tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கந்த சஷ்டி விழா முருகன் ஆலயங்களில் களை கட்டியுள்ளது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கியுள்ளனர். சூரனை வேல் கொண்டு வதம் செய்த முருகனின் வெற்றி யை போற்றும் விதமாக திருச்செந்தூரில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் கொண்டாடப்படுகிறது. 

ஐப்பசி அமாவாசைக்கு மறுதினம் பிரதமை யில் விர தம் தொடங்கி ஆறு நாட்கள் அன்ன ஆகாரம் இன்றி விரதம் இருந்து முருகனை வணங்கு கின்றனர். ஆறாம் நாள் சூரசம்ஹா ரம் முடிந்து விரதம் முடிக்கும் பக்தர்கள் வெற்றிக்கு அடை யாளமாக திருக்கல்யாணம் முடிந்து தங்கள் ஊர் திரும்புகின்றனர். காலம் காலமாக கொண்டாடப்படும் சூரசம்ஹாரத் தின் புராண கதையினை நாம் பார்க்கலாம்.

புராண கதை:
******
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்த தோன்றிய அக்னியில் உருவானவர் ஆறுமுகப் பெருமான். சரவணப்பொய்கையில் இருந்த தாமரை மலர்களில் குழந்தைகளாக உருமாறி கார்த்திகைப் பெண்களின் கை பட்டு கந்தனா க வளர்ந்தார். அவரது அழகு அனைவரையும் கவர முருகன் ஆனார். முருகன் அவதாரமே சூரனை சம்ஹாரம் செய்வதற்காகத்தான் என்பதை உணர்த்துகிறது புராணம்.

சூரபத்மன் யார்? தேவர்களை எதிர்க்கும் அள விற்கு தெம்பு எப்படி வந்தது? அவன் செய்த கொடுஞ்செயல்கள் என்ன சூரபத்மனை சுப்ரமணியர் எப்படி வதம் செய்து வெற்றி கொண்டார் என்று பார்க்கலாம்.

சூரபத்மனின் சகோதரர்கள்:
**********
கஷ்யப முனிவருக்கும், மாயைக்கும் பிறந்த பிள்ளைகள், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். சூரபத்மனுக்கு அசுரமுகம். தாரகனுக்கு யானைமுகம். சிங்கமுகனுக்கு சிங்கமுகம். இவர்கள், குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று, சிவனை நோக்கித் தவமி ருந்தனர். தவப்பயனாக 1008 அண்டங்களை யும் ஆட்சிசெய்யும் வரம் பெற்றனர். சூரியன், சந்திரன், அக்னிதேவன், குபேரன் முதலிய தேவர்கள் அனைவரும், அசுரர்களின் பணியா ளர்களாக மாறினர்.

சிவனின் நெருப்பு பொறிகள்:
************
தேவர்கள் பிரம்மாவிடம் சென்று தங்கள் நிலை யைச் சொல்லி வருந்தினர். சூரபத்ம னை அழிக்க சிவனால் மட்டுமே முடியும். அதனால் அவரிடம் முறையிட்டால் விடுதலை கிடைக்கும் என்றார் பிரம்மா. தேவர்களும், கயிலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். அவருக்கு சத்யோஜாதம், வாமதேவம், தத்புரு ஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்கள் உண்டு. அவற்றில் இருந்து. ஆறு நெருப்புப் பொறிகளை உண்டாக்கினார்.

சூரசம்ஹாரம்:
******
அவை சரவணப்பொய்கையில் விழுந்து, குழ ந்தைகளாக மாறின. கார்த்திகை பெண்கள் வளர்க்க அவற்றை அன்னை பார்வதி ஒன்று சேர்த்த போது, கந்தன் ஆனார். அழகான அவர் முருகன் ஆனார். திருச்செந்தூரில் சூரபத்ம னை போரிட்டு வென்று தேவர்களை காத்தார். ஐப்பசி மாதம் சஷ்டி திதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததாக ஐதீகம். அதனால், கந்த சஷ்டிய ன்று முருகன் கோவில்கள் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

வேல் கொடுத்த பார்வதி:
*********
முருகப்பெருமானுக்கு அன்னை பார்வதி தன் சக்தி மிகுந்த வேலை கொடுக்க, சூரபத்மனு க்கு எதிரான போருக்கு புறப்பட்டார். திருச்செ ந்தூரில் தன் படை பாசறையை அமைத்தார். பார்வதி தேவியின் பாத சிலம்பில் இருந்து தோன்றிய நவசக்தியர்களிடம் இருந்து நவ வீரர்களான வீரபாகுதேவர், வீரகேசரி, வீர மகேந்திரர், வீர மகேசுவரர், வீர புரந்தரர், வீரா க்கதர், வீர மார்த்தாண்டர், வீராந்தகர், வீர தீரர் மற்றும் லட்சம் வீரர்களும் தோன்றி முருகனி ன் படைத் தளபதிகளாக விளங்கினர். சூரப துமனையும் அவனுடன் சேர்ந்த அசுரர்களை யும் அழித்து தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து தர்மத்தை நிலைநாட்ட புறப்படுவாயா க என்று கந்தனுக்கு, சிவபெருமான் அன்பு கட்டளையிட்டார்.

