tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மேற்குத் தொடர்ச்சி மலையில், தொடர்களுக்கு இடையில் ஊஞ்சல் கட்டி ஆடுவதுபோல் அமைந்துள்ள இயற்கைத்தாயின் பொன்மகள்தான் இந்த வால்பாறை.

 

சுற்றிலும் பசுமையான மலைகள் மற்றும் காடுகளுடன் கம்பீரமாக நிற்கும் வால்பாறை, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

 

வால்பாறை அதன் மிகுதியான இயற்கை அழகு காரணமாக *தி செவன்த் ஹெவென்* அதாவது ஏழாவது சொர்க்கம் என்றழைக்கப்படுகிறது. 

 

தென்னிந்தியாவின் சிரபுஞ்சி எனப்படும் சிற்றூரான சின்னகல்லார் இங்கு தான் உள்ளது.தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் அதிகமாக இந்த மலைப்பகுதியில் காணமுடியும்.

 

வால்பாறை செல்லும்போது காண வேண்டிய முக்கிய இடங்கள்;-

 

*ஆழியாறு அணை*

 

 வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை அனைத்து பக்கங்களிலும் உயரமான மலைகளால் சூழப்பட்டுள்ளது

 

*லோம்ஸ் வியூ பாயின்ட்*

 

 ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் ஒன்பதாவது ஹேர்-பின் வளைவில் இந்த வியூ பாயின்ட் அமைந்துள்ளது. 

 

*மானாம்பள்ளி*

 

 சோலையார் அணைக்கும் வால்பாறைக்கும் இடையே அமைந்துள்ள இந்த மானாம்பள்ளி, வால்பாறையில் மலையேற்றம் செய்ய ஏற்றது.அடர்ந்த சோலா காடுகள், வேகமாக ஓடும் ஆறுகள் மற்றும் அழகிய சிகரங்களுக்கு பெயர் பெற்றது மானாம்பள்ளி.

 

*சோலையார் அணை*

ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை. வால்பாறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகான அணை.

 

*நீராறு அணை*

பாசனம் மற்றும் மின்னுற்பத்திக்காகத் துவங்கப்பட்ட அணை. வால்பாறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அடர்த்தியான காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.

 

*சின்னக்கல்லார் அணை*

 

வால்பாறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அடர்த்தியான காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இங்கு அருவியொன்றும் உள்ளது. இந்த அருவியின் சத்தம் சிங்கத்தின் உறுமலைப் போலக் கேட்கும்.

 

*அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி* 

புன்னகை மன்னன் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் இந்நீர்வீழ்ச்சி கேரளத்தில் உள்ளது. வால்பாறையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. வனப்பகுதியின் நடுவில் செல்லும்போது பல்வேறு வனவிலங்குகளையும் காணமுடியும்.

 

*புல்மலை/ கிராஸ் ஹில்ஸ்* 

 

ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் அமைந்துள்ள இயற்கை விரும்பிகளின் சொர்க்கம் புல்மலை. உலகின் வேறு இடங்களில் காணமுடியாத இந்த இயற்கைத் தாயைக் காண ஒவ்வோராண்டும் வெளிநாட்டவர் பலர் வந்து செல்கின்றனர். ஓங்கி உயர்ந்த மலை, அடுத்த பக்கம் அதல பாதாளம், பச்சைப் புல்லை விரித்தாற்போன்ற புல் மலை. இந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இப்பகுதியில்தான் தமிழக அரசு விலங்கான நீலகிரி வரையாடுகள் அதிக அளவில் உள்ளன.

 

*குரங்கு அருவி*

 

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ள குரங்கு அருவியில் குளித்துச் செல்வதற்கு ஒவ்வோராண்டும் பல ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். வால்பாறையைச் சுற்றிலும் 8 அணைகள் உள்ளன. வால்பாறையின் மீதான பார்வை பலருக்கும் படவில்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்காத நிலை உள்ளது.

 

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் 40 ஹேர்பின் வளைவுகள் உள்ளன. பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை அடைய சுமார் 2 மணி நேரம் ஆகும். வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் பழனி, சாலக்குடி, சேலம் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் உள்ளன.

 

கீதா ராஜா சென்னை

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க