tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

எங்கள் ஊர் தேன்கனிக்கோட்டை  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, தேன்கனிக்கோட்டை வட்ட நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். எங்கள் தேன்கனிக்கோட்டை நகரம் சோழர்கள், போசளர்கள் , முகலாயர்கள் மற்றும் பிரித்தானியர்கள் என பல்வேறு பேரரசுகள் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்துள்ளது. தேன்கனிக்கோட்டைசோழர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக இருந்துள்ளது என்பதற்கு 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால கல்வெட்டு கிடைத்துள்ளது. போசளர்கள் கால கட்டிடக்கலைக்கு வேட்டையாடிய பிரான் (பேட்டராய சுவாமி கோயில்) திருக்கோயில் சிறந்த சான்றாகும்.
வேட்டையாடிய பிரான் கோயில் அல்லது பேட்ராய சாமி கோயில் (பேட்டே என்ற கன்னட சொல்லுக்கு வேட்டை என்று பொருள்) என்பது கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள கோயிலாகும். இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. இந்த கோவிலை பற்றிய சிறப்புகளை கந்த புராணம் எனும் நூலில் 8-ஆம் அத்தியாத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
சுமார் 1,501 சகிமீ பரப்பளவு கொண்ட ஓசூர் வனக் கோட்டத்தில் காவிரி வடக்கு மற்றும் தெற்கு சரணாலயம் உள்ளது. இங்கு யானைகள், காட்டெருமைகள், மான்கள், கரடிகள், சிறுத்தைகள், மயில்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.தேன்கனிக்கோட்டை வனச் சரகத்தில் தொழுவபெட்டா, அய்யூர், கெம்பகரை, கொடகரை உள்ளிட்ட பகுதிகளில் நிரந்தமாக 60 யானைகள் உள்ளன.ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், ராயக்கோட்டை, அஞ்செட்டி, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, தளி, உரிகம், ஜவளகிரி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பறவை இனங்கள் உள்ளிட்ட வன உயிரினங்கள் வாழ்கின்றன.நீர் நிலைகளை நாடி யானைகள் கிராமங்களுக்கு வருவதை தடுக்கும் வகையில் வனவிலங்குகளின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இங்குள்ள 7 வனச்சரகங்களிலும் தலா 10 குடிநீர் தொட்டிகளை தனியார் நிறுவனம் மற்றும் தொண்டு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் வனத்துறையினர் அமைத்துள்ளனர்.
தேன்கனிகோட்டை பேரூராட்சிக்கு கிழக்கில் கிருஷ்ணகிரி 65 கிமீ; வடக்கில் ஒசூர் 24 கிமீ; தெற்கில் தருமபுரி 70 கிமீ தொலைவிலும் மாரண்டஹள்ளி 34கிமீ தூரத்திலும் உள்ளது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் 12 கிமீ தொலைவில் உள்ள கெலமங்கலத்தில் உள்ளது.
இந்த ஊர் பழைய பேட்டை, புதுப் பேட்டை என்ற இருபகுதிகளாக உள்ளது. மலைச்சரிவுகளில் மக்கள் வாழும் பகுதி புதுப்பேட்டைஎனப்படுகிறது. பெருமாள் கோயில் உள்ள பகுதி பழைய பேட்டை எனப்படுகிறது.
13.26 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 84 தெருக்களையும் கொண்டது. இது தளி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது
தேன்கனிகோட்டை வட்டம் , தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக தேன்கனிக்கோட்டை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 94 வருவாய் கிராமங்கள் உள்ளன. 

புகழ்பெற்ற வேட்டையாடிய பிரான் கோயில் அல்லது பேட்ராய சாமி கோயில் (பேட்டே என்ற கன்னட சொல்லுக்கு வேட்டை என்று பொருள்) தேன்கனிக் கோட்டையில் உள்ளது. இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது
வேட்டையாடிய பிரான் ஸ்ரீதேவி, பூதேவி உடன் காணப்படுகிறார். இராமர், லட்சுமணன், சீதை, அனுமான் ஆகியோருக்கும் தனிச்சந்நிதி அமைந்துள்ளது. ஆனுமாருக்கு தனிச் சன்னதியும் உள்ளது.
வேணுகோபாலன், ருக்மிணி, சத்யபாமா உடன்சந்நிதியில் காணப்படுகின்றார். ஆழ்வார்கள் சன்னதியும், இராமானுசருக்கு ஒரு தனி சன்னதியும் உள்ளது.இக்கோயிலில் கன்னட பஞ்சாங்கத்தின்படி திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரையில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிர என பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் விழாவில் கூடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தி அன்று திருமஞ்சன உற்சவம் நடைபெறும். மறுநாள் உறியடி உற்சவம் நடைபெறும். 

ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சாமந்தி, ரோஜா, செண்டுமல்லி உள்ளிட்ட மலர்கள் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் திறந்த வெளி மற்றும் பசுமைக் குடில் அமைத்து விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் பூக்களை ஓசூர் மலர் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு செல்கின்றனர்.இங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கும் வியாபாரிகள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்


தேன்கனிக்கோட்டையிலுள்ள பழமையான யாரப் தர்காவில், 75ம் ஆண்டு சந்தன குட உரூஸ் திருவிழா, 3 நாட்கள் அண்மையில் நடந்தது .  அலங்கரித்த யானை மீது, சந்தன குட ஊர்வலம் புறப்பட்டது. அலங்கார வண்டிகள், சிலம்பாட்டம், புக்ரா மற்றும் பேண்ட் வாத்தியங்கள் இசைக்க, மின் அலங்காரங்கள் மற்றும் பூ அலங்காரத்துடன் யானையின் மீது சந்தன குடத்தை வைத்து, தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, நேதாஜி சாலை, நேரு சாலை, மேல்கோட்டை உட்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, யாரப் தர்காவை வந்தடைந்தது. தொடர்ந்து, சந்தன பூச்சு, பூ அலங்காரம், பாத்தியா துவா நிகழ்ச்சிகள் நடந்தன.

 

-லட்சுமணன் சத்திரப்பட்டி

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க