tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கோவில்பட்டி, செப். 7-

பா.ஜ.,வுடன் கூட்டணி தொடர்பாக, கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பழனிசாமி, அ.தி.மு.க.,வுக்கு என தன்மானம் உள்ளது. தன்மானத்தை இழக்க மாட்டோம். விமர்சனத்தை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.

அ.தி.மு.க., பொது செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று நெல்லை நேற்று வந்தார். பின்னர் கோவில்பட்டியில் அவர் அளித்த பேட்டி: பேட்டி:

  தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒட்டுமொத்த மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிபறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிகழ்வுகள் அரசுக்கு சுட்டிக்காட்டி எடுத்து செல்கிறோம்.

போலீசாருக்கு சுதந்திரம் இல்லை

. இந்த அரசு சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், போலீசாருக்கு முழு சுதந்திரம் கொடுக்காததாலும் இப்படிப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. 

இந்த அரசு மெத்தன போக்காலும், நிர்வாக திறனற்றதாலும், காவல்துறை செயல் இழந்து இருப்பதாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

கண்டிக்கத்கதக்கது

ஒரு நபர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அரசு உதவி பெறும் பள்ளியில் அந்த நிர்வாகம் அனுமதியில்லாமல் தெரிவிக்க அனுமதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. 

மாற்று திறனாளி ஒருவர் சர்ச்சைக்குரிய இந்த கருத்தை ஏன் தெரிவிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டபோது, அவரை மாற்று திறனாளி என்றும் பார்க்காமல் அவரை கொச்சை படுத்தி, இழிவு படுத்தி பேசி இருக்கிறார். அது கண்டிக்கத்தக்கது. 

(அப்போது, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தவரை அமைச்சர்களுடன் இருந்த போட்டோவை காட்டினார்).

 

முறைகேடுகள்

மதுரை ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அங்குள்ள ஊழியர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

உண்மையான அரசாக இருந்தால், அந்த வீடியோவில் வெளியான முறைகேடுகளை ஆராய்ந்து பார்த்து நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், அவர் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

 

 

அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி.,யின் தலைமுடியை பிடித்து இழுத்துள்ளனர். குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் பயமில்லாமல் ஈடுபடுகின்றனர். போலீஸ் உயர் அதிகாரிகளுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை?

 

போலீசாருக்கும் பாதுகாப்பு இல்லை. மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைதான் இந்த ஆட்சியில் உள்ளது. தமிழகத்தில் இவ்வளவு பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது.

வெள்ளை அறிக்கை

தொழில் முதலீடுகளுக்காக முதல்வர் அமெரிக்கா சென்றுள்ளார். 

ஏற்கனவே துபாய் சென்றார். ஜப்பான், சிங்கப்பூர் சென்றார். ஸ்பெயின் சென்றார். எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டார். எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்று வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கேட்டோம். 

எங்களுக்காக வெளியிட வேண்டாம். மக்கள் தெரிந்து கொள்ள வெளியிட வேண்டும். அப்போதுதான் இந்த ஆட்சியில் என்ன நடந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

ஏற்க முடியாது

* அ.தி.மு.க.,வுடன் இணக்கமாக செயல்பட விருப்புவதாக உங்களிடமிருந்து பிரிந்து போன பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறாரே?

 அவர் வந்து என்ன பண்றது. அ.தி.மு.க., தலைமையை விமர்ச்சிப்பதை ஏற்று கொள்ள முடியாது. மனசாட்சி உள்ள மனிதன் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டான். தன்மானம் உள்ள கட்சி அ.தி.மு.க., அதிகாரத்துக்கு எப்போதுமே அடிமையாக இருந்தது கிடையாது. 

எங்களுக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் செயல்படுவோம். ஜெ., பற்றி பேசினார்கள். கண்டன தீர்மானம் நிறைவேற்றினோம். அண்ணாவை விமர்சனம் செய்கிறார்கள். எப்படி ஏற்று கொள்வது?.

எங்களை இழவுபடுத்தி பேச ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 

வெற்றி, தோல்வி என்பது வேறு. ஆனால், தன்மானம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும். அப்படித்தான் எங்கள் தலைவர்கள் எங்களை வளர்த்து இருக்கிறார்கள்.

 

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ராஜலட்சுமி, பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

+++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க