தாரகாசூரன் சம்ஹாரம்:
*********
வெற்றி சங்கு முழங்கியது. மலர் மாரி பொழி ந்தது. தேவசேனாபதியின் பெரும்படை செல் லும் வழியில் கிரவுஞ்சமலை எதிர்பட்டது. அந்த மலைக்கு அதிபதியான சூரபத்மனின் தம்பியாகிய தாரகாசூரனை சம்ஹாரம் செய் து அவன் மார்பில் அணிந்திருந்த திருமாலின் சக்ராயுதமாகிய செம்பொன் பதக்கத்தை முருகன் பெற்றார்.

சூரபத்மன் மகன் பானுகோபன்:
************
முருக பெருமானின் படைகள் ஆரவாரத்துடன் புறப்பட்டனர். சூரபத்மன் மகன் பானுகோபன் புறப்பட்டு வந்து முருக பெருமான் படையோடு போரிட்டு படுதோல்வி அடைந்து புறமுதுகு காட்டி ஓடினான். 3ஆம் நாள் போரில் பானுகோ பன் கொல்லப்பட்டான். அடுத்து சிங்கமுகா சூரன் சிங்கமென சீறிப் பாய்ந்து போர்க்களம் வந்தான். ஆனால் முருகபெருமானின் வேல், சிங்கமுகாசூரனை சம்ஹாரம்செய்து அவனும் கொல்லப்பட்டான்.

அடுத்து சூரபத்மனின் தலைமை அமைச்சர் தருமகோபன், சூரபத்மன் மக்கள் மூவாயிரம் பேரும் கொல்லப்பட்டனர். முடிவில் எஞ்சி நின்றது சூரபதுமன் மட்டுமே.

சூரசம்ஹாரம்:
******
பெரும் படையுடன் சூரபத்மன் போருக்கு வந் தான். மிக அற்புதமாக மாயப் போர் புரிந்தான். முருகனது வேலில் இருந்து தப்பிக்க மிருகங்க ள், பறவைகள், மரங்கள் என மாறி மாறி மாய த்தால் தப்பினான். முருகனின் சக்தி வேல் திருச்செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் மாமரமாக மறைந்திருந்த சூரப த்மனை இருகூறாக பிளந்து சம்ஹாரம் செய் தது. சூரபதுமன் ஆணவம், அகங்காரம் ஒழி ந்தது. இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறி முருகப்பெருமான் கொடியாகவும் வாகனமாகவும் மாறியது.

புனித நீர் நாழிக்கிணறு:
**********
சூரனை சம்ஹாரம் செய்த முருகனது வேல் கங்கைக்கு சென்று நீரில் மூழ்கி தோஷம் நீங்கி மீண்டும் முருகனது கைகளில் வந்தது. அதை கடற்கரை ஓரத்தில் பூமியில் குத்த, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளிவந்தது. அந்த நீர்தான் நாழிக்கிணறு நீரானது. அந்த நீரையும், மணலையும் சேர்த்து சிவலிங்கம் செய்து முருகன் பூஜை செய்தார். விண்ணும் மண்ணும் குளிர்ந்தது. தேவர்கள், முனிவர்கள் மலர் மாரி பொழிந்தனர்.

முருகன் தெய்வானை திருக்கல்யாணம்:
***************
தேவாதி தேவர்கள் புடைசூழ திருப்பரங்கு ன்றம் என்ற தலத்துக்கு முருக பெருமான் வந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த ஆறு முனிவர்களுக்கு திருவருள் புரிந்தார். ஆறு முனிவர்களும் முருக பெருமானை தேவ தச்ச னால் நிர்மாணிக்கப்பட்ட பொன் வண்ண கோவிலினுள் எழுந்தருள செய்தனர்.

தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வானை யை மணம் முடிக்க விரும்பினார். திருப்பரங்கு ன்றத்திலே மங்கள மண நாள் அன்று ஈரேழு பதினான்கு லோகங்களும் வியக்கும் வண்ண ம் இந்திரனும் அவன் மனைவி இந்திராணி யுடன் தெய்வானையின் கை பிடித்து முருகனி டம் ஒப்படைத்தனர். திருமணம்  அற்புதமாக நடந்தேறியது. சிவபெருமான் பார்வதிதேவி யை முருகன்-தெய்வானை மூன்று முறை சுற்றி வழிபட்டனர். பின் நால்வரும் திருமணத் துக்கு வந்த அனைவரையும் ஆசீர்வதித்தனர்.

கந்தா சரணம்...
கதிர் வேலா சரணம்...
ஷண்முகா சரணம்...
சரவண பவ குகனே சரணம்...

கவிதா சரவணன்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க