tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

எங்கள் ஊர் வெள்ளகோவில் வெள்ளகோவில் திருப்பூர் மாவட்டத்தில், உள்ள ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12,157 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 40,359 ஆகும். மக்கள்தொகையில் 20,158ஆண்களும், 20,201 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 81.3% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,002 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3438 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 924 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். 

 

எங்கள் வெள்ளகோவில் நகரம் காங்கேயம் வட்டத்தில் உள்ள அழகிய நகராகும்.வெள்ளக்கோவில் கிராம பஞ்சாயத்து 1938 இல் நிறுவப்பட்டது. பஞ்சாயத்து நகரம் 1954 இல் நிறுவப்பட்டது மற்றும் 1963 இல் முதல் தர பஞ்சாயத்து நகரமாக தரம் உயர்த்தப்பட்டது.. பிப்ரவரி 22, 2009 வரை, இந்த நகரம் ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இருந்தது. பின்னர் கோவை, ஈரோடு மாவட்டங்கள் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களாக மறுசீரமைக்கப்பட்டதால் திருப்பூரின் கீழ் வந்தது.இந்த நகரம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கும், ஈரோடு மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. 

 

இது ஒரு தொழில்மயமான நகரம் ஆகும்.  பாரம்பரிய விவசாயம் பெரும்பாலான மக்களின் தொழிலாக உள்ளது. கரூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல விசைத்தறி நெசவு பெட்ஷீட்கள், தரை விரிப்புகள் மற்றும் பருத்தி பொருட்கள் உள்ளன.

வெள்ளக்கோவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பாரதியார் பல்கலைக்கழகம் கோவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. சேனாதிபதி நல்லம்மை தகவல் தொழில்நுட்பக் கல்லூரியும் அமைந்துள்ளது. மேலும் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, ஏஎன்வி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, சத்யம் மாண்டிசோரி பள்ளி, எஸ்.ஜி. வலசு, ஜெயம் வித்யா மெட்ரிக். மணி. நொடி பள்ளி, பாலா மெட்ரிக். மணி. நொடி பள்ளி, புனிதா அமலா அன்னை மெட்ரிக். மணி. நொடி பள்ளி, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சி மெட்ரிக் மணி நொடி மேல்நிலைப் பள்ளி, பரத் மெட்ரிக் பள்ளி, ஓலப்பாளையம், ஆனந்த வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஞானசம்பந்தர் மெட்ரிக் நடுநிலைப்பள்ளி, புதுப்பை ஆகிய பள்ளிகள் அமைந்துள்ளது. 

 

திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் வெள்ள கோவிலும் ஒன்று. 321 கி.மீ. தூரம் கொண்ட கோவை - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூ ரின் ஒரு பக்க எல்லையில் அமைந்துள்ளது வெள்ளகோவில் நகரம். திருச்சி, கரூர் வழியாக திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் கேரளா செல்லும் வாகனங்களுக்கு தவிர்க்க இயலாத பகுதியாகவும் விளங்குகிறது. 

 

வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. காங்கேயம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வெள்ளக்கோயிலில் இயங்குகிறது.

வெள்ளகோவிலில் கரூர் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. அருகிலேயே வேளாண்மை துறை அலுவலகம்,கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், நில வருவாய் அலுவலர் அலுவலகம், சட்டமன்றத் தொகுதி அலுவலகம்,பயணியர் விடுதி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளன. 

 

வெள்ளக்கோவிலில் சிவ லோகநாதர் கோவில் அமைந்துள்ளது.

வெள்ளக்கோவில் பகுதியில் சிவலோகநாதர் திருக்கோவில் பல ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு உணவால் சைவர்களாக உள்ளவர்கள் பூவும் நீரும் கொண்டு இறைவனை வழிபட வகை செய்துள்ளார்கள். பன்னிரு திருமுறைகளை ஒதி சிவனை தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. நால்வர் குருபூஜைகளும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வாரவழிபாடு பிரதோசம் நடராசர் அபிசேகம் அடியார்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

 

வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில் எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் ஒவ்வொரு பிரதோஷத்தையொட்டியும் சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் சிறப்பாக நடைபெறும். 

 

எங்கள் வெள்ளக்கோவிலில் புகழ்பெற்ற வீர குமாரசாமி திருக்கோவில் அமைந்துள்ளது.இங்கு மூலவர் வீரக்குமாரசாமி. 54' உயரங்கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரமும், மூன்று நிலை கொண்ட 35' உயர உள்கோபுரமும் கொண்டுள்ளது.இக்கோயிலில் பொட்டிலி வழிபாடு மிகுந்த சிறப்புப் பெற்றது. இக்கோயிலின் தல விருட்சம் காக்கராட்டான் மரம் ஆகும்.தமிழ் மாசி மாதத்தில் சிவராத்திரி அன்று தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெறும்.

2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தொகுதி மறு சீரமைப்பின்போது, வெள்ளக்கோவில் தொகுதி, காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.விவசாயம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலை, தேங்காய் பருப்பு உலர் களம், கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. கீழ்பவானி பாசனம் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனம் வாயிலாக விவசாயம் நடைபெறுகிறது. காங்கயத்தில் 700-க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மற்றும் தேங்காய் பருப்பு உலர்களம், 300-க்கும் மேற்பட்ட அரிசி உற்பத்தி ஆலைகள் உள்ளன.

வெள்ளகோவில் பகுதியிலும் கணிசமான எண்ணிக்கையில் தேங்காய் உலர் களங்களும் 5,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களும் உள்ளன.

 

சசிதரன் 

குடியாத்தம்

ராசி பலன்

மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். பயணங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் உண்டாகும். ஆரோக்கியம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். தந்தை... மேலும் படிக்க

உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். சமூகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப்... மேலும் படிக்க

சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வேகத்தை விட விவேகம் உயர்ந்தது என்பதை புரிந்து கொள்வீர்கள். எளிமையான பணிகள் கூட... மேலும் படிக்க

மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வர்த்தக வியாபாரத்தில் பொருள் வரவுகள் மேம்படும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.... மேலும் படிக்க

இழுபறியாக இருந்துவந்த வந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தாய் மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை... மேலும் படிக்க

வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் புதுவிதவிதமான அனுபவங்கள் ஏற்படும். இலக்கிய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய... மேலும் படிக்க

குடும்ப பெரியோர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வாகனம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு கட்டுவது சார்ந்த... மேலும் படிக்க

உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் மூலம் வியாபாரத்தில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். புதிய வீடு மற்றும்... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். செய்யும் முயற்சிக்கு உண்டான வெற்றிகள் கிடைக்கும்.... மேலும் படிக்க

செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை வெற்றிகொள்வீர்கள். எதிர்பார்த்து இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் ஆதரவுகள் மேம்படும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.... மேலும் படிக்க

வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் சில விரயங்கள் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான... மேலும் படிக்க

வியாபார பணிகளில் சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். சமூகப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். எந்த ஒரு... மேலும் படிக்க