tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

இந்திரா காந்தியின் இயற்பெயர் 
இந்திரா பிரியதர்ஷினி நேரு . பிரியதர்ஷினி என்றால் பார்வைக்கு அழகானவர் என்று பொருள் ‌. இவர் அலகாபாத்தில் 1917ம் ஆண்டு நவம்பர் 19-ல் பிறந்தார். தந்தை ஜவஹர்லால் நேரு. தாய் கமலா நேரு. இவர் இந்தியாவிலும் பிறகு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் சுவிட்சர்லாந்து, ஜெனிவா ஆகிய நாடுகளிலும் படித்தார்.

 1942- ல் இவர் இந்திய தேசிய காங்கிரஸின் சக உறுப்பினரான 
ஃபெரோஸ் காந்தியை மணந்தார். இவருடைய மகன்கள் சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி. 1960 ல் ஃபெரோஸ் காந்தி மறைந்தார். 

நேரு சிறையில் இருந்தபோது  மகள் இந்திராவுக்கு உலக வரலாற்றையும் நாட்டு நடப்புகளையும் கடிதங்களாகவே எழுதி அனுப்பினார். அதன் மூலம் இந்திரா காந்தி உலக 
ஞானத்தையும் பெற்றார். தாயாரை பிரிந்து தனிமையில் வாடிய நேரத்தில் வீட்டிலேயே நேரு அமைத்திருந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை படித்து இந்திரா காந்தி தன் அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டார். சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். காந்தியடிகளின் ஒத்துழையாமை போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.

1959-ல் கட்சியின் கௌரவ தலைவர் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. 1966-ல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். லால் பகதூர் சாஸ்திரி  மந்திரி சபையில் இந்திரா காந்தி செய்தி ஒலிபரப்பு அமைச்சராக பணியாற்றினார்.

அவரது மரணத்திற்குப் பின் நாட்டின் பிரதமராக 1966 ஜனவரி 19- ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது தனது ஆளுமைத் திறனை திறம்பட வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் ராணுவம் கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் உள்நாட்டு மக்களுக்கு எதிராக அட்டூழியங்களில் ஈடுபட்டது. அதனால் இந்தியாவுக்கு அகதிகளாக லட்சக்கணக்கானோர் படையெடுத்தார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு அவர்களை சுதந்திரமாக வாழ வழிவகை செய்யும் வகையில் பாகிஸ்தானுடன் போர் அறிவித்து அதில் வெற்றியும் கண்டார்.

சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்ந்த மக்களுக்கு விடியல் கிடைக்கும் வகையில் வங்காள தேசம் என்ற நாட்டை உருவாக்கி கொடுத்தார். 

இவர் ஆட்சி காலத்தில் 1974 -ல் ராஜஸ்தானில் பொக்ரான் என்ற இடத்தில் இந்தியா அணுசக்தி சோதனை நடத்தி உலக நாடுகள் மத்தியில் அணுசக்தி வல்லமையை நிலை நிறுத்தியது. பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினார். 

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்ற தீர்ப்பை 12-6-1975 அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்தது.

இதைத் தொடர்ந்து1975 ஜூன் 20ம் நாள் இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்தார். இதைத் தொடர்ந்து 1977-ல் நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியை சந்திக்க நேர்ந்தது. 

அவசர நிலைக்காக அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ‌1980-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் இந்திரா காந்தி பதவிக்கு வந்தார். 

பிந்தரன் வாலாவின் சீக்கிய சுதந்திரப் போராட்ட பிரிவினைவாத குழு தனிநாடு கேட்டு போராட்டம் நடத்தியது. அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனித் தலமான  பொற்கோயிலுக்குள் ஒளிந்து கொண்டிருந்த தீவிரவாதிகளை வெளியேற்ற 1984-ல் ராணுவத்திற்கு உத்தரவிட்டார். இதற்கு ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்று பெயர். 

அப்போது நடந்த போரில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்ச்சியால் இந்திரா காந்தி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
 சீக்கியர்களும் இந்திரா காந்தி மீது கோபம் கொண்டனர். இதன் காரணமாக சீக்கியர்களான அவரது சொந்த மெய்க்காவலர் இருவராலாயே இந்திரா காந்தி டெல்லியில் அவரது வீட்டிலேயே 1984 அக்டோபர்31-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் (30-10-1984) ஒரிசா மாநிலம் தலைநகர் புவனேஸ்வரில் பேசும்போது "என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்வேன் நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டை பலப்படுத்தும் வளப்படுத்தும்"என்று பேசினார்.


-க.ரவீந்திரன்,
22 பிள்ளையார் கோயில் வீதி, சாஸ்திரி நகர்,
ஈரோடு - 638002.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க