tamilnaduepaper
❯ Epaper

மங்கள் பாண்டே.

மங்கள் பாண்டே.
Join Whatsapp Channel Join Telegram Channel

மங்கள் பாண்டே கிழக்கிந்திய கம்பெனியில் ஒரு போர் வீரராக பணிபுரிந்தார். கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் பிரச்சினை காரணமாக கொல்கத்தாவுக்கு வடக்கே உள்ள  

 பேரக்பூரில் நடந்த கிளர்ச்சியில் இவர் ஈடுபட்டார். அவரை அடக்கச் சென்ற ஐரோப்பிய அதிகாரிகளுக்கு காயம் உண்டானது. மங்கள் பாண்டேவும் காயமடைந்தார். எனினும் அவர் பிடிபட்டு

இராணுவ மன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு 1857ஆம் ஆண்டு ஏப்ரல் 8 -இல்.தூக்கிலிடப் பட்டார். இவரே சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் வீரர் ஆவார்.

 

*ஜான்சி ராணி லட்சுமிபாய். 

 

1858 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக ஜான்சியின் ராணி லட்சுமி பாய் தாமே தலைமையேற்று சண்டையிட்டார். ஜூன் மாதத்தில் ஜான்சி வீழ்ந்தது. ஜான்சிராணி தம்முடைய 23வது வயதில் 1858 ஆம் ஆண்டு ஜூலை 18 இல் குவாலியர் போரில் வீர மரணமடைந்தார்.

 

*குன்வர்சிங்

 

 பீகாரில் ஜகதீஷ்பூர் ராஜாவான 80 வயது குன்வர்சிங் பல போர்க்களங்களில் ஆங்கிலேயர்களை தோற்கடித்தார். தனது வெற்றிக்கு பிறகு 

ஜகதீஷ்பூருக்கு ஓய்வெடுக்க சென்ற குன்வர் சிங் 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 -ல் போரின் போது உடம்பில் பட்ட புண் அழுகி உயிரிழந்தார்.

 

*ராவ் துல்லா ராம். 

 

ராவ் துல்லா ராம் 1857 முதல் சுதந்திரப் போரில் 1857 மே 17 ஆம் நாள் ரிவாரியில் கருவூலத்தையும் அரசு கட்டடங்களையும் கைப்பற்றினார். 1857 செப்டம்பர் 20 இல் டெல்லியை ஆங்கிலேயர் கைப்பற்றிய போது ராவ் துல்லா ராம் தப்பினார். 1862 ஆம் ஆண்டு தம்முடைய 38 ஆவது வயதில் காபூலில் ராவ் துல்லா ராம் மரணமடைந்தார். 

இவர் ஆங்கிலேயரால் நாடு கடத்தப்பட்ட இரண்டாம் பாபுஜி ராவின் வளர்ப்பு மகன் ஆவார். 

 

* நானாசாகிப். 

 

1857இல் ஜூன் மாதத்தில் நானாசாகிப் கான்பூரை ஆக்கிரமித்து கொண்டு தன்னை பேஷ்வா எனப் பிரகடனப் படுத்திக் கொண்டார். நானா சாகிப்பின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. நானாசாகிப் எங்கு சென்றார் என்பது யவருக்கும் சரியாக தெரியவில்லை. அவர் நேபாளத்திற்கு தப்பியோடினார் என்ற கருத்தும் நிலவியது.

 

* சப்பேக்கே சகோதரர்கள்.

 

சப்பேக்கே சகோதரர்கள் தாமோதர்,பால் கிருஷ்ணா மற்றும் வாசுதேவ் ஆவார். இவர்கள் மகாராஷ்டிரத்தில் இந்து சமயத்திற்கு உள்ள தடங்கல்களை அகற்றும் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை ஏற்படுத்தினா். 1897 ஜூன் 22 ஆம் நாள் இவர்களில் தாமோதர் மற்றும் பால் கிருஷ்ணா இருவரும் Rand மற்றும் Ayerst என்ற இரண்டு பிரிட்டிஷ் அதிகாரிகளை சுட்டனர். இதில் Rand உடனே இறந்துவிட்டார். தாமோதரை அவருடன் இருந்த ஒருவனே காட்டிக் கொடுத்துவிட்டான். இதற்காக தாமோதர் அவர்களுக்கு 1898 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 இல் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. சகோதரரைக்

காட்டிக் கொடுத்தவனை வாசுதேவ் கொன்றுவிட்டார். இதற்காக இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 

பால் கிருஷ்ணாவுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இப்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சப்பேக்கே சகோதரர்கள் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தனர். 

 

*மௌலானா ஷவுக்கத் அலி. 

