tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

எங்கள் ஊர் ஆரல்வாய் மொழியானது கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஆசியாவிலேயே அதிக வேகமாக காற்று வீசக்கூடிய இடம் என்ற சிறப்பு இவ்வூருக்கு உண்டு..

இது கன்னியாகுமரியிலிருந்து 25 கிமீ தொலைவிலும் நாகர்கோவிலிருந்து 13 கிமீ தொலைவிலும் உள்ளது

28.54 கிமீ பரப்பும், 18 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

ஆரல்” என்ற பெயர் வேணாட்டின் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்ட கோட்டையிலிருந்து பெறப்பட்டது, பின்னர் திருவிதாங்கூர் இராச்சியம் கிழக்கு பிராந்தியங்களில் இருந்து படையெடுப்புகளிலிருந்து இராச்சியத்தை பாதுகாக்கிறது. ஆரல்வாய்மொழி என்றால் கிசுகிசுக்கும் காற்று என்றும் கூறப்படுகிறது. இப்பகுதியில் காற்றின் விசில் சத்தம் அத்தகைய பெயருக்கு வழிவகுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆரல்வாய்மொழி கோட்டை திருவிதாங்கூரின் முக்கியமான கோட்டைகளில் ஒன்றாகும். இது உதயகிரி கோட்டை, வட்டக்கோட்டை கோட்டை மற்றும் திருவாங்கூர் கோட்டைகளுடன் 1740 ஆம் ஆண்டு யூஸ்டாசியஸ் டி லானாய் என்பவரால் கட்டப்பட்டது. இக்கோட்டை 1809 ஆம் ஆண்டு வேலு தம்பி தளவாவுக்கு விசுவாசமான வீரர்களிடமிருந்து ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டது. ஆரல்வாய்மொழி கணவாய் மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்கு முனையில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடைவெளி அல்லது மலைப்பாதையாகும். இது பழைய திருவிதாங்கூரை மெட்ராஸ் பிரசிடென்சியுடன் இணைத்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தற்போதைய அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகாக்களை உள்ளடக்கிய நாஞ்சில் நாட்டுப்பகுதிகளை, கி.பி 10-ம் நூற்றாண்டு வரையிலும் ஆய் வம்ச மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். பாண்டிய நாட்டுக்கும், சேர நாட்டுக்கும் இடைப்பட்ட நாடாக ஆய் நாடு இருந்து வந்தது. நீர் மற்றும் நிலவளம் கொண்ட இப்பகுதி அண்டை நாட்டினரைக் கவர்ந்தது. இதன் காரணமாக சங்க காலம் முதல் 18-ம்நூற்றாண்டின் தொடக்கம் வரை நாஞ்சில் நாட்டின் மீது தொடர்ந்து படையெடுப்புகளும், கொள்ளைக் கும்பல்களின் அட்டகாசங்களும் நடந்தன.

எனவே, ஆய் நாட்டின் நுழைவு வாயிலான ஆரல்வாய்மொழிப் பாதையை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஆய் மன்னர்களுக்கு ஏற்பட்டது. எனவே, ஆரல்வாய்மொழியின் இரு பக்கங்களிலும் உள்ள மலைகளை இணைத்து, இங்கிருந்து சுமார் 20 கி.மீ.தூரத்தில் உள்ள கடுக்கரை வரை கோட்டைச் சுவர் எழுப்பபட்டது. இதற்கு ஆரல்வாய்மொழி கரைக்கோட்டை என்று பெயர். பாண்டிய நாட்டு படையெடுப்பில் இருந்து ஆயி நாட்டையும், சேர நாட்டையும் பாதுகாக்கும் அரணாக அமைந்ததால் ஆய் மன்னர்களும், சேர வம்ச மன்னர்களும் இக்கோட்டையைப் புனரமைத்து பாதுகாத்து வந்தனர்.

ஆரம்பத்தில் மண் சுதையால் அமைந்த இக்கோட்டையை, ஆய் மன்னர் கருணானந்தகன் (கி.பி. 851 - 885) புனரமைத்தார். கி.பி. 1729-ல்திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா மகாராஜா ஆட்சியில், ஆரல்வாய்மொழி கோட்டை கற்களைக் கொண்டு மதில் சுவர் கோட்டையாக மாற்றி, குமரி கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டது. இக்கோட்டையின் காரணமாக ஆய் நாடு பலமாக பாதுகாக்கப்பட்டது.

