tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

ஹானட் கலர் மேன் எனும் கால் ஊனம் உடைய பெண் நீச்சல் போட்டியில் உலக நீச்சல் சாம்பியன் ஆக வென்றால் உலகத்திலே மிகச் சீரான அங்க அமைப்பு கொண்டவள் எனும் பட்டமும் பெற்றாள் 

 

 சாந்தோ என்பவர் ஒரு நோஞ்சான் இடைவிடாத உடற்பயிற்சியால் சரித்திரத்தில் மிக வனப்பான வடிவம் கொண்டவர் பலசாலி எனும் பெயர் பெற்றார் 

 

 இங்கிலாந்தில் எலியாஸ் கோ எனும் மனிதர் கால் ஊனமுற்றவர் பரம ஏழை அவர்தான் தையல் மிசின் கண்டுபிடித்தார் அப்பொழுது அதை யாரும் வாங்க ஆளில்லை அவர் வேலை செய்த சிறிய இடம் மனைவி மரித்துப் போனால் அவர் மனம் தளரவில்லை தீவிரமாய் முயன்றார் தையல் மிஷின் விற்பனை சூடு பிடித்தது 12 வருடத்தில் கோடீஸ்வரன் ஆனார் 

 

 காக்கை வலிப்பினால் பாதிக்கப்பட்ட ஜூலியஸ் சீசர் உலகத்தையே ஜெயித்தார் 

 

 இளம்பிள்ளை வாதத்தால் நடக்கும் சக்தியை இழந்திருந்த பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார் 

 

 ரஷ்யாவில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சியில் இயர் பிஸ் பெர்லின் எனும் சிறுவனும் அவனது ஐந்து உடன் பிறப்புகளும் பெற்றோர்களும் உயிரைப் பிடித்துக் கொண்டு ரஷ்யாவை விட்டு ஓட வேண்டிய சூழல் ஏற்பட்டது சொந்த விடுதி தீக்கு சாம்பல் ஆயிற்று இக்காட்சி அச்சிறுவனின் ஆழ்மனதில் போய் நீங்காத காட்சியை பதிந்தது அதனால் மறக்க முடியவில்லை அமெரிக்காவிற்கு வந்த அவர்களிடம் சல்லிக்காசு கிடையாது இருந்தாலும் சுதந்திர உணர்வும் மகிழ்ச்சி பெருக்கும் உண்டாயிற்று அச்சிறுவன் இரண்டு வருடமே பள்ளி சென்றவன் முறையான சங்கீதம் கல்லாதவன் அந்த தலைமுறையிலிருந்து பாடலாசிரியர்களை விட அதிக பாடல் எழுதினவன் அவன்தான் 800 பாடல்கள் ஆவன் அவன் உள்ளத்தில் இருந்து உருவாகி பிரபலமா என முதல் பாடலுக்கு கிடைத்த வருமானம் 33 பைசா மூன்று வருடம் கழித்து ஆவனின் முயற்சி தோற்கவில்லை அலெக்சாண்டர்ஸ் ராக் டைம் பாண்ட் எனும் அவரின் பாடல் அமெரிக்கா இசை சரித்திரத்திலே ஒரு திருப்புனையாக அமைந்தது பணமும் புகழும் குவிந்தன அந்த ஒரு பாடலுக்கு மட்டும் இரண்டு லட்சம் டாலர் கிடைத்தது 

 அவரின் மிகப் புகழ்வாய்ந்த இசை நிகழ்ச்சியான திஸ் இஸ் தி ஆர்மி ஒரு கோடி இருபது லட்சம் டாலர் சம்பாதித்து கொடுத்தது தனக்கென ஒரு பைசாவும் எடுத்துக் கொள்ளவில்லை அவைகளைப் படையின் அவசர நிவாரண நிதிக்கு கொடுத்து விட்டார் இருப்பதைக் கொண்டு தீவிரமாய் முயன்றால் முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இவரின் வாழ்க்கை ஒரு சாட்சி 

 

 ஜார்ஜ் பெர்னாட்ஷா எழுத்தாளராக வேண்டும் என தீவிர ஆசை கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டார் தொடர்ந்து எழுதினார் பள்ளியில் படித்தது 5 வருடம் மட்டுமே சோர்வு இல்லாமல் எழுதின அந்த ஏழை எழுத்தாளர் பின்வரும் நாட்களில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார் இங்கிலாந்தில் இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்றார் 

