tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் வர முடியாது

* அதிமுக 'உள்ளே, வெளியே 'நாடகம் ஆடுகிறது

 

சென்னை, ஜூன் 27–

தமிழக சட்டசபையில் நேற்றும் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், இந்த கூட்டத்தொடர் முழுவதும் அவர்களை சஸ்பெண்ட் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேசுவதற்கு வாய்ப்பளித்தும் உள்ளே அமளியில் ஈடுவதும், வெ ளியே போவதுமாக அதிமுகவினர் மலிவான விளம்பரம் தேடுகிறார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.

தமிழக சட்டசபையில் கள்ளச்சாரயம் விவகாரம் குறித்து பேச அதிமுகவினர் அனுமதி கோரினர். கேள்வி நேரம் முடிந்த பின்னர் அனுமதிக்கப்படும் என சபாநாயகர் கூறினார். இதையடுத்து அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர்.

உள்ளே வெ ளியே..

அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசியது:

  நாட்டில் நடக்கின்ற ஒரு செயலை சட்டமன்றத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. நாங்களும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது அப்படிப்பட்ட பிரச்சனைகளை சபையில் இருந்து பேசி இருக்கிறோம். ஆனால், சபைக்கு வருவது, எதற்காக கருப்பு சட்டை அணிந்தார்களோ, அதற்கான காரணத்தை விளக்கத்தை இங்கு பேசாமல் வெளியே போய் பத்திரிக்கையாளரை சந்தித்து பேசும் செயலை தொடர்ந்து செய்கிறார்கள்.

பேச பயம்

 கள்ளக்குறிச்சி விவகாரத்தை குறித்து பேச பயந்து கொண்டு தான் உள்ளே வருவது... வெளியே போவது என உள்ளார்கள். முதலமைச்சர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி இருக்கிறார். அவர்களது குழந்தைகளின் படிப்புக்கு உதவி இருக்கிறார். இதைவிட ஒரு அரசாங்கம் என்ன செய்ய முடியும்? ஆனால், அவர்கள் ஆட்சியில் குறை சொல்லுவார்கள் என்று பயந்துதான் முதலமைச்சர் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது என பயந்து தான் உள்ளே வருவது வெளியே போவது என மலிவான விளம்பரத்திற்கு பிரதான எதிர்க்கட்சியினர் அலைகிறார்கள். 

பேரவை அலுவல்களை நடைபெறவிடாமல் இடைமறித்தும், சட்டப்பேரவை விதிகளைத் தொடர்ந்து முறையற்று பயன்படுத்துவதாலும் பேரவைக்குத் தொடர்ந்து குந்தகம் விளைவிக்கின்ற வகையில் செயல்படுவதாலும், சபாநாயகர் தொடர்ந்து எச்சரித்தும் பேரவையின் அலுவலைத் தடுத்துக் கொண்டிருக்கும், கோஷமிட்டிருந்த அதிமுக உறுப்பினர்களை சட்டப்பேரவை விதி 171 உள்விதி இரண்டின் கீழ், அதிமுக உறுப்பினர்களை பேரவை பணிகளில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

இவ்வாறு துரைமுருகன் பேசினார். 

 முதல்வர் 

இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்," கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் குறிப்பாக, அதிமுக கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து தாங்களும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் பிரச்சனையைப் பற்றி பேரவை பேச வாய்ப்பிருப்பதாக தெரிவித்தும், அதை ஏற்க மனம் இல்லாமல் வெளியில் சென்று பேசுவது என்பது இந்த பேரவை, நம்முடைய மாண்புக்கும் மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல. பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயக கடமை ஆற்றாமல் வீண் விளம்பரத்தை தேடுவதிலே முனைப்பாக உள்ளது. ஆனால், இந்த துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு இருக்கிறது. இதுதான் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் உள்ள வேறுபாடு" எனக் கூறினார்.

பின்னர் தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து சபாநாயகர், "அதிமுக உறுப்பினர்களை தற்காலிக இடைநீக்கம் செய்ய கோரிய தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை பணிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டார். 

++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க