tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

இப்போது பரவலாக வேப்பனஹள்ளி என்று அழைக்கப்படும் எங்கள் ஊர் வேப்பனப்பள்ளியானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய ஊராகும் இது வேப்பனபள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகராகவும்  உள்ளது

இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள் உள்ளன. 

 

எங்கள்  ஊரின் பழமையான பெயராக வேப்பம் பள்ளி, செடில சமுத்திரம் ஆகியவை உள்ளன. கிருஷ்ணகிரி வட்டம் மேகலம்சின்னம் பள்ளியில் கிடைத்த 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் வேப்பம் பள்ளியான செடில சமுத்திரத்தை என்ற சொற்றொடரால் இந்த ஊர் குறிக்கப்பட்டுள்ளது. வேப்பம் பள்ளி என்பதில் உள்ள வேப்பம் என்ற சிறப்புக் கூறிலிருக்கும் மகரம் னகரமாக திரிந்து பிற்காலத்தில் மாறியுள்ளது

எங்கள் வேப்பனப்பள்ளி மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும்,[மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 252 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீா் தேவைக்காக மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டத்தின் மூலம் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளுக்கு தற்போது  குடிநீா் வழங்கல் செய்யப்பட்டு வருகிறது. 

 

வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பீமாண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஓட்டூர், பாறையூர், கொல்லப்பள்ளி, மாரிகவுண்டனூர், சோமநாதபுரம், கங்கசந்திரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டவை. பெரும்பாலானோர் சிறு, குறு விவசாயிகள் ஆவர். இப்பகுதிகளில் சுமார் 800 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். 

 

இங்கு விளையும் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை குருபரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி, சூளகிரி, ஒசூர் பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேலும் விவசாயம் அல்லாத நேரங்களிலும், நிலமற்றவர்களும் மேற்சொன்ன பகுதிகளுக்கு கட்டட வேலைகளுக்கு செல்கின்றனர். 

 

இக்கிராமங்களுக்கு அருகில் ஓடும் மார்க்கண்டேயா நதி  (இது கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் கலக்கிறது) கே.ஆர்.பி அணையில் சென்று கலக்கிறது.

எங்கள் வேப்பனபள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். ”வேப்பனஹள்ளி” என்றும் சில இடங்களில் வழங்கப்படுகிறது. இந்த வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி 2011-ஆம் ஆண்டு முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்து 54-ஆவது வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியாக பிரிக்கப்பட்டது. வேப்பனப்பள்ளி தொகுதி பரப்பளவில் மிகப்பெரியது ஆகும். தமிழகத்திலேயே தமிழகம், ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களின் மூன்று மாநில எல்லைகளையும் கொண்ட ஒரே தொகுதி வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியாகும்.

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் வேப்பனப்பள்ளி, சூளகிரி, உத்தனப்பள்ளி ஆகியவை முக்கிய நகரங்களாக உள்ளன. இத்தொகுதியில் சூளகிரி ஒன்றியத்தின் 36 ஊராட்சிகளும், வேப்பனபள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் 24 ஊராட்சிகளும், கெலமங்கலம் ஒன்றியத்தின் 3 ஊராட்சிகளும் என மொத்தம் 73 ஊராட்சிகளை கொண்டுள்ளது. இத்தொகுதியில் ஓசூர் வட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் மற்றும் கிருஷ்ணகிரி வட்டங்களின் பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த தொகுதி மக்களின் பேசும் மொழியாக தமிழ், தெலுங்கு, உருது, கன்னடம், ஆங்கிலம் ஆகியவை உள்ளன.2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 50 ஆயிரத்து 657 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 604 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 21 பேர் உள்ளனர். 3ம் பாலினத்தனவர் 32 பேர் உள்ளனர்.

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் வேப்பனப்பள்ளி, சூளகிரி, ராயகோட்டை, உத்தனப்பள்ளி ஆகியவை முக்கிய நகரங்களாக உள்ளன. 

