tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மாலை 5-மணிக்கு மேலாக ,

" மீனாட்சி சுந்தரம் இல்லம் ".

அகலமான வராந்தாவுடன் கூடிய பெரிய வீடு. மாலை நேரம் ,

வயது அறுபத்து ஐந்தை கடந்த நிலையில் ,

சுந்தரத்திற்கு ஒரு ஆசை,

தன் மனைவி மீனாட்சிக்கு ஒரு கடிதம் எழுதி , அதில் தன் காதலை வெளிபடுத்த வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக உள்ளது.

அதனை இன்றாவது நிறைவேற்றிட வேண்டும் என்று ஆசை.

அதென்ன இன்று நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம்?..

இன்று மீனாட்சியின் பிறந்த நாள் மற்றும் இருவருக்கும் திருமண நாள்.

மீனாட்சிக்கு, பிறந்தநாள் மற்றும் திருமணநாள் பரிசாக இந்த கடிதம் இருக்க வேண்டுமென ஆசை சுந்தரத்திற்கு..

மனைவி மீனாட்சி மீதுள்ள காதலை வெளிபடுத்தும் ஆர்வத்தில் , தன் கண்ணாடியை சரி செய்தபடி , பேனா மற்றும் பேப்பருடன் அந்த சாய்மான இருக்கையில் அமர்ந்து தன் நினைவுகளை எழுத ஆரம்பிக்கிறார்.

அடுப்பாங்கரையை நோக்கி ,

" மீனாட்சி காபி கொண்டு வர்ரீயா ? " என்று கேட்ட சுந்தரத்திற்கு பதில் இல்லை.

அதை கண்டு கொள்ளாதவனாய் கடிதம் எழுத ஆரம்பித்தார் சுந்தரம்.

                    " என்னவளே மீனாட்சி. தாயுமானவளே,

இன்றுடன் உன் கரம் பிடித்து , நாற்பது வருடம் கடந்துவிட்டது. நாற்பது வருடமும் எனக்காகவும் , என் பிள்ளைகளுக்காகவும் மட்டும் தானே வாழ்ந்தாய்.

உனக்காகவோ உன் ஆசைக்காகவோ வாழாமல், நம் குடும்ப நலனை கருத்தில் கொண்டு வாழ்ந்தவளே.

உன் ஆசை என்ன என்று இது வரை கூட நான் கேட்டது இல்லை.

காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்க செல்லும் வரை குடும்பத்திற்காகவே ஓடி கொண்டு இருப்பாய்.

நான் எஜமானனாகவும் , நீ எனக்கு சேவை செய்ய வந்த சேவகியாகவும் தானே , நடத்தினேன்.

உனக்கு ஒரு நாளும் விடுமுறை இல்லை. எந்நாளுமே வேலை தான்.

என் வயது கூட கூட என் மீதான அக்கறை உனக்கு அதிகமானது.

நேரத்திற்கு எனக்கு அளவான சாப்பாடு , தகுந்த மருந்து , அளவான உறக்கம் என அலாரம் மாதிரி அந்தந்த நேரத்திற்கு கொடுப்பாய்.

நீ சோர்வாக இருந்தாலும் அதனை என் கண் முன் காட்டியது இல்லை.

மகன் மற்றும் மகளின் திருமணத்தின் பின் வெளிநாடு வேலைக்கு அனுப்புவதில் , உனக்கு ஆசை இல்லை என்ற போதிலும் பிள்ளைகளின் ஆசைக்காக ஒத்து கொண்டு , தினமும் அவர்களின் பிரிவை நினைத்து நீ படும் வேதனையை நான் அறிவேன்.

எங்களை கவனிப்பதிலே உன் ஆயுள் முடிந்திடும் போல என்று நான் கூறும் போது , ' இதை விட வேறு என்ன சந்தோசம் எனக்கு இருக்கு ' என்று நீ சொல்லும் போது , உன்னிடம் தோற்று போனவனாக உன் முன் நிற்பேன்.

இதுவரை உன்னிடம் நான் இதனை சொன்னதும் இல்லை , வெளிபடுத்தியதும் இல்லை ,

" மீனாட்சி ஐ லவ் யூ ! நான் உன்னை மனதார காதலிக்கிறேன்."

இப்படிக்கு , உன் மேல் உண்மையான பாசமுள்ள கணவன் ,

என்று கடிதம் எழுதி கொண்டு இருந்த சுந்தரத்தின் காதில் அலாரம் சப்தம்.

அலாரத்திலுருந்து மாலை 6 மணி என்று குரல் ஒலித்தது.

அந்த குரல் தான் , மீனாட்சி தன்னுடன் இல்லை என்பதை , சுந்தரத்திற்கு அவ்வப்போது உணர்த்தி கொண்டு இருக்கும்.

மீனாட்சியின் வேலையை , தற்போது இந்த அலாரம் தான் செய்து வருகிறது.

எழுதிய கடிதத்தை , மனைவி மீனாட்சி புகைபடத்தின் முன் வைத்து கண் கலங்கியவாறு , நின்றார் சுந்தரம்.

" நீ என் கூட , இருக்கும் வரை , உன் அருமை தெரியாமல் இருந்திட்டேன். உன் அருமை தெரியும் போது , நீ என் கூட இல்லை.. "

கண்களிலிருந்து வந்த கண்ணீர் கடிதத்தை நனைத்து கொண்டு இருந்தது.

இப்படி தான் பலர் , தன் காதலை அவர்கள் இருக்கும் வரை வெளிபடுத்தாமலோ , வெளிபடுத்த தெரியாமலோ உள்ளனர்.

அவர்கள் இல்லை என்ற நிலையில் மனம் உருகுவதை தவிர வேறு வழி இல்லை.

முற்றும்

மணிராம் கார்த்திக்

31 - காமாட்சி அம்மன் கோயில் தெரு,

 மேல அனுப்பானடி,

மதுரை-625009

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க