tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

மதுரை ஜூன்14 மதுரையில் உள்ள

 நாட்டை காப்போம் அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் சி.ஜே . ராஜன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. இத்தேர்தல் மக்களின் விடுதலைக்கான சித்தாந்தத்தை முன் வைத்த தேர்தல்

நாட்டைக்காப்போம் அமைப்பின் சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விடுதலை பெற்ற இந்தியாவில் தனக்குரிய அடையாளமாக தேர்ந்துகொண்ட சனநாயகமும் சனநாயகம் காப்பதற்காக உருவாக்கப்பட்ட உயரிய அரசமைப்பு சட்டமும் சிதைவுறாவண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பேராவல் நடந்து முடிந்த தேர்தலில் குடிமக்களிடையேயும், குடிமைப் சமூக அமைப்புகளிடையேயும் எழுந்திருந்தது .

இந்தியாவில் திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ள மதவாதம், பெரும்பான்மை வாதம் எனும் அறமற்ற சித்தாத்தங்களால் சனநாயகம் சிதைந்து போய் விடுமோ என்ற அச்சம் குடிமக்களிடையே நிறைந்து இருந்தது. இந்த அச்சத்தை போக்கும் வண்ணம் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

சனநாயக நெறிமுறைமைகளுக்கு மாறாக, தேர்தல் சனநாயகத்தை கொச்சைப்படுத்த முயன்ற போக்கினையும், இப்போக்கிற்கு ஆளும் தலைவர்களே காரணமாய் நின்றதையும் காணமுடிந்தது. சமூகத்தின் ஒரு பகுதியினரை மத ரீதியாக ஒதுக்குவதும், அவமானப் படுத்துவதும், வடக்கு தெற்கு என்று பகுதிவாரியாக, மொழி இனவாரியாக பிளவுபடுத்துவதும் பரப்புரையின் உள்ளடக்கமாக இருந்தது. இதனைக்கண்டு உலக நாடுகளே கவலைக் கொண்டன.

இச் சூழலில் நாட்டு நலனிலும்,அதன் ஒருமைப்பாட்டிலும் அக்கறை கொண்ட குடிமை சமூக அமைப்புகள், சனநாயக சக்திகள் முன்னெடுத்த சித்தாந்தம் நடந்து முடிந்த தேர்தல் மூலம் மதவாத பாசிச சக்திகளின் விரைவான ஓட்டத்திற்கு சிறிய தடை கிட்டியதாகவும், நம்பிக்கையை தந்துள்ளதாகவும் நாட்டைக் காப்போம் அமைப்பு கருதுகிறது.

ஒற்றை மனிதரின் ஆட்சி கேள்விக்குள்ளாகி, கூட்டாட்சி மலர கிடைத்த இந்த வாய்ப்பு சனநாயகத்தின் மிகப் பெரும் வெற்றியாக பார்க்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மதவாத பாசிச சிந்தாந்தத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு தேர்தல் மூலம் மட்டும் வெற்றி கிட்டி விடாது என்பதிலும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். எனவே, தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் மக்கள் அளித்த நம்பிக்கைக்கு ஏற்ப தம் பணியினை மக்கள் மத்தியில் அவரவர் தொகுதிகளில் மக்களோடு இணைந்து தொடர வேண்டும். மக்களுக்கான திட்டங்களை நடமுறைப்படுத்த வேண்டும். மாற்றுச் சித்தாந்த நோக்கில் உருவாக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நடைமுறைப் படுத்தும் அளவிற்கு ‘இந்தியா” கூட்டணி வலுவான எதிர்கட்சியாக குடிமை சமூக அமைப்புகளோடு இணைந்து செயற்பட வேண்டும். அப்போதுதான் சனநாயகம் வலுப்படும் என கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

ராசி பலன்

வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய... மேலும் படிக்க

சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம்... மேலும் படிக்க


தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு... மேலும் படிக்க

இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.... மேலும் படிக்க

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும்.  பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க