tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கோவை, செப். 28–

 

‘‘நடப்பாண்டு, 24 புதிய பயிர் ரகங்கள், 7 மேலாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் 5 பண்ணைக் கருவிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளோம்,’’ என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், நான்கு நாட்கள் நடக்கும் மாநில அளவிலான மாபெரும் உழவர் தினவிழா, துவங்கியது.

 

 புதிய பயிர் ரகங்கள் மற்றும் செயல் விளக்கத் திடலை வேளாண் – உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சரகள் முத்துசாமி, சாமிநாதன், பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.

 

விழாவில், அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:

 

தமிழக அரசு, வேளாண்மைக்கென தனி நிதி அறிக்கையை தயார் செய்து, சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் நலனை பேணிக் காத்திட, பல அரிய திட்டங்கள், வேளண் – உழவர் நலத்துறையால், சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

முதல்வர், தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தியதன் காரணமாக, 2020–21ல் 152 லட்சம் ஏக்கராக இருந்த மொத்த சாகுபடி பரப்பு, 2022–23ம் ஆண்டில், 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 2022–23ம் ஆண்டில், தமிழக உணவு தானிய உற்பத்தி 117 லட்சம் மெட்ரிக் டன்னாக உற்பத்தி அதிகரித்துள்ளது.

 

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், கடந்த மூன்று ஆண்டுகளில் 7,705 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு, இதுவரை, 23 ஆயிரத்து 237 ஏக்கர் பரப்பில் வேளாண் பயிர்களும், 3,587 ஏக்கர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் நடப்பட்டு, தரிசு நிலங்கள் நிரந்தர சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

புதிய ரகங்கள்

 

நடப்பாண்டு, 24 புதிய பயிர் ரகங்கள், 7 மேலாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் 5 பண்ணைக் கருவிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளோம். இந்தியாவில் முதன் முறையாக, ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் இடுபொருட்களை தெளிக்கும் செயல்முறைகளை, ஏழு முக்கிய பயிர்களுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் வடிவமைத்துள்ளது.

 

இவ்வாறு, அவர் பேசினார்.

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க