tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

எங்கள் ஊர் காவல்கிணறானது  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும். இது  நாகர்கோயிலிலிருந்து 24 கி.மீ  தொலைவிலும்,   திருநெல்வேலியில் இருந்து 69 கி.மீ  தொலைவிலும்,   திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 99 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 

 

காவல்கிணறு  ஊராட்சி, ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

 

 

இந்த நகரத்தின் வரலாற்றை பின்நோக்கி ஆராயும்போது 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் (கி.பி 1698 இல்) இந்த நகரமானது பாண்டிய வம்சத்தால் ஆட்சி செய்தைக் காணலாம். ஒரு காலத்தில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கல் சுரங்கம், மலர் சாகுபடி, பனைசார் தொழில்கள் போன்றவற்றை முதன்மையாக நம்பி இருந்தது. என்றாலும் தற்போது புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்களை ஏற்று உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையினால் காற்றில் ஏற்படும் திருப்பத்தின் விளைவாக இந்த பகுதியானது ஆயிரக்கணக்கான காற்றாலைகள் கொண்டு இந்தியாவில் பெரிய அளவில் காற்றாலை மின் ஆற்றலை உற்பத்தி செய்யும் பகுதியாக இருக்கிறது. காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி மலையின் கீழ் சரிவுகளில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ஒரு பகுதியான இஸ்ரோ ப்ராபல்ஷன் காம்ப்ளெக்சின் சோதனை வசதிகள் உள்ளன. 

 

காவிரி ஆற்றின் தெற்கிலிருந்து கன்னியாகுமரி வரை பாண்டியர்களின் அரசு நிறுவப்பட்டது. சேரர், சோழர் மற்றும் பாண்டிய நாட்டு வீரர்களுக்கு தண்ணீரை வழங்கிய கிணற்றிலிருந்து இந்த ஊருக்கு இந்த பெயர் உருவானது, இந்த கிணறு இன்றும் இந்த நகரத்தில் பாதுகாக்கப்படுகிறது. காவல்கிணறுவில் வாழும் மக்களின் முதன்மையான சமையமாக கிறிஸ்தவ சமயம் உள்ளது. பிரித்தானியர் ஆட்சியின் போது கத்தோலிக்க சமயம் மெதுவாக (கி.பி 1698) ஆண்டுகாலத்தில் மெதுவாக பரவத் தொடங்கியது. பலர் கிறிஸ்தவத்தை தங்கள் சமயமாக ஏற்றுக்கொண்டனர். சுமார் (கி.பி 1749) காலக்கட்டத்தில் ஒரு சிறிய கத்தோலிக்க தேவாலயம் உள்ளூர் மக்களால் வாராந்திர நற்கருணை சேவைகளை வழங்குவதற்காக கட்டப்பட்டது. பின்னர் (கி.பி 1843) சேக்ரட் ஹார்ட் தேவாலயம் கட்டப்பட்டது, பின்னர் அது தூத்துக்குடி மறைமாவட்டத்தால் ஒரு தனி திருச்சபையாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1897 இல் ஒரு தொடக்கப் பள்ளி துவக்கப்பட்டது; காவல்கிணறு பகுதியியில் உள்ள குழந்தைகள் கல்வி கற்பதற்கு இந்த பள்ளி உதவியது. நாட்கள் செல்லச் செல்ல, நவீன கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் காவல்கிணறு மக்களின் வாழ்க்கை முறை மேம்பட்டுக்கொண்டே வந்தது, மக்கள் பல்வேறு தொழில்களைச் செய்யத் தொடங்கினர். 

 

காவல்கிணறு வெப்பமண்டல பகுதியியில் அமைந்திருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் மிகக் குறைந்த மழைப்பொழிவைப் பெற்றது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி முதல், அந்தக் காலக்கட்டத்தின் பிற்பகுதி வரை, இந்த முழுப் பகுதியும் மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டது. இதனால் வருடாந்திர விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் வாழ்கையானது கேள்விக்குறியானது. அவர்கள் தங்கள் அன்றாட தேவைகளை நிறைவு செய்ய போராடவேண்டிவந்தது; ஆனால் இந்த மிக மோசமான நிலையில், மனம் தளராமல் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக ஒரு நல்ல காலத்தை எதிர்நோக்கி இருந்தனர். 

