tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

கரூர், ஜூலை 9–

 

நிலம் அபகரிப்பு புகார் தொடர்பான வழக்கில், இரண்டாவது முறையாக முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

கரூர் மாவட்ட, அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட பலர் மீது, வாங்கல் போலீசார், தொழில் அதிபர் பிரகாஷ் கொடுத்த புகாரின்படி, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

மேலும், கரூர் அருகே தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை சிலர் போலியான ஆவணங்கள் மூலம், கிரையம் செய்து கொண்டதாக, கரூர் மேலக் கரூர் சார் – பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரின்படி, சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை கடந்த, 25 நாட்களுக்கு மேலாக தேடி வருகின்றனர். 

 

இந்த இரு வழக்குகளில், முன் ஜாமின் கேட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனுக்கள், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. 

 

மேலும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அவரது அலுவலகம் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.

 

அப்போது, கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்யும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

 

அதற்குள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், முன் ஜாமின் பெற்று விட வேண்டும் என்ற முயற்சியில் தலைமறைவாக உள்ள, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும், முழு வீச்சில் வழக்கறிஞர்கள் துணையுடன் முயற்சி செய்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க