tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

எழுதியவர்: மணமேல்குடி கவி-வெண்ணிலவன்

         ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தாள் ரேவதி. மேகக் கூட்டங்கள் ஒன்று கூடி ஏதோ ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தன.

பார்வையினை மெல்ல திருப்பி ரவியை பார்த்தாள்.

          "என்ன ரவி நான் கேட்டதுக்கு பதில் ஏதும் சொல்லலையே!"

         "அதான் என் முடிவை சொல்லிட்டேனே ரேவதி .என்னை மறந்துட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க ப்ளீஸ்..."சாதாரணமாய் சொல்லிவிட்டு ஜன்னலை வெறித்தான் ரவி.

    "ரவி"அலறிவிட்டாள் ரேவதி.

  தினமும் கடற்கரையில் சந்தித்து தொடங்கிய காதல் நினைவுகள் அவள் மனதில் நிழற்படமாய் விரிந்தன. கடற்கரை மணலில் அவன் மடியில் அவள் படுத்து இருக்க குனிந்து அவளது நெற்றியில் முத்தமிட்டபடி அவன் கைகள்...

     "....ச்சீ..நீங்க ரொம்ப மோசம்"என்று அவள் அவனது கைகளை தட்டிவிட..

      "என்னம்மா இது அதுக்குள்ள சென்சார் பண்ணிட்டே.."

     "ம்..இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்...."-என்றபடி செல்லமாய் அவனை அணைக்க...

    இருவரும் அந்த அணைப்பில் மெய்மறந்து போயினர்.

  இவர்களின் காதல் ரேவதியின் தந்தைக்கு தெரியவர இதுவரை ரேவதியின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்காத அவள் தந்தை பச்சைக்கொடி காட்டிவிட..ரேவதி மகிழ்ந்து போனாள்.

ஆனால் ரேவதியின் சந்தோசம் நீண்டநாள் நிற்கவில்லை.அலுவலக வேலையாக வெளியூர் சென்று திரும்பியபோது ஏற்ப்பட்ட விபத்தில் ,ரவி ஒரு காலை இழந்து ஊனமாகிப்போனான்.காலை இழந்தவனென்றாலும் தன்காதலை பற்றிக்கொண்டு நின்றாள் ரேவதி.

      ரேவதியின் சந்தோஷத்திற்கு அவள் தந்தை குறுக்கே நிற்கவில்லை.ஆனால் ரவி இந்த திருமணத்தில் விருப்பமில்லையென்று கடிதம் எழுத அதிர்ந்து போய் அவனை சந்திக்க புறப்பட்டாள் ரேவதி.

             ∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

          "என்ன ரவி சொல்றீங்க.."

        "ஆமா ரேவதி ! ..கொஞ்சம் யோசிச்சு பாரு.,...ஒரு காலை இழந்திட்டு நிக்கிற நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு என்ன சந்தோசத்தை தர முடியும்.."

     ரவி..!இனத்துக்கும் சந்தோசத்துக்கும் என்ன சம்பந்தம்...நம்மை கல்யாணத்துக்கு பின்னாடி இப்படி ஆகியிருந்தா என்ன செய்வீங்க.."

       "... ......"

       " இப்ப நீங்க ஊனமா இருக்கீங்க...இதே நான் ஊனமாகியிருந்தா என்னை வெறுத்திடுவீங்களா..."

         "நிச்சயம் வெறுக்க மாட்டேன்.."

       "அப்ப நான் நினைக்கிறதுல என்ன தப்பு..."

    "ரேவதி..!நான் சராசரி மனுசன் மட்டுமில்ல..எழுத்தாளனும் கூட..கேரக்டர்களோட உணர்வுகளை புரிஞ்சுக்கக்கூடியவன்..அதிலும் பெண்களோட உணர்வுகளை புரிஞ்சுக்க கூடியவன்...அதிலும் பெண்களோட உணர்வுகளை நல்லா புரிஞ்சவன்.."

        "அப்ப கதையில் மட்டும் ஊனமானவனை கல்யாணம் பண்ணிக்கிறதை வச்சு காதல் தெய்வீகமானது அப்படீன்னு சொல்றீங்க ...இல்ல..? "

     "ரேவதி கதையில் எழுதினா இன்டிரஸ்டிங்கா இருக்கும்...பட் ரியல் லைஃப் ல் அதுமாதிரி செஞ்சா இன்சல்டிங்கா மாறிடும்.."

       "ஏன் ரவி நம்ம கல்யாணத்துக்கு நானோ,எங்கப்பாவோ தடை சொல்லாதப்ப நீங்க யாரைப் பத்தி கவலைப்படணும்..."சொல்லிவிட்டு அவனை ஆறுதலாய் பார்த்தாள் ரேவதி.

