tamilnaduepaper
❯ Epaper

அம்மா பிள்ளை

அம்மா பிள்ளை
Join Whatsapp Channel Join Telegram Channel

சுரேஷ் அம்மா பிள்ளை. சின்ன வயதிலிருந்தே அம்மா முந்தானையைப் பிடித்துக் கொண்டு அம்மா அம்மா என்று அவளையே சுற்றி சுற்றி வந்து வளர்ந்தவன்.

 

மூக்கிலே சளி ஒழுகி கொண்டிருக்கும். அம்மா சலிக்காமல் துடைப்பாள். படுக்கையிலே சிறுநீர் மலம் கழித்து விடுவான். அந்த காலத்தில் பேம்பர்ஸ், டிஷ்யூ பேப்பர் எல்லாம் இல்லை ‌‌அம்மா முகம் சுளிக்காமல் அருவருப்படையாமல் சுத்தம் செய்வாள். படுக்கை விரிப்புகளை துவைத்து போடுவாள்.

 

சிறுவயதில் அம்மாவை மிகவும் தொந்தரவு செய்வான். பள்ளிக்கூடம் போக ,சாப்பிட, குளிக்க எல்லாவற்றிற்குமே அடம் அழுகை.

 

இவனது தொந்தரவு தாங்காமல் இவனது தாயாருக்கு அழுகையே வந்துவிடும். பக்கத்து வீட்டுக்காரர்கள் சமாதானம் செய்தால் "முதலில் எங்க அம்மா அழுவதை நிறுத்தச் சொல்லுங்க"

என்று கத்துவான். இவனால் அவளுக்கு இஸ்ட்டிரியாவே பிடித்து விட்டது.

 

சில நேரங்களில் அம்மா கோபத்தில் அடித்து விடுவார். இதனால் சுரேஷ்ற்கு காய்ச்சல் வந்துவிடும். இதை அறிந்த அவன் பாட்டி இவனை தன் ஊருக்கு அழைத்து சென்று விட்டாள்.

 

மகனைப் பிரிந்து ஒரு வாரம் கூட தாயால் இருக்க முடியவில்லை. ஓடோடி சென்று "இவனைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது" என்று மகனை அழைத்து வந்துவிட்டாள். ‌ ‌ 

 

சுரேஷை அம்மா பொத்தி பொத்தி அங்கே போகாதே இங்கே போகாதே என்று பயமுறுத்தி அவனை நீச்சல் பழகாமல், சைக்கிள் பழகாமல் வளர்த்தான்.

 

சுரேஷின் அப்பா பணியில் உள்ள போது இறந்துவிட வாரிசுக்கு வேலை அடிப்படையில் இவனுக்கு வேலை கிடைத்தது. அம்மாவுக்கு பென்ஷன் கிடைத்தது.

 

சுரேஷ்க்கு திருமணம் நடந்தது. சுரேஷ் மனைவி சுமதி தனிக் குடித்தனம் நடத்த விரும்பினாள்.

அவர்களை நகரத்திலிருந்த சொந்த வீட்டில் தங்க வைத்துவிட்டு கிராமத்துக்கு சென்று விட்டாள்.

 

அங்கே சில காலம் வாழ்ந்த பிறகு முதியோர் இல்லத்தில் சேர்ந்து விட்டாள். சுரேஷ் அவ்வப்போது சென்று பார்ப்பான்.

 

சுரேஷ்க்கு மகன் பிறந்து திருமணம் நடந்தது. பேரன் பேத்தியும் பிறந்தார்கள். 

 

சுரேஷ் அவன் மனைவி சுமதி ஓய்வு பெற்று விட்டார்கள். 

சுரேஷ் ஒரு முறையற்ற நிதி நிறுவனத்தில் தன் ஓய்வூதிய பலன்களை முதலீடு செய்து இழந்து விட்டான்.  

 

அவனது ஓய்வூதியத்திலேயே வீட்டின் பேரில் கடன் வாங்கும் அளவிற்கு பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டான். 

 

இது பிடிக்காத ஓய்வூதியம் பெறும் அவன் மனைவி, தகவல் மென்பொருள் துறையில் பணிபுரியும் மகன், மருமகள் மற்றும் பேரன் பேத்திகள் அவனைப் பிரிந்து சென்னைக்கு சென்று விட்டார்கள். இவர்கள் பிரச்சனை காவல் நிலையம் வரை சென்று விட்டது. அவர்களால் சமரசம் ஏற்படுத்த முடியவில்லை. 

 

அறுபதைக் கடந்த சுரேஷ் மிகுந்த சிரமத்தோடு தனியே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். முதுமையில் தனிமையும் பொருளாதார சிக்கல்களும் அவனை வா‌ட்டி வதைத்தன.

 

முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த தன் தாயிடம் சுரேஷ் அவனுடைய நிலையை சொன்னான். எண்பதைக் கடந்த அந்த தாய் உள்ளம் பதறிவிட்டது.

 

 உடனே அவள் முதியோர் இல்லத்திலிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்து சுரேஷைப் பார்த்துக் கொண்டாள். 

 

இருபது வயதிலே பத்து மாதம் வயிற்றில் சுமந்து வளர்த்த பிள்ளையை எண்பது வயதிலும் தன் உள்ளத்தில் சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அந்த தாய்.

 

க.ரவீந்திரன்,

22 பிள்ளையார் கோயில் வீதி, சாஸ்திரி நகர்,

ஈரோடு - 638002.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க