tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ந்தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. 3-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து 4-வது கட்டமாக, 96 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

பகல் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 51.87 சதவீதம் வாக்குப்பதிவானது.

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19ந்தேதியும், 2ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. 3ம் கட்டமாக 93 தொகுதிக்கு கடந்த 7ந்தேதி தேர்தல் நடைபெற்றது.

நேற்று ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், தெலுங்கானாவின் 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒடிசா 4, பிகார் 5, ஜார்க்கண்ட் 4, மத்திய பிரதேசம் 8, மகாராஷ்டிரா 11, உத்தர பிரதேசம் 13, மேற்கு வங்கம் 8, காஷ்மீரில் ஸ்ரீநகர் நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.

4 ம் கட்ட தேர்தல் களத்தில் 1,717 வேட்பாளர்கள், 17.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் எளிதாக வாக்களிப்பதற்காக ஒரு லட்சத்துக்கு 92 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் 19 லட்சம் தேர்தல் பணியாளர்கள் இன்று பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பதற்றமான தொகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

96 தொகுதிகளிலும் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. கோடை வெயில் காரணமாக வாக்காளர்கள் காலையில் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு திரண்டு வந்தனர்.

ஆந்திரா, ஒடிசா

சட்டசபைக்கும் தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மற்றும் ஒடிசா மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது.

 இந்த தேர்தல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது: ”மக்களவை தேர்தலின் 4வது கட்டமாக 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்தத் தொகுதிகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என்றும், இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் தவறாது வாக்குகளை செலுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன். வாருங்கள், அனைவரும் நமது கடமையைச் செய்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடப்பாவில் உள்ள புலிவேந்தலா வாக்குச்சாவடியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வாக்களித்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக ஒரு ஆட்சியை நீங்கள் பார்த்துள்ளீர்கள். இந்த ஆட்சி நிர்வாகத்தின் மூலம் பயன்பெற்றதாக நீங்கள் கருதினால், உங்களின் எதிர்காலத்தை வளமாக்கும் ஆட்சி நிர்வாகத்திற்காக வாக்களியுங்கள்” என்று கூறினார்.

மங்களகிரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் சந்திரபாபு நாயுடு தனது மனைவியுடன் வந்து வாக்கினை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “வாக்களிப்பது நம் கடமை. வாக்களிப்பதன் மூலம் நாம் வளமான எதிர்காலத்துக்கு உரிமை கோரலாம். நான் இதுவரையான தேர்தல்களில் இத்தகைய கூட்டத்தைப் பார்த்ததில்லை. இது மக்கள் ஜனநாயகத்தையும், தங்கள் எதிர்காலத்தையும் பாதுகாக்க விரும்புகிறார்கள் என்பதையே உணர்த்துகிறது. மக்கள் தங்கள் சொந்த செலவில் வெளிநாடுகளில் இருந்து வந்து வாக்களிக்கின்றனர். சென்னை, பெங்களூரு என பல ஊர்களில் வேலை நிமித்தமாக இருந்தாலும் வாக்களிக்க வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். இத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது 100 சதவீதம் உறுதி.” எனத் தெரிவித்தார்.

ஆர்வமுடன் வாக்களிப்பு

தெலுங்கானாவில் உள்ள 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். ஐதராபாத் ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். மக்களோடு மக்களாக க்யூவில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதே வாக்குச்சாவடியில் நடிகர் அல்லு அர்ஜூன் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வாக்களிப்பது நாட்டின் அனைத்து குடிமக்களின் பொறுப்பு. நம் வாழ்க்கையின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான மிக முக்கியமான நாள் இன்று என அவர் தெரிவித்தார்.

மகளகிரியில் உள்ள வாக்குச்சாவடியில் ஜனசேனா கட்சித்தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இன்று காலை நகரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகளுடன் வந்து ரோஜா வாக்களித்தார்.எனது சொந்தத் தொகுதியில் ஓட்டு போடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.சந்திரபாபு நாயுடு, லோகேஷ், பவன் கல்யாண், சர்மிளா ஆகியோருக்கு ஆந்திராவில் ஓட்டு இல்லை.ஐதராபாத்தில் இருந்து வந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்என்றார்.முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் ஜூப்ளி ஹில்ஸ்வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டனர். மேலும் பாஜக வேட்பாளர் மாதவிலதா அந்த தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதேபோல முக்கிய பிரபலங்கள் இன்று பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து போட்டு போட்டனர்.

வாக்குப்பதிவு யந்திரம்

உடைப்பு

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தின் ரெண்டாலா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கு தேசம் கட்சியின் முகவர்களுக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இருவருக்கு மண்டை உடைந்தது.

சித்தூர், கடப்பா, அனந்தபூர் உட்பட பல இடங்களிலும் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. தொண்டர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து, வாக்குப்பதிவு யந்திரங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ள ஓட்டு பதிவு செய்ய முயன்றதாக கூறி, இரு கட்சி தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர்.

கொலை

மேற்குவங்க மாநிலத்தில் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கேதுகிராமில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு திரிணமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி கொல்லப்பட்டார். முன்பகை காரணமாக கொல்லப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்கம் மாநிலம் துர்காபூரில் பா.ஜ.க. மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே லேசான மோதல் ஏற்பட்டது. மேற்கு வங்கம் பீர்பும் பகுதியில் உள்ள வாக்குசாவடிக்கு வெளியே இருந்த தங்களது கடையை திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் சேதப்படுத்தியதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ள நிலையில், கந்தேர்பல் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் வாக்களித்த பிறகு முன்னாள் முதல் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எங்குமே வன்முறை இல்லை. அமைதி நிலவுகிறது என சொல்லிக்கொள்ளும் பா.ஜ.க. அரசு, எங்கள் கட்சியினரை கடந்த 2 நாட்களாக தடுப்புக்காவலில் வைத்துள்ளது. எங்கள் கட்சி நிர்வாகிகளை வெளியில் விடாமல் பிடித்து வைத்து இருப்பது ஏன் என மோடியிடமும் அமித்ஷாவிடமும் கேட்க நான் விரும்புகிறேன். தோல்வி அடைந்துவிடுவோம் என பா.ஜ.க. பயப்படுகிறது. உண்மையில் அந்தக் கட்சி தோற்கத்தான் போகிறது’ என்று கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க