 

மௌலானா ஷவுக்கத் அலி உயரதிகாரியாக பணியாற்றியவர். இவருக்கு இரு முறை பிரிட்டிஷ் அரசு சிறை தண்டனை விதித்தது. HAMDARD என்ற உருது வார இதழையும் COMRADE என்ற ஆங்கிலம் வார இதழையும் இவர் நடத்தினார். இவர் மகாத்மாவின் ஆதரவாளராக இருந்து பிறகு கருத்து வேறுபாடு கொண்டு விலகினார்.

 

* பாகா ஜடின். 

 

பாகா ஜடின் வங்காளத்தைச் சேர்ந்தவர். இவருடைய உண்மை பெயர் ஜதிந்திரநாத் முகர்ஜி. இவர் ANSHILAN SAMATHI என்ற பெயரில் பிரிட்டிஷாரை வன்முறை மூலம் எதிர்க்கும் இயக்கத்தை ஆரம்பித்தார்.இவர் இதில் குண்டடிபட்டு காயமடைந்து 1915 செப்டம்பர் 10 இல் மரணமடைந்தார்.

.

 

*Vasudev Balwant Phadke. 

 

 Vasudev Balwant Phadke மராட்டிய சுதந்திரப் போராட்ட வீரர். இவர் பிரிட்டிஷாருக்கு எதிராக ஒரு படையை திரட்ட முயன்றார். நிதி பற்றாக்குறையால் இவரது முயற்சி வெற்றி பெறவில்லை.300 வீரர்களை சுடுவதற்கும் குதிரை சவாரி செய்வதற்கும் பயிற்சி அளித்து அரசு கஜானாக்களை காலி செய்து ஏழைகளுக்கு அளித்தார். பிரிட்டிஷ் அரசு இவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இவர் சாகும் வரைஉண்ணாவிரதமிருந்து உயிரை விட்டார். 

 

*வீர் சவார்க்கர். 

 

வீர் சவார்க்கர் என அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சவார்க்கர் 1906இல் சட்டம் பயில லண்டன் சென்றார். 1908ல் 'த ஹிஸ்டரி ஆப் த வார் ஆப் இண்டியன் இன்டிபென்டன்ஸ்"

என்ற நூலை எழுதினார். இப்புத்தகம் பிரிட்டனில் தடைசெய்யப்பட்டது. 1910 மார்ச் 13 இல் இவர் லண்டனில் கைது செய்யப்பட்டு இந்திய நீதிமன்ற தீர்வு விசாரணை செய்ய கப்பலில் அனுப்பப்பட்டபோது தப்பிக்க முயற்சித்து கைது செய்யப்பட்டார். இதனால் 50 ஆண்டுகாலம் சிறை விதிக்கப்பட்ட இவர் அந்தமான் சிறைக்கு மாற்றப்பட்டார். 1924 ஜனவரி 6 இல் விடுதலை செய்யப்பட்டார். 

 

*தாந்தியா தோப்போ

 

நானா சாகிப்பின் நண்பர் தாந்தியா தோப்போ ஆவார். இவருடைய தந்தையின் பென்ஷனை லார்ட் டல்ஹௌசி நிறுத்திவிட்டார். முதல் இந்திய சுதந்திரப்போரில் தீரத்தோடு போராடிய தாந்தியா தோப்போ 1859 ஏப்ரல் 7ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார். 

 

 

*பேகம் ஹஸ்ரத் மகால். 

 

1857ஆம் ஆண்டு மே 30 ஆம் நாள் லக்னோவில் நடந்த கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர் ஆங்கிலேயர்களால் கொல்கத்தாவுக்கு நாடு கடத்தப்பட்ட வாஜித் அலி ஷாவின் மனைவி பேகம் ஹஸ்ரத் மகால் ஆவார். நேபாளத்திற்கு செல்லவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான இவர் 1879 இல் இறந்தார். 

 

*மதன்லால் திங்ரா. 

 

மதன்லால் திங்ரா இங்கிலாந்தில் படித்து கொண்டு இருந்த ஒரு இந்திய மாணவர். இவர் இந்திய விடுதலைக்காக 1909 இல் சர் வில்லியம் ஹட் கர்சன் ஒல்லி என்ற பிரிட்டிஷ் அதிகாரியைச் சுட்டுக்கொன்றார். இவருக்கு பிரிட்டிஷ் அரசு தூக்கு தண்டனை விதித்தது.

 

* தாதாபாய் நவ்ரோஜி. 