 

இதன் பிறகு இந்த மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு புலம்பெயரத் தொடங்கினர். இவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாட்டிலும் தஞ்சம் புகுந்தனர். இவர்களில் பலர் சென்னை ,மதுரை, கோயம்புத்தூர், மும்பை, தில்லி, கோவா, துபாய், குவைத், சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிற இடங்களில் வேலை தேடிச் சென்றனர். இவர்கள் எங்கு சென்றாலும் புதிய இடங்களில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள போராடினார்கள். மொழி வேறுபாடு, கலாச்சார வேறுபாடு, தங்குமிட பிரச்சினைகள் மற்றும் முக்கியமாக தொழில் பிரச்சினைகள் போன்ற பல்வேறு சிக்கல்களை அவர்கள் எதிர்கொண்டனர். பலர் சிறு தொழில்களைத் தொடங்கி ஆலைகள், சிறு நிறுவனங்கள், அச்சகம் ஆகியவற்றில் தொழிலாளர்களாக வேலை செய்தனர்; அவர்கள் மளிகை கடைகள், ஆயத்த ஆடையகங்கள், நிதிநிறுவன வங்கிகள், பள்ளிகளில் கற்பித்தல் போன்றவற்றில் பணியாற்றினர் மேலும் தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய எளிதான திறன்களைக் கற்றுக்கொண்டு, தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக்கொண்டனர்.

 

 

இந்த மாபெரும் வாழ்கைப் போரட்டத்திற்கு நடுவில், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேவாலய விருந்தின் போது சந்திப்பதை உறுதி செய்தனர். இந்த நேரத்தில், இவர்கள் தங்கள் நீர் தேவைக்காக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை நிர்மாணிப்பதன் மூலமும், சாகுபடிக்கு கிணறுகள் தோண்டுவதன் மூலமும் தங்கள் பூர்வீகத்தை மீண்டும் உருவாக்கத் தொடங்கினர். இதன்மூலம் விவசாய வளர்ச்சி எய்தப்பட்டது, விளைச்சல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போதிருந்து மக்கள் உபரி விளைச்சலை அனுபவிக்கத்தொடங்கினர். பின்னர் இவர்கள் பொது நூலகங்கள், தேவாலயங்கள் மற்றும் போக்குவரத்துக்கு நல்ல சாலைகள் ஆகியவற்றை அமைத்தனர். இது காவல்கணறுவின் வர்த்தகத்தை எளிதாக்கியது. மறுபுறம், இப்பகுதி குழந்தைகள் அதிக அளவில் கல்வி கற்றனர். இதனால் நல்ல வேலைவாய்புகளை பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றனர். காவல்கிணறு மெதுவாக செழிப்பின் ஏணியில் ஏறியது. 

 

வளர்ச்சியான் காரணியானது மக்களின் வாழ்க்கைமுறையில் பிரதிபலித்தது; அவர்கள் அழகிய வீடுகளையும் புல்வெளிகளையும் அமைக்கத் தொடங்கினர், மேலும் காவல்கிணறு ஒரு சொர்க்கமாகத் தோற்றமளிக்கத்தொடங்கியது. இன்று காவல்கிணறுவுக்கு மக்கள் திரும்பிச் செல்லும்போது, பொதுவாக பிரபலமான தமிழ் பாடலான சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா என்ற ஊருவிட்டு ஊருவந்து என்ற படத்தின் பாடல் அவர்களுக்கு நினைவுக்குவருகிறது. காவல்கிணறுவின் வளர்ச்சி அண்டை நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள பலருக்கும் ஒரு பெரிய ஆச்சரியத்தை அளித்தது; காவல்கிணறுவின் திருப்புமுனையை கண்டு அவர்கள் திகைத்துப் போனர். மெதுவாக அவர்களும் காவல்கிணறுவின் படிகளைப் பின்தொடர்ந்தனர்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க