tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

புதுக்கோட்டை, செப்.8–

சினிமாவில் வடிவேலு கூறிய மாதிரி, அரசியலிலும் கால் வைக்கும் இடம் எல்லாம் கண்ணிவெடி இருக்கும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் அளித்த பேட்டி:

புதிதாக கட்சி தொடங்கியவர்களை பார்த்து திமுக உட்பட எல்லா கட்சிகளும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. யாரும் பயப்படவும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வரலாறு உண்டு. கட்சி தொடங்கிய பலர் வென்றதாக சரித்திரம் இல்லை. தோற்றதாகவும் சரித்திரம் இல்லை. அரசியலில் யாரும் எளிதாக வெற்றிபெற முடியாது.

சமீபகாலமாக இந்தியாவில் கூட்டணி ஆட்சி முறை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தனித்து ஆட்சி செய்த மோடியே இப்போது கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறார். இதற்காக 2026ம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரும் என்று கூற முடியாது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் விதத்தில், வெளிநாட்டில் இருந்து முதல்வர் வந்த பின்னர், எவ்வளவு முதலீடு வந்தது, எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்பது குறித்து அறிக்கை வெளியிடுவது தமிழக அரசின் கடமை.  

பாஜ அரசிடம் இருந்து மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜ சித்தாந்தத்தை விட்டு என்றைக்கும் பாஜவினர் விலக மாட்டார்கள். பாஜ கூறும் எல்லாவற்றுக்கும் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு சம்மதிக்க மாட்டார்கள். நினைக்கும் எல்லாவற்றையும் பாஜ நிறைவேற்ற இருவரும் விடமாட்டார்கள்.  

  வடிவேலு திரைப்படத்தில் கூறியதுபோல், சினிமா துறையிலும், அரசியல் துறையிலும் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி இருக்கும். சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர் விஜய் நன்றாக சிந்தித்தே முடிவு எடுத்திருப்பார். அவருக்கு யாரும் அறிவுரை கூற தேவையில்லை.ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம். கவர்னர் கூறுவது மட்டுமல்லால், . யார் கூறுவதும் வேதமல்ல. இருக்கும் வரை கவர்னர் பேசட்டும். நாமும் எதிர்ப்போம்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

**

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க