tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, நவ. 17–
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2500 மருத்துவர் பணியிடங்கள் விரைவில் தேர்வு  மூலம் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மாநில அளவிலான அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி நல அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்தில், நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: 
    2021 ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இன்று வரை 1.90 கோடி பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். சமீபத்தில் ஐநா சபை பொதுக்கூட்டத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்துவதற்கு, விருது வழங்கியுள்ளது.
    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி வழங்கும் இத்திட்டத்தில் மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆண்டொன்றிற்கு 7 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர். இந்த ஆண்டு இதுவரையில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 843 பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.

காலிப்பணியிடங்கள்: 
இந்த அரசுப் பொறுப்பேற்ற பிறகு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவும், மாவட்ட சுகாதார நலவாழ்வு மையம் மூலமாகவும் தேர்வு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 460 பேர். பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையில் 1,353 மருத்துவர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளன. 2026 ஆண்டு வரை கணக்கெடுத்து 1,200 மருத்துவர் காலிப்பணியிடங்கள் சேர்த்து 2 ஆயிரத்து 553 மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பிக்க பெறப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் தேர்வுகள் நடத்தப்பட்டு பணிகள் நிரப்பப்படும்.
    மேலும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் மற்றும் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்புவற்கும் உரிய நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 1,066 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் மற்றும் 2 ஆயிரத்து 250 கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்கள் நீதிமன்றம் உத்தரவிற்கு பிறகு நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நலவாழ்வு மையங்கள்: 
மொகிலா ஆம் ஆத்மி கிளினிக் என்று சொல்லக்கூடிய மருத்துவக் கட்டமைப்புகளை தமிழ்நாட்டில் 708 இடங்களில் அமைப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அந்தவகையில், தமிழ்நாட்டில் 500 இடங்களில் நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.  இதில், மருத்துவர், செவிலியர், உதவியாளர்,சுகாதார பணியாளர் என ஒரு நலவாழ்வு மையத்திற்கு 4 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளது. மேலும், காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரையிலும், மாலை 4மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க