tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

எப்போதும் இயற்கை வளப் பகுதிகளையே பயணம் செய்யும் நாங்கள், இந்த முறை குழுப்பயணமாக (ஆன்மிகப் பயணம்) திட்டமிட்டு குஜராத் மாநிலத்திற்கு விமான மூலம் பயணம் செய்து ராஜ்கோட் விமான நிலையத்தை அடைந்தோம். அங்கிருந்து

" துவாரகா "செல்ல ஒரு டீலக்ஸ் பேருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். சாலை வழி சற்று மோசம் தான். ஏகப்பட்ட தூக்கிவாரல்களுடன் ஒரு பயணம். வழியில் ஒரு தேநீர் விடுதியில் நிறுத்தினார்கள். பயங்கர அதிர்ச்சி மிகச் சிறிய கோப்பையில் தேநீர். பத்து ரூபாய் தான் என்றாலும் ஒரே முழுங்கில் முடிந்து விடுகிறது. எல்லாக் கடைகளிலும் அதே ஃபார்முலா: பரவாயில்லை "கிருஷ்ணா கிருஷ்ணா" என்று முழங்கிக் கொண்டே ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். துவாரகை (அதாவது) துவாரகா அரபிக் கடலில் அமைந்த பண்டைய நகரமாகும். பகவான் கிருஷ்ணன் இந்நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாக வரலாறு, புராணங்கள் மூலம் நம்பப்படுகிறது. 108 வைணவத் திருத் தலங்களில் ஒன்றான , இந்நகரத்தில் காலடி வைத்தவுடன் ஒரு சிலிர்ப்பு. "என்ன தவம் செய்தனை யசோதா!! எனப் பாடி பகவான் கிருஷ்ணரை காணத் தயாரானோம். காலையில் 5:00 மணி தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். பணடித்ஜி என்பவர் ஹிந்தி கலந்த ஆங்கிலத்தில் கோவிலின் சிறப்பை விளக்கினார். அவரைப் பின்தொடர்ந்து சென்றோம். கோவில் பலமுறை முகமதியரால் இடிக்கப்பட்டு பின் நிர்மாணிக்கப்பட்டது. துவாரகா கண்ணனின் தரிசனத்தில் எங்களை நாங்களே மறந்தோம். செல்போன் அனுமதி இல்லை அதனால் வெளியில் வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.அழகிய அரபிக்கடலின் காற்று வாசனையை அனுபவித்துக் கொண்டே அந்த "அரபிக் கடலோரம் கண்ணன் அழகைக் கண்டேனே" எனப் பாடி மகிழ்ந்து தங்குமிடம் வந்தோம்.

 

 அடுத்த நாள் "பேட் துவாரகா" பயணம் ஒரு விசைப்படகு மூலம் பயணம் செய்து கட்ச் வளைகுடாவில் உள்ள சிறு தீவான பேட் நகரை அடைந்தோம். கிருஷ்ணர் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். "ருக்மணி தேவி" தான் உற்சவர். கிருஷ்ணனின் திரு மாளிகையாகத் திகழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இங்கு நடைபெற்ற அகழ்வாய்வுகள் மூலம்‌ ஒரு நீண்ட சுவர் கடலில் அமிழ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

 சமீபத்தில் பிரதமர் அவர்கள் ஓகா நிலப்பரப்பையும் பேட்துவாரகையும் இணைக்கும் சுதர்சன் சேதுபாலத்தை திறந்து வைத்தார். சுமார் 2.32 கிலோமீட்டர் நீளமுள்ள நாட்டின் கேபிள் பாலமாகும். பிறகு அங்கிருந்து நாகலிங்கேஸ்வரர் ஆலயம் . பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும். ஈஸ்வரனின் கிருபையைப் பெற்று சோம்நாத் மந்திர் நோக்கி பயணித்தோம். அரபிக்கடலின் அலைகளில் ஆர்ப்பரிப்பில் (12) ஜோதிர்லிங்க ஆலயங்களில் முதல் ஆலயமாக திகழும் தற்போதைய சோமநாத் கோவில் 1951 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. இதுவும் கஜினி முகமதுவால் கொள்ளையடிக்கப்பட்டு பலமுறை நிர்ணயிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் சிதைக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

 

 சோமநாதரை தரிசித்த பின் அமிதாப்பச்சனின் குரலில் ஒரு மணி நேர ஒலி ஒளி நிகழ்ச்சி இரவு 7:45 மணிக்கு கண்டு களித்தோம். அற்புதம் எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள் நாங்கள்.