 

 ஹெலன் கெல்லர் சிறுவயதிலே கேட்கும் திறன் பார்க்கும் பார்வை இழந்து விரல்களின் அசைவின் மூலம் எண்ணங்களை வெளிப்படுத்தும் நிலையில் இருந்தவர் ஆனி சுலிவன் உதவியாளராக இருந்து வந்தார். 50 வருடமாக தோழியாக கூட இருந்து எல்லா உதவிகளும் செய்து வந்தார். ஹெலன் கெல்லர் தன் நிலை கண்டு சுயபச்சாதாபப்படவில்லை தன்னைப்போல் இருக்கும் பிள்ளைகளுக்கு உதவுவதே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டார் சுமார் 40 நாடுகளுக்கு பயணம் செய்து மாற்று திறன் கொண்டவர்களுக்கு தங்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்க பல சொற்பொழிவுகள் ஆற்றினவர் பல இடங்களில் தொழிலாளர் நலனுக்காகவும் பெண்கள் உரிமைக்காகவும் குரல் கொடுத்துள்ளார் 194 இல் ரேட் கிளிப் கல்லூரியில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார் சிறந்த பேச்சாளர் ஆனார் ஐந்து புத்தகங்களை எழுதினார் ஹார்வர்டு பல்கலைக்கழகம் கௌரவ பட்டம் கொடுத்து சிறப்பித்தது இவரை குறித்து மூன்று திரைப்படங்கள் வெளிவந்தது இவரது வாழ்க்கைத் தழுவி த மிராக்கிள் உமன் என்ற பெயரில் நாடகங்களும் திரைப்படமும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றன இவரது பிறந்த தினமான ஜூன் 27 அமெரிக்காவில் ஹெலன் கெல்லர் தினமாக கொண்டாடப்படுகிறது 87 வயதில் மரித்தார் குறைகளை நிறைவாக்கும் கடவுள் கூட இருக்கையில் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கு இவர் ஒரு சாட்சி 

 

 40 வயதில் செவியில் கேட்கும் திறனை இழந்த இசைமேதை பீத்தோவான் தன் ஊனத்தை மீறி உலகம் போற்றும் அற்புத இசை பட்டங்களை கொடுத்தார் அதில் ஐந்து சிம்போனிகள் அடக்கம் 

 

 ஆசிரியர் ஒரு மாணவனிடம் சிறு காகிதத்தில் எழுதி அவனின் தாயிடம் கொடுக்கச் சொன்னார் வாங்கி படித்த அச்சிறுவனின் தாய் தன் மகனிடம் உனக்கு அறிவு அதிகம் அதனால் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என ஆசிரியர் கூறி எழுதி இருக்கிறார் என்றால் ஆனால் உண்மை அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்றால் உங்கள் மகன் படிப்பதற்கு லைக் அற்றவன் இனி பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது அந்த சிறுவனின் தாயும் ஓர் ஆசிரியை மனம் தளராமல் வீட்டிலே வைத்து அவனுக்கு பாடங்களை எல்லாம் சொல்லி கொடுத்தாள் அந்த மாணவன் தான் பின்வரும் நாட்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொருட்களை கண்டுபிடித்து உலகம் போற்றும் விஞ்ஞானியாக போற்றப்பட்டார் அவர் பெயர் தான் தாமஸ் ஆல்வா எடிசன் 

 

 ஒரு பாடல் ஆசிரியர் தன் மாணவர்களுக்கு பாடல் பாட பயிற்சி கொடுக்கும் போது ஒரு மாணவனின் குரலை ஊளையிடுவதைப் போல இருக்கிறது என கேலி செய்தாராம் அந்த மாணவன் தான் பிற்காலத்தில் இத்தாலியில் சிறந்த பாடகராக திகழ்ந்தான் அவன் பெயர் என்றிக்கோ காரு சோ என்பதாகும் 

 

