tamilnaduepaper
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

சென்னை, ஆக. 25–

ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெறவேண்டும். கோயில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும்.

  பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2 நாட்கள் நடக்கிறது. நேற்று இந்த மாநாட்டை சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலிக்காட்சிவழியாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து 

பேசியதாவது :

‘செயல் பாபு’ என்று என்னால் அழைக்கப்படும் சேகர்பாபுவிடம், “கோயிலை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று நான் அறநிலையத் துறையை கொடுத்தேன். ஆனால், கோயிலிலேயே குடியிருக்கின்ற ஒருவர் உங்களுக்கு அமைச்சராக கிடைத்திருக்கிறார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நானும் பல நிகழ்ச்சிகளில் பங்கெற்றுள்ளேன். 

திடீர் மாநாடுஅல்ல

ஏதோ திடீரென பழனியில் மாநாடு நடத்தவில்லை. பல தரப்பட்ட பணிகளை எல்லாம் செய்து கொண்டுதான் பழனியில் இந்த மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு இந்த அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை. 

 கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத்து 355 கோயில்களில் கும்பாபிஷேகம், 8 ஆயிரத்து 436 கோயில்களில் ரூ. 3 ஆயிரத்து 776 கோடியில் திருப்பணிகள், ரூ. 5 ஆயிரத்து 577 கோடியில் 6 ஆயிரத்து 140 ஏக்கர் நிலம் மீட்பு, 756 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் என பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அந்தச் சாதனைகளுக்கு மகுடம் வைத்ததுபோல, பழனியில் நடக்கும் இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக ஆன்மீக வரலாற்றிலேயே மிகச் சிறப்பான இடத்தைப் பெறும்.

 

  பல்துறை அறிஞர்கள் பழனியில் சங்கமிக்கின்ற இந்த மாநாட்டுக்கு என்னுடைய வாழ்த்துகள். ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெறவேண்டும். கோயில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும்.

 இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வரின் பேச்சைத் தொடந்து, பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து மாநாடு அரங்­கங்­கள் திறப்பு விழா நடந்­தது. இதில், அமைச்­சர்­கள் சேகர்­பாபு, பெரி­ய­சாமி, சக்­க­ர­பாணி, திண்­டுக்­கல் எம்பி சச்­சி­தா­னந்­தம், பழனி எம்­எல்ஏ செந்­தில்­கு­மார், திரு­வா­டு­துறை, குன்­றக்­குடி, பேரூர், சிரவை, மதுரை மற்­றும் தரு­ம­பு­ரம் ஆதீ­னங்­கள் உட்­பட 15 ஆதி­னங்­கள் பங்­கேற்­ற­னர். மாநாடு நடை­பெ­றும் இடத்­தில் பிரம்­மாண்­ட­மாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள 3டி அரங்­கம், திரை­ய­ரங்கு மற்­றும் நூல­கத்தை அமைச்­சர் சேகர்­பாபு, பெரி­ய­சாமி ஆகி­யோர் பக்­தர்­கள் பார்­வைக்­குத் திறந்து வைத்­த­னர். தொடந்து மாநாடு நடை­பெ­றும் அரு­ண­கி­ரி­நா­தர் அரங்­கில் ஆதீ­னங்­கள், அமைச்­சர்­கள் சிறப்­பு­ரை­யாற்­றி­னர். நீப­தி­கள் சுப்­ர­ம­ணி­யன், புக­ழேந்தி மற்­றும் சிவ­ஞா­னம் ஆகி­யோர் மாநாட்­டில் பேசி­னர். தொடர்ந்து அத்­து­டன், மாநாடு மல­ரும் வெளி­யி­டப்­பட்­டது. 2 நாட்­கள் நடை­பெ­றும் இந்த மாநாட்­டில் ஆதீ­னங்­க­ளின் சிறப்­புரை, முரு­க­னைப் பற்­றிய பாடல்­கள், நட­னம் , நாட­கம், மங்­கல இசை என தொடர்ந்து அடுத்­த­டுத்து நிகழ்ச்­சி­கள் நடை­பெ­று­கி­றது.

இந்த 2 நாள் மாநாட்­டுக்­காக ஆயி­ரத்து 300 ஆய்­வுக் கட்­டு­ரை­கள் பல்­வேறு நபர்­க­ளால் அனுப்­பப்­பட்­டுள்ள நிலை­யில், 5 அரங்­கங்­க­ளில் இந்­தக் கட்­டு­ரை­கள் மீதான விவா­தம் நடை­பெற்­றது.

 +++

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க