 

 பிறகு கட்ச் வளைகுடாவில் "ரான் ஆப் கட்ச்" வெள்ளை மணலில் ஒரு கேம்ப். பாகிஸ்தான் எல்லையை எட்டிப் பார்க்கலாம் .அங்கு இருந்து கிளம்பி "கிர்" காட்டினை நோக்கிப் பயணித்தோம். ராஜ்கோட்டில் தொடங்கிய பயணம் ஆசிய சிங்கங்களுக்கான புகலிடமான" சீனாகாத்து "மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1913 ஆம் ஆண்டு 20 சிங்கங்களுடன் காணப்பட்ட காட்டில் தற்போது 600க்கும் மேற்பட்ட சிங்கங்கள் காணப்படுகின்றன என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 24X7 கண்காணிப்பில் உள்ள ஜங்கிளுக்கு ஜங்கிள் சபாரி மூலம் தான் செல்ல வேண்டும். இயற்கைச் சூழலுடன் பராமரிக்கப்படும் காட்டில் மான்கள், கரடிகள் மற்றும் சிறுத்தைகளைக் கூடக் கண்டோம். ஆனால் எங்கள் கண்களில் பட்டது இரண்டே சிங்கங்கள் தான். அதற்கே நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றனர் .ஒரு எல்லை வரைக்கும் தான் அனுமதிக்கின்றனர். அங்கு வாழும் மக்கள் சிங்கத்துடன் எளிதில் பழகுவதாகக் கேள்விப்பட்டோம். வனத்துறைக்குத் தெரியாமலே கள்ளத்தனமாக அழைத்துச் செல்லப்படு

கிறார்களாம். நாங்கள் இதுவே போதும் என்று இரண்டு சிங்க தரிசனங்களுடன் திருப்திப்பட்டோம். 

 

 நாங்கள் "பாவ்நகர் மாவட்டத்தில் பவனகரியின் கடற்கரை கிராமமான "நிஷ்களங்கேஸ்வரர்" கோவிலுக்கு ச் செல்ல முடிவு செய்தோம். இதன் வரலாறு சற்று ஆச்சரியப்பட வைத்தது. வாழ்வில் ஒருமுறையாவது பக்தர்கள் கண்டிப்பாக தரிசித்தல் அவசியம். கடலுக்குள் அமைந்துள்ள கோவிலில் தினந்தோறும் சுமார் 3 மணி நேரம் கடல் உள்வாங்கி சிவனை வழிபட வழி ஏற்படுத்தி தருகிறது. எந்தவிதக் கட்டிடக்கலையின்றி நடுக் கடலில் நான்கு தூண்கள் உடன் ஒரு கொடியுடன் சிவபெருமான் பஞ்சலிங்கேஸ்வரராக காட்சியளிக்கிறார். நீர்மட்டம் குறையக் குறைய மக்கள் நடந்து கல்கொடி மரம் உள்ள பாறையை அடைந்து அங்குள்ள பஞ்சலிகேஸ்வரரை வழிபடுகிறார்கள். எங்களுக்கும் அந்த அருள் கிட்டியது .இந்த ஆலயத்தின் கொடிமரம் எந்த புயலினாலும் சேதம் அடையாதது வியப்பு. பஞ்சபாண்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தை சிவனை வழிபட்டு நிவர்த்தி செய்ததால் நிஷ்களங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் பக்தர்கள் பிரார்த்தனை செய்து பலன் கிடைத்தவுடன் வந்து அபிஷேகம் செய்து காணிக்கை செலுத்துகின்றனர். இக்கட்டுரையைப் படிப்பவர்கள் கிளம்புங்கள் ஒரு விசிட். சுற்றிலும் கடல் சூழ்நீர் சூழ்ந்த அமைதியான சூழலில் கடவுளிடம் நன்றி கூறி அமைதியைப் பெறலாம்.

 

 பிறகு போர்பந்தர். தேசத்தந்தை காந்திஜி அவர்கள் பிறந்த ஊர். ஆர்வம் பொங்கி வழிந்தது. ஒரு எல்லை வரை தான் கார் அனுமதி, பின் ஆட்டோக்கள் மூலம் தான் செல்ல வேண்டும்., இருப்பினும் காந்தி பிறந்த மண்ணை அடைந்து அந்த மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டோம். தனி மனிதன் ஒருவனின் மிகப்பெரிய பங்கு நம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க உதவியது. ஆனால் ஏமாற்றம் அந்த ஊர் போதிய அளவு பராமரிக்கப்

படவில்லை. போகும் வழியெங்கும் துர்நாற்றம் வீசுகிறது. ஏனோ தெரியவில்லை. மகாத்மா காந்தி வளர்ந்த வீடும். வாழ்ந்த வீடும். கஸ்தூரிபாய் காந்தி அவர்கள் வீடும் அருகருகே தான் உள்ளது. என்ன கோஇன்சிடன்ஸ்: காந்தி அவர்கள் போர்பந்தரில் பிறந்தார் என்று பள்ளிக் காலத்தில் வரலாற்றில் படித்து கோடிட்ட இடத்தில் நிரப்பிய ஒரு நகரை பார்க்க முடிந்தது உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் தான் நாங்கள். "கீர்த்தி மந்திர் (அல்லது) கீர்த்தி மஹால்" காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் அருட்காட்சியகம். அங்கு காந்திஜி பயன்படுத்திய புத்தகங்கள் ,

ஆடைகள், ராட்டைகள், புகைப்படங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார்கள். அழகிய வடிவில் செதுக்கியுள்ள அந்த மஹாலில் நாங்கள் பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். வரலாற்றில் இடம் பிடித்த நம் தேசத் தந்தையை வணங்கி விடை பெற்றோம்.

