எங்கள் ஊர் கூடலூர், தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் இரண்டாம்நிலை நகராட்சி ஆகும். இது கம்பம் - குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.தமிழ்நாடும்,கேரளமும் கூடும் ஊரக எல்லையில் அமைந்து இருப்பதால் இவ்வூர் கூடலூர் என அழைக்கப்படுகிறது. கூடலூர் நகராட்சி மேற்குத்தாெடர்ச்சி மாலையின் அடிவாரத்தில் அமைந்து இருப்பதால் இயற்கையான சூழ்நிலையைப் பெற்றுள்ளது..
1901ஆம் ஆண்டில் கிராமப் பஞ்சாயத்தாகத் தொடங்கப்பட்ட எங்கள் கூடலூர் 1952 ஆம் ஆண்டில் பேரூராட்சி நிலைக்குத் தரம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு அரசின்ஆணை (G.O.NO.270 of RD & LA Department RD & LA dated 11.06.04) மூலம் கடந்த 10-07-2004 முதல் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நகராட்சி, தேனியிலிருந்து குமுளி (கேரளா) செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்(NH-220)தமிழ்நாடு மற்றும் கேரளா|கேரளாவின் எல்லைப் பகுதியில் உள்ள நகராட்சி இது. இந்நகராட்சியில் மேலக்கூடலூர், கீழக்கூடலூர், லோயர்கேம்ப் என்கிற மூன்று ஊர்கள் இணைக்கப்பட்டுள்ளது.
இங்கு முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களுக்கு மணிமண்டபம் அமைந்துள்ளது.முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக் நினைவைப் போற்றும் வகையில் தேனி மாவட்டம், கூடலூர் லோயர்கேம்ப் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் 2500 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.1.25 கோடி செலவில் வெண்கலத்திலான பென்னிகுவிக் உருவச் சிலையுடனான மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஈஸ்வரன் காேவில்; விதைப்பண்ணை செல்லும் வழியில் தாமரைக்குளம் பகுதியில் அமைந்துள்ளது.இக்காேவிலை இந்த பகுதியை ஆண்ட பூஞ்சாறு தம்புரான் என்ற குறுநில மன்னன் கட்டினார் என கூறப்படுகிறது.
கூடலூர் வனப்பகுதி பளியன்குடியில் இருந்து 6 கிலாே மீட்டர் தாெலைவில் மங்கள தேவி கண்ணகி காேவில் அமைந்துள்ளது.
பன்னீர் திராட்சை சாகுபடி அதிகம் இப்பகுதயில் செய்யப்படுகிறது.
கூடலூர் to kG பட்டி,KM பட்டி செல்லும் சாலையில் கீழக்கூடலூர் பகுதியில் கூடலூர் தெற்கு காவல் நிலையம்,நகராட்சி அலுவலகம்,கிராம நிர்வாக அலுவலகம்,கால்நடை மருத்துவமணை,அரசு விதைப்பண்ணை ஆகியவை அமைந்துள்ளது.
திருக்கூடலூர்' என்பது எங்கள் கூடலூரின் புராணகாலப் பெயராகும். இங்கு அமைந்துள்ள கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில் பல நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான மதுரைக் கூடலழகர் கோயிலைப் போன்றே இந்தக் கோயிலின் அமைப்பும் உள்ளது.இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகர்’. மாடத்தில்பள்ளிகொண்டிருக்கும் கோலம் அந்தர வானத்து எம்பெருமான் என்னும் பெயருடையது.சிலப்பதிகாரம் இதனை ‘உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்’ என்று குறிப்பிடுகிறது. இதற்கு உரை எழுதும் ‘அரும்பதவுரை’ இதனை ‘ஸ்ரீ இருந்தவளமுடையார்’ என்று தெரிவிக்கிறது. அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் இக்கோயிலுடைய பெருமாளை ‘அந்தர வானத்து எம்பெருமான்’ எனக் குறிப்பிடுகிறார். கருவறை விமானம் அஷ்டாங்க விமான அமைப்பிலேயே உள்ளது. மதுரை மாநகருக்கு கூடல்நகர் என்றொரு பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம், எட்டுப் பிரகாரங்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகாதியர், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், மணவாள மாமுனிகள், விச்வக்சேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகள் கொண்டுள்ளது இக்கோயில்அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் நின்ற கோலத்திலும் மூன்றாவது தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார்.உற்சவர் வியூக சுந்தர்ராஜப் பெருமாள்.
