tamilnaduepaper
Breaking News
❯ Epaper

மௌனம்

மௌனம்
Join Whatsapp Channel Join Telegram Channel

அன்று அலுவலகமே களையிழந்தது போல் இருந்தது. காரணம் வழக்கமாக கலகலப்பாக பேசும் வெங்கட் மௌன சாமியாராக இருந்ததுதான்...

 

   அவனது மௌனம் எல்லோருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கம்ப்யூட்டர் முன் அமர்ந்து தன் வேலையை கவனித்துக் கொண்டிருந்த பூஜா

 தன் சக ஊழியயையிடம் கேட்டாள்.

 

" நம்ம வெங்கட் சாருக்கு என்னடி ஆச்சு....? காலையிலிருந்து யாரிடமும் எதுவுமே பேசலையே....

 என்ன காரணம் என்று தெரியல...!"

 

 பூஜாவின் கூற்றை ஆமோதிப்பது போல் " ஆமாம் நானும் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன்.

அப்படித்தான் இருக்காரு... ஒருவேளை வீட்டில் மனைவி கிட்ட 

 சண்டை போட்டுட்டு வந்திருப்பாரோ... " என்றாள்.

 

" சே சே... அப்படி எல்லாம் இருக்காது... அவர் சட்டுனு கோபப்படுற ஆள் இல்லை!"

" வேற என்னவா இருக்கும்.... ஊரிலே அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லைன்னு முன்ன ஒரு தடவை சொல்லி இருக்காரு... ஒருவேளை அவங்க அம்மாவ 

 ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருப்பாங்களோ.... என்னவோ? "

 

"இருக்காது.... அவர் அவங்க அம்மா மேல ரொம்ப பாசமா இருக்கிறவர்

.. அப்படி இருந்தால் ஒரு வேளை லீவ் போட்டுட்டு இந்நேரம் போயிருப்பாரு... வேறு ஏதாவது பிரச்சனையா இருக்கலாம்!"

 

" என்ன பிரச்சனையாக இருந்தால்தான் என்ன... மனசு விட்டு வெளியே பேசணும். அப்பதான் மனபாரம் குறையும்..! நீதான் அவர்கிட்ட பேசிப்பாரேன்!"

 

" நா லஞ்ச் டயத்துல பேசி

 பார்க்கிறேன்... என்னன்னு தெரிஞ்சிக்கிடட்டு சொல்றேன் ஓகே"

 

லஞ்ச் டைம்.

 

 வெங்கட் டிபன் பாக்ஸை திறந்து சாப்பிட அமர்ந்தான். பூஜா அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

 

"வெங்கட் சார்... நானும் காலையிலிருந்து உங்களை கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.

 ஏன் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு உம்முன்னு இருக்கீங்க... உங்களுக்கு என்னாச்சு... வீட்டில் ஏதாவது பிரச்சனையா..... சொல்லுங்க சார்.

 என்னால முடிஞ்சா எதாவது ஹெல்ப் பண்றேன்!" பூஜா சொன்னதும் வெங்கட் பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு சாப்பாட்டில் கவனம் செலுத்தினான்.

 

 பூஜா சற்று ஏமாற்றம் அடைந்தாலும் அதைப் பற்றி மேலும் பேசினால் அநாகரிகமென கருதி விட்டுவிட்டாள்.

 

 அன்று அலுவலகம் முடியும் வரை 

 வெங்கட் மௌனம் பற்றி பலவிதமான பேச்சுகளும் பல கருத்துக்களும் அங்கே உலவிக்கொண்டிருந்தன.

 

 அலுவலகம் முடிந்ததும் வெங்கட்

 நேராக ஒரு பல் மருத்துவமனைக்கு சென்று பல் டாக்டரிடம் வாயத் திறந்தான்.

 மேல் வரிசை பற்களில் ஒன்று இல்லாமல் இருந்தது.

 ************************

 

 ஜி. சுந்தரராஜன்

 479 வடக்கு ரத வீதி 

 திருத்தங்கல்-626130

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க