tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூன் 29–

தமிழகத்தில் 11,800 ஏரி,குளங்கள் மற்றும் கண்மாய்களில் விவசாயிகள் கட்டணமின்றி மண் எடுக்கலாம். வரும் 3 ம் தேதி முதல் இ சேவை மையம்மூலம் விண்ணப்பிக்கலாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டசபையில் நேற்று அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

  விவசாயப்பெருமக்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் நீர்வளத்துறை,ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றம் கண்மாய்களில் உள்ள களிமண் மற்றும் வண்டல்மண் ஆகியவற்றை கட்டணமின்றி எடுத்துச் செல்ல ஏற்கனவே கடந்த ௧௨ம் தேதி முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

௧௧,800 ஏரிகள்

இந்தநிலையில் இதற்கு அனுமதி வழங்கும்முறையை எளிமைப்படுத்தும் வகையில் வட்டாட்சியருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இந்தப் பணியை ஒருங்கிணைந்து திறம்பட செய்திட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டு இதற்கென பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

 இன்று வரை நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ௫௧௦௩ ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ௬௭௫௭ ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் பற்றிய விவரங்கள் மாவட்ட அரசிதழ்களில் வெ ளியிடப்பட்டு, தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவருகின்றன.

இடைத்தரகர் இன்றி

 ஏற்கனவே விவசாயிகள் தாங்கள் வசிக்கும் கிராமங்களில் அல்லது அருகில் உள்ள கிராமங்களில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள மண்ணை எடுத்துக்கொள்ளலாம் என்ற நிலையை மாற்றி, தற்போது விவசாயிகள் தாங்கள் வசிக்கும் தாலுகாவில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம். மேலும் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில்உ ள்ள இ–சேவை மையத்தில் விண்ணப்பித்து எவ்விதக் கட்டணமும் இன்றி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மண் எடுக்கும் உத்தரவுகளைப்பெற்றுக் கொள்ளலாம்.

 இதன் பயனாக ஏரிகள், குளங்கள் மற்றும் கண்மாய்கள் துார்வாரப் படுவதால், மழைக்காலங்களில் பெறப்படும் நீர் கூடுதலாக சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து அப்பகுதி வாழ் பொதுமக்களும் பெரிதும் பயன் பெறுவார்கள். எனவே விவசாயப்பெருமக்கள் மற்றும் மண்பாண்டத் தொழிலா ளர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி இணையதளம் மூலம் வரும் 3ம் தேதி முதல் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

++

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

அரசு சார்ந்த காரியங்களில் விரைவு உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் நிமித்தமான சிந்தனை மேம்படும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் வழியில் உதவி கிடைக்கும். செயல்பாடுகளில் ஆளுமைத் திறன் மேம்படும்.... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.... மேலும் படிக்க

அரசு சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உறவுகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் நிமித்தமான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் நிதானமும் திட்டமிடலும் வேண்டும். சிறு பணிகளில் கவனத்துடன்... மேலும் படிக்க

உத்தியோகப் பணிகளில் உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் ஏற்படும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகள் நடைபெறும். பிரபலமானவர்களின் அறிமுகம்... மேலும் படிக்க

தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களுடன் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். நிலுவையில்... மேலும் படிக்க

உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும். தெய்வீக காரியங்களில்... மேலும் படிக்க