tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஏப்.30

3ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 1352 வேட்பாளர்களில் 392 பேர் கோடீஸ்வரர்கள், 244 பேர் கிரிமினல்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் 2 கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலம், கர்னாடகா, சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் என மொத்தம் 94 தொகுதியில் 3ம் கட்ட தேர்தல் வருகிற மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் 3ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,352 வேட்பாளர்களின் தேர்தல் பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை ஆராய்ந்தன.

இந்த ஆய்வின்படி, 1,352 வேட்பாளர்களில் 244 பேர் மீது குற்ற வழக்குகள் (கிரிமினல்) உள்ளன. 172 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. 38 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும், 17 பேர் மீது வெறுப்புணர்வு பேச்சு தொடர்பான வழக்குகளும் உள்ளன. 7 வேட்பாளர்கள் மீதான வழக்குகளில், அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. 24 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்குகளும், 5 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகளும் உள்ளன.இதில் 392 பேர் கோடீஸ்வரர்கள். கோடீஸ்வரர் வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு 5.66 கோடி ரூபாயாக உள்ளது.

இதில் அதிகபட்சமாக தெற்கு கோவா பா.ஜ.க. வேட்பாளர் பல்லவி ஸ்ரீநிவாஸ் டெம்போவின் சொத்து மதிப்பு ரூ.1,361 கோடி. அடுத்த இடத்தில் ரூ.424 கோடி சொத்துகளுடன் விமான போக்குவரத்துத்துறை அமைச்சரும், மத்திய பிரதேசத்தின் குனா தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான ஜோதிராதித்ய சிந்தியா உள்ளார். 639 வேட்பாளர்கள் 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள். 591 பேர் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பை நிறைவு செய்துள்ளனர். 411 வேட்பாளர்கள் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களாக 712 வேட்பாளர்கள் உள்ளனர்.

1,352 வேட்பாளர்களில் 123 பேர், அதாவது 9 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க