       "ரேவதி என் ஊனத்தை பார்க்காமல் என்னை கல்யாணம் பண்ணிக்க நினைச்சது உன் உண்மையான அன்பை பிரதிபலிக்கலாம்..என்னை மரு மகனா தத்தெடுக்க முன் வந்தது உங்கப்பா வோட் பெருந்தன்மை .ஆனா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் வாழ்வை,உன்சந்தோச கனவுகளை சிதைக்க விரும்பலை.....ரேவதி கல்யாணத்துக்கும் புறம் ரோட்ல நீ என்கூட வர்றதபார்த்து உலகம் என்ன பேசும் தெரியுமா? "

       "என்ன பேசும்.."

      "ஒரு அழகான பொண்ணு இப்படி தொட்டிய கட்டிகிட்டு வாழ்க்கையை வீணாக்கிட்டாளேன்னு பேசும்.."

    "நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க...அதப்பத்தி நமக்கென்ன..? "

   "ரேவதி அந்த நாலு பேரு துத்தி தான் நாம இருக்கோம் அதோட அவங்க பேசுற நாலு வார்த்தையில ஒரு வார்த்தையாவது உண்மையா இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் திருமணத்துக்கு பிறகு கணவனோட இப்படி இருக்கணும்னு.. கனவு காண்பால் உன்னோட அந்த இனிய கனவுகளை நான் கலைக்க விரும்பலை ப்ளீஸ் என்னை மன்னித்துவிடு மறந்துவிடு "

       "ரவி..."

     "ப்ளீஸ்..ரேவதி என்னை தேடி பார்க்க வராதே.." என்று அவன் சொல்லி முடித்த போது ரேவதி ஒரு முடிவோடு எழுந்து விடு விடுவென வெளியேறினாள்.

   அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு மௌனமாய் நின்றிருந்தான் ரவி.

       ∆∆∆∆∆∆∆∆∆ ‌‌. ∆∆∆∆

மறுநாள்-

காலைப்பொழுது புலர்ந்தபோது அப்படி ஒரு அதிர்ச்சியான செய்தி அவனை தாக்கும் என்று நினைக்கவே இல்லை .ரேவதி மாடியிலிருந்து விழுந்துவிட்டாள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறாள் என்ற செய்தி தான் அது.

      தொலைபேசியில் வந்த அந்த செய்தியை கேட்டதும் பரபரப்புடன் இயங்கி அடுத்த அரை மணி நேரத்தில் அந்த தனியார் மருத்துவமனையில் நுழைந்தான்

     ரேவதி இருந்த வார்டுக்குள் நுழைந்தவன் மெல்ல எட்டிப் பார்த்தான். அழகான மானாய் துள்ளி விளையாடியவள் சுருண்டு கிடந்தாள்.

   "ரேவதி..."என்று அழைத்தபடி அவன் உள்ளே நுழைந்த போது சுற்றி நின்ற கூட்டம் விலகிக் கொள்ள மெல்ல ரேவதியின் அருகே அமர்ந்து தலையை வருடியபடி,"என்னம்மா இது பார்த்து நடக்க கூடாதா இப்ப பார்த்தியா கால்ல அடிபட்டு இப்படி படுத்து இருக்கே..டாக்டர் என்ன சொன்னார் தெரியுமா " என்றான் மெதுவான குரலில்.

         "தெரியும் இனிமே ஊன்றுகோலோட தான் நான் நடக்க முடியும் என்று சொன்னார் "என்று சிரித்தபடி சொன்ன ரேவதியை ஆச்சரியத்தோடு பார்த்தான் ரவி

      "ஆமா ரவி மத்தவங்களை பொருத்தவரை இது எதிர்பாராதது ஆனால் நான் என் கால் ஊனமாகணும்னு தான் விழுந்தேன் என் காலை வேணும்னா ஆப்ரேஷன் பண்ணி எடுக்கலாம் ஆனா என் மனசுல உள்ள காதலை உங்கள் நினைவுகளை யாராலும் எடுக்கவோ அழிக்கவோ முடியாது ரவி... இனிமே நாம திருமணம் செய்து கொண்டு போனா கூட யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்கல்ல ...இனி நீங்க என்னை திருமணம் செய்து கொள்வது தடை இல்லையே ரவி காதலுக்கு கண் இல்லைம்பாங்க ஆனா நம்ம காதலுக்கு கால் இல்லை அவ்வளவுதான்..."எவ்வித சலனமும் இன்றி சிரித்தபடி சொன்னவளை ஏறிட்டான் ரவி

ரவியின் கண்களில் நீர் அரும்பி கண்ண மேடுகளை கடந்து வழிய தொடங்கியது.

    "ரேவதி காதலுக்கு ஊனம் தடையில்லை மனம் தான் தடையாக இருக்கக் கூடாதுன்னு புரிஞ்சுகிட்டேன் அதுக்காக இப்படி பண்ணிக்கிட்டியேம்மா... இனி உன்னை விட்டு பிரியவே மாட்டேன் "என்று அவளை அள்ளி எடுத்து இறுக அணைத்தபடி ரவி சொல்ல-

 ரேவதியின் பூமுகத்தில் கண்ணீருடன் மெல்ல புன்னகை அரும்பியது.

 

"ஓவியம்:காணிக்கைராஜ்" 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க