குள் அஷ்டலட்சுமிகளையும் அழைத்து அமரச்செய்து வீட்டை சகல பாக்கியங்களுடனும் செழித்தோங்கச் செய்வார்கள்...🌹

எம் அசோக்ராஜா ____

அரவக்குறிச்சிப்பட்டி ____

திருச்சி __620015____

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க