tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

 

அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதை ஐதீகப்படி எப்படி செய்வது என்பது சிலருக்கு மட்டுமே தெரிகிறது.அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையை படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதை தீர்த்துக்கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்த போது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன் இளமைப்பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான்.ஒருநாள் காளி கோவில் ஒன்றில் அவன் வழிபட்ட போது உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமை பருவம் வந்ததும் இளவரசன் ஒருநாள் இறந்து போனான். மன்னன் அவனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளை காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்த பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள்... தவித்தாள்...தனக்கு தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு மனம் இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர் பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் அமாவாசை நாளாகும். தனக்கு அருளிய தேவியிடம் அந்த பெண் இருண்டுபோன தன் வாழ்வை ஒளிபெறச் செய்தது போலவே அமாவாசை நாட்களில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டி னாள்.மகிழ்ந்த அம்பிகை, அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையை படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது. அத்துடன் வீடுகளில் மறைந்த முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால் நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.

 

🙏🙏🙏🌹🌹🙏🙏

ராசி பலன்

பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். பணிகளில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை... மேலும் படிக்க

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பயண முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பாராத சிலரின் உதவியின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வர்த்தக பணிகளில் நிதானத்துடன்... மேலும் படிக்க

வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். எதிலும் முன் கோபம் இன்றி பொறுமையை கையாளவும். உடலில் ஒரு விதமான சோர்வுகள் மூலம் தாமதம் ஏற்படும். அரசு செயல்களில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச்... மேலும் படிக்க

வியாபாரம் நிமித்தமான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அளிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். உயரதிகாரிகளிடம் அனுசரித்துச்... மேலும் படிக்க

வியாபார பணிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் உண்டாகும். காப்பீடு பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

இழுபறியான வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பற்றிய புரிதல் மேம்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள்... மேலும் படிக்க

முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மனதை உறுத்திய பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் சேர்ப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். ஆராய்ச்சிக் கல்விகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் சாதகமாகும். குழந்தைகள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள்... மேலும் படிக்க

சிந்தனையில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் புது விதமான... மேலும் படிக்க

வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எந்த ஒரு செயலையும் மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.... மேலும் படிக்க

கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். சகோதரர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மனதை உறுத்திய சில... மேலும் படிக்க

எதிர்பாராத சிலரின் உதவிகளால் தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்துச் செயல்படவும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள்... மேலும் படிக்க

பயணங்கள் மூலம் மனதளவில் மாற்றங்கள் உருவாகும். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளை பார்க்கவேண்டிய சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு... மேலும் படிக்க