 

மேலும் தமிழகத்தில் எந்த ஒரு பேருராட்சி, நகராட்சி, மற்றும் மாநகராட்சி இல்லாமல் ஊராட்சிகளை மட்டுமே கொண்டுள்ள ஒரே தொகுதி வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியாகும். இத்தொகுதியில் சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகள், வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகள், கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 3 ஊராட்சிகள் என மொத்தம் 73 ஊராட்சிகளை கொண்டுள்ளது. 

 

எங்கள் வேப்பனபள்ளி மக்களின் வாழ்வாரம் விவசாயம் மட்டுமே. எங்கு சுற்றி திரும்பி பார்த்தாலும் பச்சை பசலேன்று விவசாயம் மட்டுமே காணப்படும். மேலும் தமிழகத்தின் மாம்பழத்தின் முதன்மை மாவட்டமாக திகழும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சதவீத மாம்பழம் வேப்பனப்பள்ளி தொகுதியில் இருந்து தான் சாகுபடி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல்  சூளகிரி, ராயக்கோட்டை ஆகிய பகுதிகளில் விவசாயம் பிரதானமாக தொழிலாக உள்ளது. மேலும் இந்த பகுதிகளில் காய்கறிகள் உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகளவில் இருந்து வருகிறது.ஆந்திரா, கர்நாடக மாநில வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை கூட்டத்துக்கு வேப்பனப்பள்ளிதான் வழித்தடமாக உள்ளது, இவ்வாறு யானைகள் செல்லும் போது விவசாய பயிர்களை நாசமாக்கி விடுகின்றன

எங்கள் வேப்பனபள்ளியில் புகழ் பெற்ற கீரம்மா  திருக்கோயில் உள்ளது.

தமிழக- ஆந்திரா மாநில எல்லையில் உள்ள கீரம்மா கோவிலில் நேற்று இருமாநில நட்புறவை போற்றும் வகையில் 2 மாநில மக்கள் இணைந்து சிறப்பு வழிபாட்டை நடத்துகின்றனர். 

 

வேப்பனப்பள்ளி அருகே உள்ளது சின்னகொத்தூா் கிராமம். இந்தக் கிராமத்தில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பிற்காலச் சோழா் காலத்திய கட்டடக் கலை அமைப்பைக் கொண்டதாகும்.அதேபோல இந்தக் கிராமம், ஓய்சாள மன்னன் வீர ராமநாதனின் குந்தாணி ராஜ்ஜியத்தின் தலைநகராகவும் இருந்துள்ளதாக பிற கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. கோயிலில் படி எடுக்கப்பட்ட 15 கல்வெட்டுகள், அந்த கோயிலின் சிறப்பை நமக்குத் தெரிவிக்கின்றன. 

 

மேலும் எங்கள் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதி முட்லு கிராமத்தில்  பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோதண்ட ராமர் திருக்கோயில் உள்ளது

இக்கோயிலின் வாயிலானது வடதிசை நோக்கி அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தகுளமானது அழகிய கட்டமைப்புடன் சிறப்பாக அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் மடப்பள்ளியும், மண்டபங்களும் அமைந்துள்ளன.

கருவறையில் வில்லேந்திதிய கோதண்டராமர், சீதை, இலக்குவனுடன் அழகுற காட்சியளிக்கின்றனர்.[2] இக்கோயிலின் தேரானது கற்சக்கரத்த்தால் பூட்டப்பட்டு மார்ச் மாத பௌர்ணமி நாளில் தேர்திருவிழா நடக்கிறது.இக்கோயிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. குறிப்பாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மிகச்சிறப்பாக வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாசிமாதம் பௌர்ணமியன்று ஆண்டு

திருவிழா நடத்தப்படுகிறது.இதையோட்டி ஒன்பது நாட்கள் விழா நடத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி நகரில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் வேப்பனப்பள்ளி உள்ளது. வேப்பனப்பள்ளியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, சாலையை ஒட்டியவாறு கோயிலின் தோரணவாயில் அமைந்துள்ளது.

 

-முத்துகிருஷ்ணகுமார் தஞ்சாவூர்

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க