 ஆங்கில மொழிக்கு அகராதி கண்ட சாமுவேல் ஜான்சன் இளம் வயதில் உடல் நலிவுற்றம் காணப்பட்டார் இளமையில் கடுமையான வியாதிப்பட்டு ஒரு கண் பார்வை இழந்தார் இருந்தும் ஆங்கிலம் லத்தின் மொழிகளில் தேர்ச்சி பெற்றார் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற முயற்சி செய்தார் வறுமையின் காரணமாக படிக்க இயலவில்லை ஒரு புது செருப்பு வாங்கி போட காசு இல்லாதபடி கஷ்டப்பட்டவர் எழுதி பிழைக்க விரும்பி இலக்கிய கட்டுரைகள் எழுதினார் பின்வரும் காலங்களில் ஆங்கிலத்தில் அகராதி இல்லை என்பதை யோசித்து உருவாக்கம் என்றார் 1747 இல் தொடங்கப்பட்டு 1755 இல் முடிவுற்றது. அந்த ஆங்கில அகராதி இன்று வரை நம்மால் பயன்படுத்தப்பட்டு வருகிறது பிறகு அவருக்கு டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது ஏழ்மை நிலை மாறியது 

 

 தாமஸ் ஆல்வா எடிசன் பழைய கையெழுச்சி எந்திரம் ஒன்றினை 12 டாலர்களுக்கு வாங்கிய அச்சுதாலினை கடனாக வாங்கி ஓடும் ரயிலில் அச்சகத்தை உண்டாக்கி 15 வயதிலே பத்திரிக்கையாசிரியர் ஆனார் எடிசனின் கண்டுபிடிப்பில் பிரதானமானவை கிராமபோன் சினிமா படக் கருவி மெகா ஃபோன் ஆகும் 

 

 உடல் குறைபாட்டிலும் சாதனை படைத்த ஆலன் கெல்லர் அறிவாற்றலை கண்டு வியந்த விக்டோரியா மகாராணியார் ஒரு கப்பலுக்கு ஹெலன் என பெயர் சூட்டி கவுரவித்தார் 

 

 ஹெலன் கெல்லர் அவர்களை அமெரிக்க ஜனாதிபதியான பதிவு வைத்த கிளீவ் லாண்ட் அவர்கள் வெள்ளை மாளிகைக்கு ஹெலனை அழைத்து அன்போடு உபசரித்து பாராட்டி மகிழ்ந்தார் 

 

 ஹெலன் கெல்லர் எழுதிய சிறப்பு வாய்ந்த நூல்கள் எண் கதை எனும் சுய வரலாறு நான் வாழும் உலகம் இருளிலிருந்து மீண்டேன் நம்பிக்கை கொள்வோம் என்பவைகள் ஆகும் 

 

 கீதாஞ்சலி நூலுக்கு நோபல் பரிசு பெற்றவரும் ஜனகணமன தேசிய கீதம் எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர் அவர் 12 ஆம் வயதிலே கவிதை எழுதத் தொடங்கியவர் இசையில் தேர்ச்சி பெற்றவர் பள்ளிக்கூடத்தில் தொடர்ந்து படிக்கவில்லை பள்ளிக்கூட கட்டுப்பாடுகளை அவர் விரும்பவில்லை இருந்தும் சமஸ்கிருதம் பெங்காலி ஆங்கில மொழியில் வல்லவராய் இருந்தார் 

 

 இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட்ஷா ஆவார் இவரின் அப்பா குடிகாரர் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கடற்கரையோரம் ஒரு ஓட்டை படையில் அவர்கள் வசித்து நாட்கள் உண்டு பசி பட்டினியில் தான் வளர்ந்தார். நான்கு வருடங்கள் தான் பள்ளிக்குச் சென்றார் தாயிடம் இசை கற்றார் தட்டச்சு அவருக்கு தெரியும் புகைப்படம் எடுக்கவும் அவருக்கு தெரியும் இலக்கியங்கள் படித்தார் தொடக்க நாட்களில் அவரின் படைப்புகளை பத்திரிகைகள் நிராகரித்தன அவர் தனது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை பிறகு அவரின் நூல்கள் பிரசித்தி பெற்றது மேடை நாடகங்கள் ஆகும் நடிக்கப்பட்டது வறுமை மாறியது 95 வயது வரை உயிர் வாழ்ந்தார் தனது வாழ்வின் கடைசி வரை தினம் எழுதவும் படிக்கவும் செய்தார் தினம் குறைந்தது ஐந்து பக்கம் எழுதுவதை தனது வழக்கமாய் கொண்டிருந்தாராம் 

 

