விழுப்புரம் (Vizhuppuram, ஒலிப்புⓘ) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும், ஒரு 'சிறப்பு நிலை நகராட்சி ' ஆகும். இதுவே விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது.[2] 1993 ஆம் ஆண்டில், முந்தைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என உருவாக்கப்பட்டு, பின்னர் 'விழுப்புரம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3]
மாவட்டத் தலைநகர் எனும் தகுதி, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை அடங்கிய பெருந்திட்ட வளாகம், ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடங்கள், பிரம்மாண்ட பேருந்து நிலையம், விரிவுபடுத்தப்பட்ட இரயில் சந்திப்பு, புறவழிச்சாலை, அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என முன்னேற்றமடைந்து வருகிறது.
இந்நகரம், திருச்சி – சென்னை சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 45-இன் மற்றும் வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் - தூத்துக்குடி சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 38-இன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது. இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது; மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் (பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது.
விழுப்புரத்தின் முக்கிய வருமானம் விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆகும்.
: தென்னாற்காடு மாவட்டமாகவும், கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்த விழுப்புரம், 30 செப்டம்பர் 1993ஆம் ஆண்டு அன்று, தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. விழுப்புரம் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக
: இவ்வூரின் அமைவிடம் 11.941°N 79.493°E ஆகும்.[7] தக்காண இந்தியாவின் தென் கிழக்குப்பகுதியிலும் அமைந்துள்ளது. பாண்டிச்சேரி, இதன் வங்கக் கடற்சார்ந்த எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இங்கிருந்து சென்னை சுமார் 160 கி.மீ. தொலைவிலும், திருச்சி 160 கி.மீ. தொலைவிலும், சேலம் 144 கி.மீ. தொலைவிலும், பாண்டிச்சேரி சுமார் 40 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலை 63 கி.மீ. தொலைவிலும், கடலூர் 47 கி.மீ. தொலைவிலும், வேலூர் 130 கி.மீ. மற்றும் ஆரணி 92 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.[8]
பெயர்க்காரணம்
: சோழர்கள் காலம் வரையில், பிரம்மதேயமாயிருந்த நடுநாட்டுச் சதுர்வேதிமங்கலத்தில், அப்புறம் காடவராயர் ஆட்சி ஏற்பட்டு, அதற்கும் அப்புறம் பாண்டியன் பிடித்தபோது, விழுப் அங்கே நிர்வாகத்தில் முக்கியமான ஸ்தானம் வகிக்கிற சமூகமாக ஆகி, அதனால் தான் ஊருக்கே, 'விழுப்புரம்' என்று பேர் மாறியிருப்பதாகத் தோன்றுகிறது" - என விழுப்பாதராயர் எனப்படுவோர் குறித்தும் விழுப்புரம் குறித்தும் நினைவில் வாழும் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகரேந்திரர் அளித்துள்ள விளக்கம் (நூல்: காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம்) இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் வழிவந்த, வீரராசேந்திரக்காரனை, 'விழுப்ராயன் எனும் படைத்தலைவன்' என்று அபிராமேசுவரர் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
ஜெயன்கொண்ட சோழ விழுப்பராய நாடாழ்வான்' என்கிறது திருநாவலூர்க் கல்வெட்டு. முதலாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாக விளங்கியவன் "ஆதிநாதன் விழுப்பரையன்".[5] அவனை வாழ்த்தி "கரணை விழுப்பராயன் மடல்" (அ) "ஆதிநாதன் வளமடல்" பாடினார் ஜெயங்கொண்டார்.
விழுப்பராயன் என்பவனின் ஆளுகைக்கு உட்பட்டப் பகுதியாக விழுப்புரம் இருந்துள்ளது என்பதற்கு மேற்கண்டவை சான்றாதாரமாக உள்ளன. வணிகர்கள் பெருமளவில் வாழ்ந்த ஊர்கள், 'புரம்' என்று பின்னொட்டால் அழைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வகையில், முன்னொரு காலத்தில், 'விழுப்புரம்' வணிக நகரமாக இருந்திருத்தல் எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கும் ஊர்; அறியாமையில் இருந்து விழிப்பைத் தரக்கூடிய ஊர் - விழுப்புரம்‘ என்கிறார் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திரர்.
‘விழுப்புரம் என்றால் விழுமியபுரம்‘ என்று பொருள் தருவார் கிருபானந்த வாரியார்.
‘இராமன் வில்லைப் பிடித்துப் பொன்மனை நோக்கி அம்பு எய்த இடம் என்பதால், இந்த இடம் வில்லுப்புரமாயிற்று‘ என்பார் திருக்குறளார் வீ.முனுசாமி.
