tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, மே.9-

அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் ஜூலை மாதத்தில் தொடங்கும் என்று தமிழக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பிளஸ்- 2 வகுப்பை முடித்த மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் பிளஸ்- 2 படிப்பை நிறைவு செய்து தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு-2024 நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது. இதேபோல், திருச்சி, கோவை, நாகப்பட்டினம், மதுரை, நெல்லை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியை தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தொடங்கி வைத்தார். இதில் முதலமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன், தொடக்கக் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

என்ன படிக்கலாம்?

நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் அடுத்தகட்டமாக என்ன மாதிரியான படிப்புகளை படிக்கலாம்?, என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன?, துறை சார்ந்த வேலைகளில் சேருவதற்கு என்ன படிப்புகளை தேர்வு செய்து படிக்க வேண்டும்? என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

இதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் கல்லூரிக் கனவு என்ற கையேடும் வழங்கப்பட்டன. மேலும் என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல், சட்டம், மருத்துவம் மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகள் சார்ந்த வல்லுனர்கள் அறிவுரை வழங்கினர்.

ஆடிட்டோரியத்துக்கு அருகில் மேற்சொன்ன படிப்பு களை சார்ந்த அரங்குகளும் அமைக்கப் பட்டிருந்தன. அதில் மாணவ- மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெளிவுப்பெற்றனர்.

நிகழ்ச்சியில் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது:-

தமிழ்நாட்டில் மாணவர்களை உலகை வெல்லும் சாதனை யாளர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புரட்சிகர திட்டங்களும் செயல்படுத்தப் படுகின்றன. பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.

நான் முதல்வன் திட்டம் என்பது, ஒவ்வொரு மாணவர்களுக்கும் கல்வி, தொழில்சார் கனவுகளை தொடருவதற்கு தமிழ்நாடு அரசின் அர்ப்பணிப்பாக இருந்து வருகிறது.

கல்விதான் சிறந்த முதலீடு. அதனை யாரும் எடுக்க முடியாது. இந்த முதலீடுதான் கடைசி வரை உங்களுடனேயே இருக்கும். அரசின் பலத் திட்டங்களை பயன்படுத்தி, மாணவர்கள் தங்களுடைய லட்சியங்களை அடைந்து முன்னேறுவீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் அனைவரும் விஞ்ஞானிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தொழில் முனைவோர்களாக முடியும். அதற்கேற்றாற்போல் உயர்கல்வியை பெற்று வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறுகையில், ‘உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம் இருக்கிறது. ஆனால் நம்முடைய நோக்கம் என்பது, பிளஸ்- 2 முடிக்கும் மாணவ- மாணவிகள் அனைவரையும் உயர்கல்வியில் 100 சதவீதம் சேர்ப்பதுதான். அந்த வகையில்தான் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

உயர்கல்வியில் சேராமல் இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களையும் படிக்க வைப்பதற்காக குழு அமைக்க உள்ளோம். 6 முதல் பிளஸ்- 2 வகுப்பு வரை படித்து முடிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் இருக்கிறது. மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதனால் 20 முதல் 25 சதவீதம் கூடுதலாக உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.

அதேபோல், அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்' மூலம் மாதம் ரூ.1,000 வழங்கும் பணி வருகிற ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டங்களை சரியாக கொண்டுசெல்லும்போது, கூடுதல் மாணவர் சேர்க்கை இருக்கும் என்று நம்புகிறோம்' என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க