 

தாதாபாய் நவ்ரோஜி 1852 இல் அரசியலில் நுழைந்தார். 1855 இல் இவர் இங்கிலாந்து சென்று அங்கேயிருந்தது இந்திய விடுதலைக்கு குரல் கொடுத்தார். 

1892 லிருந்த 1895 வரை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் உறுப்பினரான முதல் இந்தியர் மற்றும் ஆசிய நாட்டினர் ஆவார். காங்கிரஸ் தலைவராக மூன்று முறை பதவி வகித்தவர். 92 ஆண்டுகள் வாழ்ந்த இவர் இந்தியாவின் முதுபெரும் கிழவர் என அழைக்கப்படுகிறார். 

 

*ஜதந்திர நாத் தாஸ். 

 

ஜதிந்திர நாத் தாஸ் 1921-இல் ஒத்துழையாமை இயக்கத்தின் போது கைது செய்யப்பட்டார். சிறையில் அரசியல் கைதிகள் மோசமாக நடத்தப்படுவதை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார். சிறை அதிகாரிகள் மன்னிப்புக் கேட்டப்பிறகு தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இவரது தீவிரவாத கொள்கைகளுக்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் 63 நாட்கள் உண்ணாவிரதமிருந்து 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் இறந்தார். 

 

*கோபால கிருஷ்ண கோகலே. 

 

1886-இல் தம்முடைய 20வது வயதில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றியவர். 

1905-இல் இந்திய ஊழியர் சங்கத்தை கோபால கிருஷ்ண கோகலே தோற்றுவித்தார். மின்டோ மார்லி சீர்திருத்தம் உருவாக கோகலே உதவினார். கோகலே 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 இல் மறைந்தார்.

 

* கர்தார் சிங். 

 

கர்தார் சிங்கை அவரது பெற்றோர்கள் அவரது 15 ஆவது வயதில் அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பினர். சர்தார் சிங் கலிபோர்னியாவில் வாழும் இந்தியர்களை பிரிட்டனுக்கு எதிராக திரட்டினார். GHADAR PARTY என்ற பெயரில் ஒரு கட்சி ஆரம்பித்தார். முதல் உலக மகா யுத்தம் மூண்டபோது இவர் பிரிட்டனுக்கு எதிராக போர் தொடுப்பதாக அறிவித்தார். இவரது தலைமையிலான படை  

மியான்மர், பொரோசிபூர். அம்பாலா, டெல்லி ஆகியவைகளை கைப்பற்ற திட்டமிட்டது. ஆனால் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு கர்தார் சிங் உட்பட 28 பேர் தூக்கிலிடப்பட்டனர். 

 

 

* சுரேந்திரநாத் பானர்ஜி. 

 

சுரேந்திரநாத் பானர்ஜி 1876 -இல் Indian National Association என்ற அமைப்பை நிறுவினார். இந்தியாவில் ஆரம்ப காலத்தில் அமைக்கப்பட்ட அரசியல் இயக்கங்களில் இதுவும் ஒன்று. பிற்காலத்தில் இது இந்திய தேசிய காங்கிரஸோடு இணைந்தது. இவர் மக்களால் ராஷ்டிர குரு என அழைக்கப்பட்டார்

 

*மேடம் காமா. 

 

பிக்காஜி காமா மேடம் காமா என அழைக்கப்பட்டார். 1896 இல் மும்பையில் பிளேக் நோய் பரவியபோது இவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார். ஐரோப்பா சென்ற இவர் London Indian Society என்ற அமைப்பை தொடங்கினார். 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21இல் ஜெர்மனியிலுள்ள ஸ்டட் கார்டில் சர்வதேச சோஷலிச மகாநாட்டில் இவர் இந்தியாவிற்காக முதன்முதலில் ஒரு தேசியக்கொடியை அறிமுகப்படுத்தினார். 1936ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் நாள் இவர் மறைந்தார். 

 

*சூரியா சென். 

 

சூரியா சென் வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியர் இவர் 1930 ஆம் ஆண்டு இளைஞர்களை அழைத்துக் கொண்டு சிட்டகாங் ஆயுதக் குடோனை கொள்ளையடித்தார். பல ஆண்டுகள் போலீசாரிடமிருந்து பிடிபடாமலிருந்த இவர் பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார். 

 

*மதன் மோகன் மாளவியா. 

 

மதன் மோகன் மாளவியா காசி இந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவர். இந்திய தேசிய காங்கிரஸிற்கு 1907 மற்றும் 1918 -இல் தலைவராக இருந்தார். சத்யமேவ் ஜயதே என்ற சொற்றொடர் இவரால் உருவாக்கப்பட்டது. 

 

* குதிராம் போஸ். 