 காமராஜர் படிக்காத மேதை படித்தவர்களுக்கு அவர் புது பாதை விருதுநகரில் பிறந்தவர் இந்திரா காந்தியை பிரதமர் ஆகிய கிங் மேக்கர் கர்மவீரர் என போற்றப்படுபவர் அவர் படித்தது கொஞ்சம் காங்கிரஸில் இணைந்து பொது வாழ்விற்காக திருமணம் கூட செய்யாமல் வாழ்ந்தவர் மூன்று தடவை முதலமைச்சர் பதவி வகித்தவர் படித்தும் தன்னம்பிக்கை அற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் இவரின் சுயசரிதை சுருக்கமாக சொன்னால் இவர் தமிழ்நாட்டிற்கு கிடைத்த சொத்து பாரபட்சம் இல்லாதவர் சம நீதி காட்டியவர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்து செயல்முறைப்படுத்தி கல்வியாளர்களை உருவாக்க காரணமானவர் 

 

 ஆபிரகாம் லிங்கன் இவர் ஒரு விறகு வெட்டியின் மகன் வறுமையில் வளர்ந்தவர் படிக்க புத்தகமாக கொடுக்க காசு இருக்காது புத்தகங்களை இரவலாக வாங்கி வர பழமையில் நடந்து செல்வார் படிப்பதில் ஆர்வம் படித்து வழக்கறிஞர் ஆனார் இவர் தொடர்ந்து தான் தொடங்கிய தொழிலில் அரசியலின் தேர்தல்களில் தோல்விகளையே சந்தித்தார் கிபி 1860 இல் அமெரிக்க குடியரசுத் தேர்தல் போட்டியிட்டு வந்தார் தோல்வியை கண்டு துவளாதவர் நாட்டின் குடியரசு தலைவரானார் 

 

 நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவர் தமிழ் தொலைக்காட்சிகளில் திரைப்படங்களிலும் தோன்றியவர் சிறந்த பரத கலைஞர் இவருடைய 17 வயதில் திருச்சி அருகே ஏற்பட்ட விபத்தால் இவர் ஒரு காலை இளக்க நேரிட்டது அதன் பிறகு ஜெய்ப்பூர் ஃபுட் எனப்படும் செயற்கை காலின் உதவியோடு நடக்கத் தொடங்கினார் தான் உயிரிலும் மேலாய் நேசித்த நடனத்தில் தன் கவனத்தை திருப்பினார் சோர்ந்து விடவில்லை முயன்றார் தேர்ந்த பரத கலைஞராக உருவெடுத்தார் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று பரதக் கச்சேரிகள் நடத்தியுள்ளார் இவரது வாழ்க்கையை தழுவித் தெலுங்கில் மயூரா என்றும் தமிழில் மயூரி என்றும் திரைப்படம் எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது தற்போது தொலைக்காட்சிகளில் தொடர்களின் நடித்து வருகிறார் இவர் தனது சோதனையை பெரிது படுத்தாமல் நாட்டியத்தில் சாதித்துக் காட்டி பலருக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார் 

 

 ஸ்டீபன் ஹாக்கிங் 1942-ல் பிறந்த அறிவியல் மேதை தனது 21 வது வயதில் தசையூட்டமற்ற பக்க மரபு நோயால் பாதிக்கப்பட்டார் கை கால் முழுவதும் செயலிழந்து வீல் சேரிலேயே வாழ்க்கைக் கழிந்த போதும் இவரது மூளையின் செயல்பாடு சற்றும் ஓயவில்லை. சார்பியல் மற்றும் குவான்டம் ஈர்ப்பில் அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் இவரது "ப்ரீஃப் ஹிஸ்டரி ஆப் டைம்" என்ற புத்தகம் விற்பனையில் பல சாதனைகள் நிகழ்த்தியது 

 

 இசை உலகின் பிதாமகன் என எல்லோராலும் அழைக்கப்பட்ட பீத்தோவான் மிகச்சிறந்த பியானோ இசைக்கலைஞர் ஆன இவர் மேற்கத்திய இசையின் பரிணாமத்திற்கு பெரும்பாலமாய் விளங்கியவர் இவர் முதன் முதலில் இசை கச்சேரி நடத்தையில் இவருக்கு வயது எட்டு தனது 26 ஆவது வயதில் கேட்கும் திறனை முழுமையாக இழந்தார் பீதோவான் ஆனால் இவர் அசரவில்லை இசையிலே மூழ்கினார், இசையில் பல முத்துக்களை அள்ளினார். அவற்றுள் நைன்த் சிம்பொனி, வயலின் கான்செர்டோ போன்றவை குறிப்பிடத்தக்கவை 

 

 

 

கவிமுகில் சுரேஷ்

தருமபுரி

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க