tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுடெல்லி, ஜூலை 6–

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ‘ அக்னிபாத் திட்டத்தில் தேர்வான அக்னி வீரர்களை, ராணுவ வீரர்கள் என கூறமுடியாத நிலை உள்ளது. ஆறு மாதங்கள் பயிற்சி தந்து, அவர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிகிறீர்கள். அவர்கள் உயிரிழந்தால் ஓய்வூதியம் கிடைக்காது. நிதி உதவியும் கிடையாது’ என, குற்றம்சாட்டினார். ஆனால் ராகுல் சொல்வதுபொய். பணியில் இறக்கநேரிட்டால் அக்னிவீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுவதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம்அளித்தார். 

 இதற்கிடையில், லூதியானாவைச் சேர்ந்த அக்னி வீரர் அஜய் என்பவர் இறந்ததற்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என, அவரது தந்தை கூறுவதைப் போன்ற வீடியோ, எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அந்தகுடும்பத்தினரை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறினார்.அப்போது நிதி வராததை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

   இதையடுத்து இழப்பீடு வழங்கப்பட்டது.பின்னர் பாதுகாப்புத்துறையின் எக்ஸ் தள பதிவில், " அக்னிவீரர் அஜய் தியாகத்துக்கு ராணுவம் மரியாதை செலுத்துகிறது. அவரது இறுதிச் சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டன. அவரது குடும்பத்தினருக்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி மேலும் ரூ.67 லட்சம் விரைவில் வழங்கப்படும்" என்று விளக்கம் அளித்தது.

 ஆனால் அஜய் தந்தை கூறுகையில், " என் மகனுக்கு 'ஹீரோ' அந்தஸ்தை ராணுவம் வழங்கவேண்டும். இழப்பீடு தந்தால் என் மகன் அஜய் திரும்ப வந்துவிடுவானா? இந்த திட்டத்தையே ரத்து செய்து பென்ஷன் மற்றும் கேன்டீன் கார்டு வழங்கவேண்டும்" என்றார். நான்குவருட வேலைக்காக என் அண்ணன் உயிரையே இழந்து விட்டார். ஒரு கோடி தருவதாக அரசு கூறியது. ஆனால் முழுத்தொகை கிடைக்கவில்லை. அரசாங்கம் எங்களுக்கு பணம் தந்துள்ளது. இந்த அக்னிவீரர் திட்டமேவேண்டாம் என்பது தான் எங்களின் கோரிக்கை என்று அஜய் தங்கை கூறினார்.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க