பொதுவாக சைவ சமய கோயில்களில் மட்டுமே நவக்கிரக சன்னதி இருக்கும். வைணவ சமய கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கும். வைணவ ஸ்தலமான இக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது
சேரநாட்டு குறுநில மன்னரான புவனேந்திர ராஜாவால் கட்டப்பட்ட கோயில் இது. பாண்டிய மன்னர்கள் இக்கோயிலுக்குத் திருப்பணிகளை செய்துள்ளனர். இதனை உணர்த்தும்விதமாக கோயில் அர்த்த மண்டபத்தில், பாண்டிய மன்னர்களின் மீன் சின்னமும், சேரநாட்டு குறுநில மன்னரின் ஊதுகுழல் சின்னமும் ஒருங்கே அமைந்துள்ளன.இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமியை ஒட்டித் திருவிழா நடப்பது வழக்கம்
எங்கள் கூடலூரில் அழகிய தொட்டிப் பாலம் உள்ளது தொட்டிப் பாலம் எவ்வளவு அழகு நிறைந்ததோ அதற்கேற்றார்போல் ஆபத்தும் நிறைந்தது. 40 அடி உயரத்தில் இந்த பாலம் அமைந்துள்ளதால், பாலத்தின் மேலே குதித்து விளையாடுபவர்கள் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்’’
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் விவசாயத்தில் செழிக்கும் விதமாக, முல்லைப் பெரியாற்றில் தேவையான நீர் இருப்பு இருக்கும் பட்சத்தில், முல்லைப் பெரியாற்று தண்ணீரை பிரித்து கோம்பை, தேவாரம் உள்ளிட்ட பகுதிகள் பயன் பெறவும், பாசன வசதி பெறவும், 2008ஆம் ஆண்டு 18ஆம் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் 18ஆம் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த 18ஆம் கால்வாய் மூலம் சுமார் 40.80 கிலோமீட்டர் தூரம் கால்வாய் வெட்டி, முல்லைப்பெரியாற்று தண்ணீரை கூடலூர், கம்பம், பாளையம், தேவாரம் வழியாக சுத்தகங்கை ஓடை வரை கொண்டு செல்லப்படுகிறது. மேலும், இக்கால்வாய் தண்ணீரை உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவிலுள்ள 44 கண்மாய்களில் நிரப்பி, நிலத்தடிநீரை பெருக்குவதோடு, நேரடியாக 4 ஆயிரத்து 614.25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. முல்லைப் பெரியாறு அணையில் தேவையான நீர் மட்டம் இருக்கும் பட்சத்தில், தேனி மாவட்டம் மானாவாரி பயிர்கள் ஒரு போகம் பாசன வசதி பெற இந்த பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த 18ஆம் கால்வாயில் தண்ணீர் வரும் காலங்களில், கால்வாயை ஒட்டி உள்ள மக்கள் இந்த தண்ணீரில் குளித்து விளையாடி மகிழ்வது வழக்கம். மேலும், இந்த பதினெட்டாம் கால்வாய் தண்ணீர் செல்லும் பாதையான லோயர் கேம்பில் இருந்து கூடலூருக்கு செல்லும் வழியில் ஒரு பெரும் பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளத்தை தண்ணீர் கடந்து செல்வதற்காக ஒரு பாலம் கட்டப்பட்டது.இந்த தொட்டி பாலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அருகிலும், சுரங்கனாரு அருவியின் அடிவாரத்தில் அமைந்துள்ளதாலும், இந்தத் தொட்டி பாலத்தில் இருந்து அருவியின் முழு அழகையும் ரசிக்க முடியும்.
கம்பம் கூடலூர் இடையே அப்பாச்சிபண்ணை எனும் இடத்தில் திராட்சை தோட்ட சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள திராட்சை தோட்டங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். காய்த்து தொங்கும் திராட்சை கொத்துக்களை பார்த்து ரசிப்பதுடன் புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம். இங்கு சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்கவும், அமர்ந்து புகைப்படம் எடுக்கவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. கொடியில் உள்ள திராட்சைகளை பறித்து அங்கேயே பழச்சாறு தயாரித்தும் விற்பனை செய்யப்படுகிறது.
குழந்தைகளுக்கு இலவசமாக திராட்சைகள் வழங்கப்படுகின்றன. இதனால் இங்கு சமீப காலமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பறவைகள், பாம்புகள் கண்காட்சி, கேளிக்கை விளையாட்டுக்கள் உள்ளிட்ட வசதிகளும் விரிவுபடுத்தப்பட்டன. மேலும் இப்பகுதியைச் சுற்றி ஏராளமான சுற்றுலா வர்த்தக கடைகளும் அதிகரித்து விட்டன.
எங்கள் கூடலூர் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது ஆகும். எங்கள் நகரத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை வேளாண்மையை சார்ந்ததே ஆகும். எங்கள் கூடலூர் நெல் வயல்களால் சூழப்பட்ட அழகிய நகரமாகும். முக்கியப் பயிர்களாக நெல், பருப்பு வகைகள், தென்னை, திராட்சை, காய்கறி வகைகள் பூக்கள், நிலக்கடலை, இஞ்சி மற்றும் பருத்தி போன்றவைகளும் அதிக அளவில் இங்கு பயிரிடப்படுகின்றன. ஊருக்கு முக்கிய நீர் ஆதாரம் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கிடைக்கிறது. பன்னீர் திராட்சை சாகுபடி இங்கு அதிக அளவில் நடக்கிறது.
என்.எஸ்.கே.பொன்னையாகவுண்டர் மேல்நிலைப்பள்ளி,ராஜாங்கம் நினைவு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி,
திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி,
வ.உ.சி.நடுநிலைப்பள்ளி,இந்து நடுநிலைப்பள்ளி,
பூங்கா அரசு நடுநிலைப்பள்ளி,
அரசு கள்ளர் தாெடக்கப்பள்ளி,
ஊ ஒ ஆரம்ப பள்ளி,
காமட்சி அம்மன் தாெடக்கப்பள்ளி போன்ற பள்ளிகள் எங்கள் ஊரில் உள்ளன.
மேலும் எங்கள் ஊரில் முருகன் காேவில் உள்ளது.
பகவதி அம்மன் காேவில்,வழிவிடு முருகன் காேவில்.(கூடலூர் to குமுளி செல்லும் பாதை.) உள்ளது .
பள்ளிவாசல்(கிழக்கு மெயின் பஜாரில் அமைந்துள்ளது.)
C S I தேவாலயம்,Rc தேவாலயம் (கீழக்கூடலூர் 5 வார்டில் அமைந்துள்ளது.)
மாரிமுத்து
சுரைக்காய்ப்பட்டி