இந்தப் பெருமைகள் ஒருபுறமிருந்தாலும், விழுப்புரத்திறக்கு வரலாற்று ரீதியிலானப் பெயர்க்காரணங்களும் இருக்கின்றன;
பல்லவப் பேரரசன் நிருபதுங்க வர்மன்', இப்பகுதிக்கு, 'விஜயநிருபதுங்க செய்ந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம்' எனத் தனது பெயரை இட்டு, நான்கு வேதமும் ஓதும் அந்தணர்களுக்கு, தானமாக வழங்கியிருக்கிறான்.
'ஜனநாதச் சதுர்வேதி மங்கலம்' என தனது பெயரை இந்தப் பகுதிக்குச் சூட்டிய முதலாம் இராசராசன், அந்தணர்களுக்கு மானியமாகவும் வழங்கியிருக்கிறான்.
விஜயநிருபதுங்க செய்ந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம், ஜனநாதச் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலம் (1265) முதல் விழுப்பராயபுரம்-விழுப்புரம் என அழைக்கப்பட்டு வருகிறது.
மேலும் விழுப்புர வாசிகளால், பரந்த நிலப்பரப்பை சுட்டுமாறு, பெரிய விழியுடைய "விழிமா நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
ழுப்புரம் நகராட்சியானது, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
போக்குவரத்து.
விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம் இயங்கி வருகிறது. இதன் மூலம் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[12]
* விழுப்புரம் நகராட்சியானது சாலை போக்குவரத்து மற்றும் தொடர்வண்டி போக்குவரத்து மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் நகரில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் ஆகும். புதிய பேருந்து நிலையமானது, தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். சென்னையிலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் தென்தமிழகமான திருச்சி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் விழுப்புரத்தின் வழியாகச் செல்கின்றன
இங்கிருந்து சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, காஞ்சிபுரம், புதுச்சேரி, பெங்களூரு, சேலம், திருத்தணி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருப்பூர், கள்ளக்குறிச்சி, ஜெயங்கொண்டம், கடலூர், அரியலூர், நெய்வேலி, பெரம்பலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம், ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய முக்கிய நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளன
தொடர் வண்டி போக்குவரத்து.
விழுப்புரம் இரயில் நிலையம்
விழுப்புரம் தொடருந்து நிலையமானது மிகப்பெரிய தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின், தமிழ்நாட்டின், தென்னக இரயில்வேயின் முக்கியமான தொடருந்து நிலையமாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையையும், தென்தமிழகத்தினையும் இணைக்கும் மிகமுக்கியமான இணைப்பு நிலையமாகத் திகழ்கிறது. இது தென்னக இரயில்வேயின் ஐந்து முக்கியமான தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகும்.[13][14] விழுப்புரத்தில் இருந்து ஐந்து கிளைகளாக இரயில் பாதைகள் பிரிகின்றன
வானூர்தி நிலையம்
இங்கிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள புதுச்சேரி வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையமாகும்.
ஶ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவில்
: விழுப்புரம் விஸ்வநாத சாமி கோவில்.
ஆகிய கோவில்கள்,
விழுப்புரம் நகரத்தில் உள்ளன.
திருவிழா
கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் திருவிழா வருடந்தோறும் சித்திரைத் திங்கள் பௌர்ணமி நாளன்று நடைபெறுகிறது.[15]
தென்பெண்ணை ஆறு திருவிழா
மேல்மலையனூர் அங்காள பரமேசுவரி மயானக் கொள்ளை
சுற்றுலாத்தலங்கள்:
செஞ்சி கோட்டை
செஞ்சி மதிற்சுவர்
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி
சிங்கவரம்
வேங்கடரமணா கோயில்
மண்டகப்பட்டு
மைலம்
திருவக்கரை
திருவெண்ணைநல்லூர்
மரக்காணம் கடற்கரை
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, முண்டியம்பாக்கம்.
அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம்.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, விழுப்புரம்.
அரசு சட்டக் கல்லூரி, விழுப்புரம்.
மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த பிரபலங்களை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ராமதாஸ்
:பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்.
செஞ்சி ராமசந்திரன்
தமிழகத்தின் மூத்த முக்கிய அரசியல்வாதி.
நீலகண்டன்
எம். ஜி. ஆரின் ஆஸ்தான இயக்குனராக கருதப்பட்ட பழம்பெரும் இயக்குனர் நீலகண்டன்
-வ. வாசுதேவன்,
நங்கநல்லூர்,
சென்னை 600 061.