 

சுதந்திரப் போராட்டத்தில் மிகக்குறைந்த வயதில் தூக்கிலிடப்பட்டவர் குதிராம் போஸ் 1908 ஆம் ஆண்டு தம்முடைய 16 வது வயதில் வயதில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது குண்டு வீசியதற்கும் கிங்ஸ்போா்டு என்ற மேஜிஸ்ட்ரேட்டை கொல்ல சதி திட்டம் தீட்டியதற்காகவும் இவர் தூக்கிலிடப்பட்டார். 

 

*சந்திர சேகர் ஆசாத். 

 

சந்திரசேகர் ஆசாத் என்ற பெயரிலுள்ள ஆசாத் என்ற சொல்லுக்கு விடுதலை என்று பொருளாகும். தன்னுடைய பதினைந்தாவது வயதில் புரட்சிகரமான நடவடிக்கைகளுக்காக 15 சாட்டை அடிகளை தண்டனையாக பெற்றவர் சந்திரசேகர் ஆசாத். காதேரி ரயில் நிலைய கொள்ளை(1926) வைஸ்ராய் இர்வின் பிரபு செல்லவிருந்த ரயிலைத் தகர்க்க வெடிகுண்டு வைத்தது(1929) மற்றும் பகத்சிங் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை விடுவிக்கும் முயற்சி(1928) ஆகியவைகளால் போலீசாரால் தேடப்பட்டு தப்பித்து வந்தார் சந்திரசேகர் ஆசாத். 1931 பிப்ரவரி 27-இல் அலகாபாத் ஆல்பிரட் பூங்காவில் பொலிசாருக்கும் ஆசாத்திற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கிடைத்த தோட்டாவால் ஆசாத் தம்மைத் தாமே 

சுட்டுக் கொண்டார். 

 

*லாலா லஜபதி ராய்.

 

லாலா லஜபதி ராய் பாஞ்சால சிங்கம் என்று அழைக்கப்படுபவர். இவர் லாகூருக்கு சைமன் கமிஷன் வந்தபோது பெரும் ஊர்வலத்துக்கு தலைமை தாங்கி அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தார். கூட்டத்தில் புகுந்த போலீஸ்காரர்கள் கடுமையாகத் தடியடி பிரயோகம் செய்தார்கள். பாமரமக்கள் மீது அக்கிரமமாகப் போலீசார் அடிப்பதைக் கண்ட லாலாஜி வேகமாக முன்னேறித் தமது மார்பை திறந்து காட்டினார். ஸாண்டா்ஸ் என்னும் வெள்ளையன் மிருகத்தனமாக தேசத்தின் மாபெரும் தலைவரான பாஞ்சால சிங்கத்தை அடித்தான். இதன் காரணமாக 1928 நவம்பர் 17ஆம் நாள் லாலா லஜபதி ராய் வீர மரணம் அடைந்தார்.

 

*பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்.

 

லஜபதிராயை அடித்த வெள்ளைக்கார போலீஸ் அதிகாரியான ஸாண்டர்ஸ் தன் அலுவலகத்திலிருந்து டிசம்பர் 17ஆம் நாள் தனது மோட்டார் சைக்கிளில் ஏறி மெதுவாக செல்ல ஆரம்பித்தான். மறைந்திருந்த சிவராம் ராஜகுரு (வயது 23) என்ற வாலிபர் திடீரென்று பக்கத்திலிருந்து பாய்ந்து கழுத்தில் சுட்டார்.

 

*கீழே விழுந்த ஸாண்டர்ஸன் எழ முயன்ற போது உடனே பகத்சிங் (வயது 23) நாலைந்து குண்டுகளை ஏவினார்‌.

 

*24 வயதான சுகதேவ் போலீஸ் அதிகாரி ஸாண்டர்சன் கொலைக்கு பகத்சிங்க்கு துணையாக இருந்தவர். இவர்கள் மூவரும் 1931 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டனர்.

 

* வாஞ்சிநாதன். 

 

திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரைக்குப் பாடம் புகட்ட எண்ணி ஆஷ் துரை அவரது மனைவியுடன் ரயிலில் கொடைக்கானல் சென்றுகொண்டிருந்தபோது மணியாச்சி ரயில் சந்திப்பில் ரயிலிலேயே சுட்டுக் கொன்றுவிட்டு அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டார் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன். 21 வயதான வாஞ்சிநாதன் 1911 ஜூன் 17-இல் இந்த தீரச் செயலை 

செய்தார். 

 

 

க.ரவீந்திரன்,

22 பிள்ளையார் கோயில் வீதி, சாஸ்திரி நகர்,

ஈரோடு - 638002.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க