 

 பிறகு பத்தான் நகரில் அமைந்துள்ள "ராணிக்கா வா" என்பது ராணி குளித்த கிணறு. அந்த காலத்தில் மகாராணிகள் குளித்த கிணறு அதை காணும் போது வியப்பாக இருந்தது. வேலைபாடுகள் கண்டு வியந்து நின்றோம். சுழல் படிக்கட்டுகள் போல் அமைந்துள்ள அந்த கிணற்றில் ஒவ்வொரு 10 படிக்கட்டுக்கும் ஒரு மாடம் மாறி க்கட்டி அமைத்திருந்தார்கள். யாரும் பார்க்காதவாறு அமைக்கப்பட்ட அந்த கிணற்றில் எவ்வாறு தண்ணீர் இன்று வரை ஊறிக் கொண்டிருக்கிறது என்பது வியப்புதான்.  

 

 'சபர்மதி ஆசிரமம்" நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது. வழியில் 'வைஷ்ணவி தேவி" கோயில் சாயலில் உள்ள ஆலயத்திற்குஅழைத்துச் சென்றார்கள். பிறகு "அக்ஷர்தாம் கோவில் தர்ஷன். வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அப்பப்பா !!என்னென்ன ஒரு அழகான கட்டிடக்கலையில் சுவாமி நாராயணனுக்கு ஆலயம். ஆன்மிகமும் அழகும் ஒருங்கே இணைந்த காட்சியைக்காண இரு கண்கள் போதாது. சபர்மதி ஆசிரமம் சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. காந்தி 1918 முதல் 1933 வரை இங்கு வாழ்ந்தார். சத்தியாகிரக ஆசிரமம் என்றும் அழைக்கப்படுகிறது. பல அறைகளில் ராட்டினங்களும், புத்தகங்களும், புகைப்படங்களும் பல வரலாற்று விஷயங்களை நமக்குப் படம் பிடித்து காட்டியது. ஆனால் வெளியில் பல குழந்தைகள் பள்ளிக்கு ஏன் செல்லவில்லை என்று தெரியவில்லை. பல பொருட்களை நம்மை நடக்க விடாமல் துரத்தி துரத்தி விற்கின்றனர். கல்வி மிக முக்கியமல்லவா? பிரதமர் கவனத்திற்கு யாராவது இது கொண்டு சென்றால் நல்லது. இங்கு மட்டுமல்ல பல இடங்களில் சிறு குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இவ்வாறு அலைக்கழிக்கப்பட்டு கொண்டிருக்கின்னர். ஏன் இப்படி ஒரு கல்வியறிவை வளர்க்க முடியாத ஒரு சூழ்நிலை? இது‌மாநில அரசுக்குத் தெரியுமா ?என்று தெரியவில்லை .

பிறகு "ஒற்றுமைக்கான சிலை"(Statue of unity) குஜராத்தின் (milestone) பார்க்கக் கிளம்பினோம். நர்மதா மாவட்டத்தில் கெவாடியா அருகே உள்ள சர்தார் சரோவர் அணை எதிரே உள்ள சாது பெட் தீவில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் படேல் அவர்களின் சிலை உலகின் மிக உயர்ந்த சிலையாகும்.( 182 மீட்டர் ) வதோரா நகரமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது .நாங்களும் உயரமான சிலையை பார்த்தது மட்டுமின்றி, லிஃப்ட் வசதியுடன் அவர் இதயம் வரை சென்றோம். அமைக்கப்பட்ட வியூ பாயிண்ட் வழியாக நதியின் அழகு கண்ணை விட்டு இன்னும் அகலவில்லை. இந்த நேரம் நாம் கண்டிப்பாக நம் பிரதமருக்கு நன்றி தெரிவித்தல் அவசியம் .குஜராத் மாநிலத்தில் உணவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை .சைவத்திற்கு பல உணவகங்கள் உள்ளன .மதுவிலக்கு மாநிலமாக உள்ளதால் மது கேடு ஏற்படுத்தும் காட்சிகள் நம் கண்ணில் புலப்படவில்லை. நாங்கள் சொல்லாமல், செல்லாமல் விட்ட இடங்கள் பல பல உள்ளன .எனினும் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் சிறப்பையும் சிறப்பை வெளிப்படுத்தும் கட்டிடங்களையும் ஆலயங்களையும் ஒவ்வொரு இந்தியரும் கண்டிப்பாக பயணித்து மகிழ்தல் அவசியம். என்ன குஜராத் செல்ல

ரெடியா ?விரைவில் ராஜஸ்தான் மாநில பயணத்தில் சந்திப்போம்.. நன்றி!

 

 தமிழ்நாடு இ பேப்பர்குழுவிற்கு நன்றிகளும், வணக்கங்களும்...

 

திருமதி மல்லிகா கோபால் 

புதுச்சேரி

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க