காலப்போக்கில் அடுத்தடுத்த படையெடுப்புகளில் இக்கோட்டைச் சுவர் முழுமையாக இடிந்து போனது. ஒரு சில இடங்களில் இச்சுவர் எஞ்சிநிற்கிறது. மேலும் கோட்டை நுழைவுவாயிலில் இருந்த ஆயுதம் சேமிப்பறை, வரி வசூல் செய்யுமிடம், படை வீரர்கள் தங்குமிடம் ஆகியவை, இன்றளவும் வரலாற்று சாட்சிகளாக எஞ்சி நிற்கின்றன. இக்கட்டிடங்கள், கடந்த 1970-ம் ஆண்டில் ஆரல்வாய் மொழியில் அமைந்த அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு வழங்கப்பட்டு, கல்லூரியின் நூலகம், ஆய்வகங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்துக்கு கல்லூரி இடமாற்றப்பட்டுள்ளது.இக்கோட்டைக் கட்டிடம் சிறந்தவரலாற்று எச்சமாகும். இதனைப் பாதுகாத்து, வருங்கால தலைமுறையினருக்கு வரலாற்று நிகழ்வுகளை தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். 

 

எங்கள் ஆரல்வாய்மொழியில்  மீனாட்சி அம்மன் கோவில்  உள்ளது. மதுரை மீனாட்சி அம்மனுக்கு இருக்கும் இரண்டாவது ஆலயம் இது. இந்த ஆலயத்தின் முதன்மைத்தெய்வம் பரகோடி கண்டன் சாஸ்தா. பின்னர் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் நிறுவப்பட்டனர்.நாகர்கோயில் திருநெல்வேலி சாலையில் ஆரல்வாய்மொழி ஊரில் வடக்கூர் என்னும் துணைப்பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தின் மூலவர் பரகோடி கண்டன் சாஸ்தா. இவர் சுயம்புவாக உருவானவர் என தொன்மம் கூறுகிறது. இங்கே வாழ்ந்த தொண்டைமான் பரவர் என்னும் சமூகத்தினரின் வழிபடுதெய்வமாக இருந்தவர் பரகோடி கண்டன் சாஸ்தா. கண்டன் எனும் தெய்வம் பின்னர் சாஸ்தாவாக ஆகியது என்று ஆய்வாளர் கூறுவதுண்டு. உள்ளூர் கதைகளின்படி வேட்டைக்குச் சென்ற பரவர்கள் முயலை ஈட்டியால் குத்தியபோது ஒரு பாறையில் இருந்து ரத்தம் வந்தது. அந்தப் பாறையில் அவர்கள் கண்டன் சாஸ்தாவை நிறுவி வழிபட்டனர். 

 

மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் இங்கே நிறுவப்பட்டமைக்கு தொன்மக்கதைகள் இல்லை. வரலாற்றின்படி பொ.யு. 1311-ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் பூசகர்கள் ரகசியமாக அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்றும் 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள் என்றும் பிற்காலத் திருவிதாங்கூர் வரலாற்றுக்குறிப்புகள் சில கூறுகின்றன. விஜயநகரப் பேரரசர் குமாரகம்பண நாயக்கர் தன் மனைவி கங்கம்மா தேவியின் கனவில் மதுரை மீனாட்சி வந்து விடுத்த ஆணையின்படி மதுரைமீது படையெடுத்து மதுரையை ஆட்சி செய்த சிக்கந்தர் ஷாவை வென்று மதுரை ஆலயத்தை மீட்டு கட்டியபோது மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் மதுரைக்கு மீண்டும் கொண்டுசெல்லப்பட்டனர். அந்நிகழ்வை கங்கம்மா தேவி எழுதிய மதுராவிஜயம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. ஆனால் மதுரை மீனாட்சி ஆரல்வாய்மொழியில் இருந்தமைக்கு அக்காலம் முதல் இருந்துவரும் நிறுவப்பட்ட நூல்களோ, கல்வெட்டுச்சான்றுகளோ இல்லை என்பதனால் இதையும் ஒரு செவிவழிச் செய்தியாகவே கொள்ளவேண்டும்

 

 

முப்பந்தல் காற்றாலை ஆரல்வாய்மொழி டவுன் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. 1,500 மெகாவாட் (MW) முப்பந்தல் காற்றாலை என்பது நாட்டின் மிகப்பெரிய கடலோர காற்றாலை ஆகும், இது ஆசியாவின் இரண்டாவது பெரிய காற்றாலை ஆகும். இந்த பண்ணை ஆசியாவிலேயே மிகப்பெரியது மற்றும் கிராம மக்களின் தேவைகளுக்கு மின்சாரம் வழங்குகிறது. 

 

2000-ம் ஆண்டு கட்டப்பட்ட பொய்கை அணை, இப்பகுதியைச் சுற்றியுள்ள பாசன நோக்கங்களுக்காக நீர் வழங்கி வருகிறது. முதல் முறையாக 5 நவம்பர் 2021 இல் அணை முழுவதுமாக தண்ணீரால் நிரம்பியது. இது ஒரு அற்புதமான இடமாக மாற்றப்பட்டது 

 

ஆரல்வாய்மொழி தேவச காயம் மவுண்டில் புனித தேவசகாயம், புனித வியாகுல அன்னை ஆலயம் ஆகிய இரட்டை திருத்தலங்கள் உள்ளது.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க