tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

அங்கே இங்கே என்று தேடிப்பிடிச்சு ஆறுமுகம் தன்மகன் பாண்டியனுக்கு ஒரு பெண்ணை பார்த்தார். பாண்டியனுக்கு ஒரு வெளிநாட்டு கம்பெனியில் நல்ல வேலை. மணப்பெண் கலாவும் பாண்டியனுக்கு சளைத்தவள் அல்ல. இருவருக்கும் அந்த ஊரே வியக்கும் அளவிற்கு திருமணம். தடபுடலான விருந்து கலை நிகழ்ச்சிகள் அப்படின்னு அசத்திட்டாரு ஆறுமுகம். ஊரே கோலாகலமாக இருந்தது. ஆறுமுகத்தின் மனைவி சித்ரா விற்கும் தன் மகன் திருமணத்தை மனதில் கொண்டு அளவற்ற மகிழ்ச்சி. வரதட்சனை என்ற விசயத்தில் கூட மாப்பிள்ளை வீட்டார் வேண்டாம் என்று சொல்ல பெண் வீட்டார் கௌரவம் குறைய கூடாதுன்னு அவங்க எதிர்பார்க்காத அளவிற்கு செய்ய, எது எப்படியோ எல்லா வகையிலும் திருமண நிகழ்வு சிறப்பாக முடிந்தது.

 

நாட்கள் அழகாக நகரத் துவங்கியது. புது தம்பதியினரும் தங்களுக்குள் புரிதல்களை ஏற்படுத்திக் கொண்டு வாழத்துவங்கினர். மாமியார் சித்ராவும், மருமகள் கலாவும் அம்மா மகள் போல உறவு கொண்டிருந்தனர். இப்படியே ஓராண்டு காலம் கழிந்தது.

 

அரசல் புரசல்களாக காதில் விழுந்து கொண்டிருந்த பேச்சு தற்போது வாசல் வரை வந்தது. மாமியார் சித்ராவும் எல்லோருக்கும் பதில் சொல்லி பதில் சொல்லி எரிச்சல் அடைந்தாள். நாள்போக்கில் மருமகளிடம் எரிந்து விழத்துவங்கினள். இந்த பிரச்சனை பாண்டியனுக்கும் கலாவிற்கும் கூட தலைவிரித்து ஆடியது. இதனால் இருவருக்குள்ளும் பல சண்டைகள் உருவாகியது. கடைசியாக அம்மா சித்ராவின் தூண்டுதலால் பாண்டியன், கலாவை பிரிந்து விடலாம் என்று முடிவெடுத்தான்.

 

ஒரு மாத காலமாக காத்திருந்து தன் முடிவினை இறுதிப்படுத்தி டைவர்ஸ் நோட்டீஸை அறைக்குள் வைத்து விட்டு இதில் கையெழுத்திடு என்று கோபமாக சொல்லிவிட்டு நகர்ந்தான். இதனைக் கேட்டு விம்மி அழுத கலா அந்த நோட்டீசை கையில் எடுத்துக்கொண்டு அவன் அருகில் சென்று அதனை நீட்ட அதன் மேல் தன் மற்றொரு கையில் வைத்திருந்த கர்ப்ப சோதனை கருவியையும் நீட்டினாள். அதில் ‘வீட்ல ஏதும் விசேஷம் இருக்கா’ என்ற எல்லா கேள்விகளுக்கும் பதில் இருந்தது. தன் மூடத்தனத்தை புரிந்து கொண்ட பாண்டியன் அவளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு அழுதான். இருவரும் மீண்டும் மகிழ்ச்சியாக வாழத்துவங்கினர்.

 

மு.ரகுபதி

காவல்துறை

தாமரைப்பாக்கம்

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க