tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஜூன் 30–

 

நான் நிதி அமைச்சராக இருந்த போது, இருபது ஆண்டுகளில் செய்யாத மாற்றத்தை, இரண்டு ஆண்டுகளில் செய்தேன்.’ என, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

 

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

 

* துணை சபாநாயகர் பிச்சாண்டி: கீழ்பென்னாத்துார் தொகுதி, கடம்பை கிராமத்தில், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும்.

 

* அமைச்சர் தியாகராஜன்: தற்போது சோளிங்கநல்லுார் மற்றும் ஓசூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் 30 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த நிதியாண்டில், தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு, 119 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், மிகவும் குறைவு. இந்த நிதியில் ஓரளவுக்குதான் எங்களால் செயல்படுத்த முடியும்.

 

இந்தாண்டு பட்ஜெட்டில், நம் மாநிலத்தின் மொத்த செலவு 4.59 லட்சம் கோடி ரூபாய். கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களின் செலவு இதை விட குறைவு. ஆனாலும், கர்நாடகா தகவல் தொழில்நுட்ப துறைக்கு 750 கோடி ரூபாய்; தெலுங்கானாவில் 276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைந்த நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு காரணம் மனிதவளம். 

 

* அமைச்சர் துரைமுருகன்: இப்போது தெரிகிறதா தியாகராஜனுக்கு, உங்களிடம் நிதி கேட்க, நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்.

 

* அமைச்சர் தியாகராஜன்: நான் நிதி அமைச்சராக இருந்த போதும், இதே அளவு நிதி தான் ஒதுக்கப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் துறைக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. மென்பொருள் ஏற்றுமதியில், இந்திய அளவில் நம் மாநிலம் முதலிடத்தில் இல்லை. ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்தோம். செயல்முறையை மாற்றினால் தான், விளைவை மாற்ற முடியும்.

 

முதல்வரின் ஆதரவு இருந்தால், எதை வேண்டுமானாலும் செய்யலாம். நிதி அமைச்சராக இருந்த போது, 20 ஆண்டுகளில் செய்யாத மாற்றத்தை, இரண்டு ஆண்டுகளில் செய்தேன். இன்னும் ஓராண்டு இருந்தால், தகவல் தொழில்நுட்ப துறையை மாற்றி, சிறப்பாக கொண்டு வருவேன். 

 

இவ்வாறு விவாதம் நடந்தது.

 

***

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க