tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஏப்.21-

விளம்பரங்களுக்காக மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடி செலவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் தங்களது திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல பத்திரிகை, ஊடகங்களில் விளம்பரம் செய்வது வழக்கமான ஒன்றுதான்.

பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக பதவி ஏற்றது. தொடர்ந்து, 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியை தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு விளம்பரங்களுக்கு செய்த செலவினம் குறித்து அமராவதியை சேர்ந்த அஜய் பாசுதேவ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி அனுப்பி இருந்தார். இதற்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் பதில் அளித்து உள்ளது. அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் 2024-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி வரை விளம்பரங்களுக்காக ரூ.3 ஆயிரத்து 641 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்களுக்காக மட்டும் ரூ.2 ஆயரத்து 974 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் இணையதளம், குறுஞ்செய்தி, டிஜிட்டல் விளம்பரங்களுக்காக ரூ.667 கோடி செலவிடப்பட்டுள்ளது.அதே நேரம் பத்திரிகை விளம்பரங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள், போஸ்டர் விளம்பரம், ரெயில்வே டிக்கெட் உள்ளிட்ட விளம்பரங்களுக்கு செலவிடப்பட்ட விவரம் வெளியாகவில்லை.

மின்னணு ஊடகங்களான தொலைக்காட்சி, வானொலிக்காக செலவிடப்பட்ட தொகை (கோடியில்) ஆண்டு வாரியாக விவரம் வருமாறு:

2014 15ம் ஆண்டு 380.43, 2015 16ம் ஆண்டு 415.19ம், 2016 17ம் ஆண்டு 519.53ம், 2017 18ம் ஆண்டு 372.97ம் 2018 19ம் ஆண்டு 396.09ம், 2019 20ம் ஆண்டு 241.77ம், 2020 21ம் ஆண்டு 153.42ம், 2021 22ம் ஆண்டு 96.13ம், 2022 23ம் ஆண்டு 147.73, 2023 24ம் ஆண்டு 250.69ம் செலவிடப்பட்டுள்ளது.

இணையதளம், குறுஞ்செய்தி மற்றும் டிஜிட்டல் சினிமாவுக்கு செலவிடப்பட்ட தொகை (கோடியில்), ஆண்டு வாரியாக விவரம் வருமாறு:

2014 15ம் ஆண்டு 93.15, 2015 16ம் ஆண்டு 126.17ம், 2016 17ம் ஆண்டு 94.15ம், 2017 18ம் ஆண்டு 100.22ம் 2018 19ம் ஆண்டு 111.28ம், 2019 20ம் ஆண்டு 74.53ம், 2020 21ம் ஆண்டு 14.04ம், 2021 22ம் ஆண்டு 6.59ம், 2022 23ம் ஆண்டு 7.56ம், 2023 24ம் ஆண்டு 39.33ம் செலவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க