tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

காஞ்சிபுரம், மே 24

அரசுப் பள்ளிகளில் கற்கும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித் திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டது. புதுமைப் பெண் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலமாக, இத்திட்டத்தினால் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர் மரபினர் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளிகள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை பள்ளிகள்,வனத் துறை பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலும். இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் RTE மூலமாக 6 முதல் 8ஆம் வகுப்பு வரை தமிழக தனியார் பள்ளியில் பயின்ற மாணவியர் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றால் இத்திட்டத்தில் பயனடைய இயலும்.

ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவிகள் இருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் உதவி பெறலாம். கல்லூரி சென்று பயிலும் மாணவிகளுக்கே இந்த உதவித் தொகை வழங்கப்படும். அஞ்சல் வழிக்கல்வி அல்லது அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. வேறு நிதி உதவி பெறும் மாணவியரும் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலும் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். ஏற்கனே உயர்கல்வி சென்ற மாணவியரும், மீதமிருக்கும் ஆண்டுகளுக்கான படிப்பிற்கு இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின்கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேர்ந்த 2.73 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு, மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாணவி ஜெ.தீபா

காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 7,752 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தினால் பயனடைந்த மாணவிகளின் கருத்துக்கள் பின்வருமாறு:

பெயர்: ஜெ.தீபா, செவிலிய பயிற்சி பள்ளி, அரசு தலைமை மருத்துவமனை, காஞ்சிபுரம்.

என் பெயர் ஜெ.தீபா, நான் அரசு தலைமை மருத்துவமனை, செவிலிய பயிற்சி பள்ளியில், DGNM முதலாம் ஆண்டு செவிலிய பயிற்சி படித்து வருகிறேன். நான் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 6 மாதமாக பயனடைந்து வருகிறேன். இத்திட்டமானது நான் படிப்பதற்கு மிகவும் உதவியாக உள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் வரும் பணம் என் சொந்த செலவிற்கு மிகவும் உதவியாக உள்ளது. இத்திட்டத்தினால் செவிலிய பயிற்சியில் 55 மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தினை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவி குமுதவல்லி

பெயர்: து.குமுதவல்லி, பச்சையப்பன் கல்லூரி மாணவி, காஞ்சிபுரம்.

என் பெயர் து.குமுதவல்லி, நான் பச்சையப்பன் கல்லூரியில் படித்து வருகிறேன். புதுமைப்பெண் திட்டம் தொடங்கிய (28.08.2023) நாளிலிருந்து இத்திட்டத்தினால் நான் பயனடைந்து வருகிறேன். இத்திட்டத்தினால் மாதமாதம் பெறப்படும் ரூ.1000/- எனது கல்லூரிக்கான செலவினை பூர்த்தி செய்து கொள்கிறேன். இத்திட்டத்தினை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க