tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

 

தென்காசி ஜன 30

 

தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற பாரத் வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ் 2 கல்வி பயிலும் மாணவன் அருண் சந்தோஷ்க்கு 76வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த மனோகர் என்பவரது புதல்வன் அருண் சந்தோஷ் இலஞ்சி பாரத் வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடை பெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்று தென்காசி மாவட்டத்திற்கும், தான் கல்வி பயிலும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்த மாணவரை பாராட்டும் விதமாக தென்காசி இ.சி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற 76 ஆவது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் மாணவரை வெகுவாக பாராட்டி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் முன்னிலையில்

சான்றிதழ் வழங்கினார். 

இந் நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன்,

தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ,

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி,மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ராசி பலன்

பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். பணிகளில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பயண முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பாராத சிலரின் உதவியின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வர்த்தக பணிகளில் நிதானத்துடன்... மேலும் படிக்க

வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். எதிலும் முன் கோபம் இன்றி பொறுமையை கையாளவும். உடலில் ஒரு விதமான சோர்வுகள் மூலம் தாமதம் ஏற்படும். அரசு செயல்களில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச்... மேலும் படிக்க

வியாபாரம் நிமித்தமான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அளிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். உயரதிகாரிகளிடம் அனுசரித்துச்... மேலும் படிக்க

வியாபார பணிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் உண்டாகும். காப்பீடு பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

இழுபறியான வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பற்றிய புரிதல் மேம்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள்... மேலும் படிக்க

முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மனதை உறுத்திய பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் சேர்ப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். ஆராய்ச்சிக் கல்விகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் சாதகமாகும். குழந்தைகள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள்... மேலும் படிக்க

சிந்தனையில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் புது விதமான... மேலும் படிக்க

வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எந்த ஒரு செயலையும் மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.... மேலும் படிக்க

கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். சகோதரர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மனதை உறுத்திய சில... மேலும் படிக்க

எதிர்பாராத சிலரின் உதவிகளால் தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்துச் செயல்படவும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள்... மேலும் படிக்க

பயணங்கள் மூலம் மனதளவில் மாற்றங்கள் உருவாகும். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளை பார்க்கவேண்டிய சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு... மேலும் படிக்க